Published:Updated:

ஐயப்ப வேஷம், பஜனை, புதுப் பூட்டு!

கில்லாடித் திருடர்கள்... பலே போலீஸ்

ஐயப்ப வேஷம், பஜனை, புதுப் பூட்டு!

கில்லாடித் திருடர்கள்... பலே போலீஸ்

Published:Updated:
##~##

பொதுவாகவே போலீ​ஸுக்கு நித்தமுமே சவா​லான நாட்கள் தான். ஆனால் நவம்பர் 4-ம் தேதி திருச்சி மாநகர போலீஸாருக்குப் பெரும் சவாலான தினமாக விடிந்தது! 

அன்று அதிகாலை... திருச்சி மலைக்கோட்டை எதிரே, போலீஸ் பூத்தின் பக்கத்தில் அமைந்துள்ள அமர் ஜூவல்லரியில் 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் திருச்சி வியாபாரிகள் மிரண்டு கிடந்தார்கள். இரண்டு மாதங்கள் கழித்து கொள்ளைக் கும்பலின் தலைவனான மோகன் சிங்கை கைது செய்த திருச்சி போலீஸார், பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி விட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐயப்ப வேஷம், பஜனை, புதுப் பூட்டு!

கொள்ளையன் பிடிபட்ட விவகாரம் குறித்துப் பேசிய காவல் துறை அதிகாரிகள், ''திருச்சி மாநகர காவல்​துறை குற்றப் பிரிவு துணை கமிஷனர் ராமையன் இந்த வழக்கை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார். கொள்ளை நடந்த தினத்தன்று, அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை திருச்சி மாநகரில் புழக்கத்தில் இருந்த அனைத்து செல்போன் எண்களைப் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டது. அதில், மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள டவரில் இருந்து எட்டு யுனிநார்செல் நம்பர்கள் தொ​டர்பு கொண்டதாகத் தெரிந்​தது. அந்த நம்பர்களைத் தேடியபோது, மும்பையில் பல்வேறு முகவரிகளைக் கொடுத்து வாங்கப்பட்டு  இருந்தது. அந்த செல் நம்பர்களுக்குத் தொடர்பு கொண்டால், அனைத்து நம்பர்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதனால் இரண்டு உதவி கமிஷனர்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சில போலீஸார்கள் அடங்கிய ஸ்பெஷல் டீம் மும்பைக்குப் பயணமானது. சிம் கார்டு வாங்க கொடுக்கப்பட்ட விலாசத்தில் உள்ளவர்கள், கொள்ளைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்று தெரிய வந்தது.

ஐயப்ப வேஷம், பஜனை, புதுப் பூட்டு!

அதை அடுத்து, அந்த சிம்களை உபயோகிக்கப் பயன்படுத்திய மொபைல் போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களை போலீஸ் வாங்கியது. இந்த எண் கொண்ட மொபைல்கள் இந்தியாவில் எந்த டவரில் ஆபரேட் ஆகிறது என்கிற தகவல்கள் செல்போன் நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்டன. சில மொபைல்கள் தொடர்பில் இல்லை. சில மொபைல்கள் ஹைதராபாத், கான்பூர், மீரட் என்ற வெவ்வேறு நகரங்களில் இயங்குவது தெரிந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் இருந்து இயங்கி வந்த ஒரு மொபைல் போனின் தொடர்புகள் 'டேப்’ செய்து கண்காணிக்கப்பட்டது. அந்த நபர் தங்கம் விற்பது தொடர்பாக பலரிடம் பேசுவதைத் தெரிந்து கொண்ட போலீஸார், குற்றவாளியைப் பிடிக்க உத்தரப்பிரதேச போலீஸாரின் உதவியை நாடினார்கள்.  

மீரட்டின் புறநகர் பகுதியான லாலாமெகமத்பூர் என்கிற இடத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்த மோகன் சிங் என்கிற நபரை ஜனவரி 13-ம் தேதி அதிகாலை சுற்றி வளைத்துப் பிடித்தது போலீஸ். அவன்

ஐயப்ப வேஷம், பஜனை, புதுப் பூட்டு!

கொடுத்த தகவலை வைத்து மீரட்டில் ஒரு நகைக் கடை அதிபரிடம் விற்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்கத்தை போலீஸார் கைப்பற்றினார்கள். ஜனவரி 15-ம்  தேதி பொங்கல் தினத்தன்று விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்ட மோகன் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டான்.

மோகன் சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல், நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் கொள்ளை அடித்துள்ளதாக வழக்குகள் உள்ளன. ஆனால், அவன் ஒரு முறைகூட போலீஸில் சிக்கியதில்லை. இப்படிப்​பட்ட சாகசக் கொள்ளைக்காரனை நாங்கள் பிடித்தது உத்தரப்பிரதேச போலீஸாருக்கு ஆச்சர்யம். இந்தக் கொள்ளையில் கான்பூரைச் சேர்ந்த பூல் சிங் என்பவன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட கும்பலும், மோகன் சிங் தலைமையில் ஏழு பேர் கொண்ட கும்பலும் ஈடுபட்டிருக்கிறது. திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களில் சில நகைக் கடைகளை ஒரு வார காலம் தங்கி இருந்து நோட்டமிட்டு, அங்கே செயல்படுத்த முடியாமல், திருச்சியை நோக்கி நகர்ந்திருக்​கிறார்கள். மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இரண்டு நாட்களாக நோட்டமிட்டு காவலாளி இல்லாத அமர் ஜூவல்லரியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதிகாலை 3.30 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் போல் வேஷம் போட்டுக்கொண்ட கொள்ளை கும்பல், அந்த நகைக் கடை வாசலை அடைத்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள். பேட்டரியால் இயங்கும் ஒரு கட்டிங் மெஷினை வைத்து கடையின் பூட்டுகளை அறுத்து இருக்கிறான் மோகன் சிங். ஷட்டரை லேசாகத் திறந்துக்கொண்டு இரண்டு பேர் மட்டும் கடைக்கு உள்ளே போய் நகைகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கின்றனர். பூட்டை அறுக்கும் சத்தமும் ஷட்டரை திறந்து மூடும் சப்தமும் வெளியே கேட்காமல் இருக்க... சப்தமாக 'ஐயப்பா... ஐயப்பா...’ என பஜனைக் கூச்சல் போட்டிருக்கிறார்கள்.

நகைகளைக் கொள்ளை அடித்த பிறகு கடைகளுக்குப் புதிய பூட்டு போடுவது மோகன் சிங் ஸ்டைல். ஏனெனில், பூட்டுப் போ​டாமல் இருந்தால் வழிபோக்கர்கள் அல்லது ரோந்து போலீஸார் மூலம் கொள்ளை சம்பவம் சீக்கிரம் தெரிந்து விடுமாம். இங்கே கொள்ளை அடித்த பிறகு, வாடகைக் கார் பிடித்து விழுப்புரம் சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் ஆந்திரா சென்று, அங்கே கொள்ளை அடித்த நகைகளை பங்கிட்டுக்கொண்டு, அனைவரும் பிரிந்து சென்று விட்டார்கள். மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க மீண்டும் வட மாநிலங்களுக்கு ஒரு டீம் போயிருக்கிறது'' என்று விளக்கமாகச் சொன்னார்கள்.

தமிழக போலீஸுக்கு ஒரு சல்யூட்!

- அ.சாதிக்பாட்சா, 'ப்ரீத்தி’ கார்த்திக்