Published:Updated:

''தஞ்சம்னு வந்தவங்கள ஜெயில்ல போடுறாங்களே..''

குமுறும் அகதிகள்

''தஞ்சம்னு வந்தவங்கள ஜெயில்ல போடுறாங்களே..''

குமுறும் அகதிகள்

Published:Updated:
##~##
''தஞ்சம்னு வந்தவங்கள ஜெயில்ல போடுறாங்களே..''

லங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என இந்திய அரசு சொல்லிக்கொண்டிருக்க, ராணுவத்தின் அட்டூழியம் தாங்காமல் அகதிகள் தஞ்சம் தேடி வருவதுமட்டும் இன்னமும் தொடர்கிறது. கடந்த 5-ம் தேதி இலங்கையில் இருந்து தமிழகம் வந்த எட்டு இலங்கைத் தமிழர்களை இந்திய கடற்படை பிடித்திருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இலங்கைத்  தமிழர்களைச் சந்தித்தோம்.

நம்மிடம் பேசிய திருக்குமரன், ''எனக்கு எட்டு வயசா இருக்கும் போதே இந்தியாவுக்கு அகதிகளாக வந்து விட்டோம். இங்கே விருதுநகர் முகாமில்தான் தங்கி இருந்தோம். அங்கு இருந்த நான், இலங்கையைச் சேர்ந்த ரதிமலர் என்ற பெண்ணை திருமணம் முடித்தேன். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் புங்குடித்தீவில் இருந்த ரதிமலரின் தாயாருக்கு

''தஞ்சம்னு வந்தவங்கள ஜெயில்ல போடுறாங்களே..''

உடல்நிலை மோசமாக இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது. நானும் இரண்டு பிள்ளைகளும் இங்கேயே இருந்து கொண்டு, எனது மனைவியை மட்டும் அனுப்பி வைத்தேன். அவள் போனதும் எனது பிள்ளைகள் அம்மாவைப் பார்க்க வேண்டும் என அழுது கொண்டே இருந்தன. அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நானும் இரண்டு பிள்ளைகளுடன் புங்குடித்தீவுக்குப் போனேன். எனது மாமியார் இறந்து போனார். எனது பிள்ளைகள் இங்கு பிறந்ததால் அவர்களுக்கு ஐ.டி கிடைப்பதில் தாமதமானது. அங்கு விலைவாசியும் ராணுவத்தின் அச்சுறுத்தலும் வாழவிடாமல் பயமுறுத்தின. புங்குடித்தீவில் வீட்டை கட்டியவர்கள் அதை விற்கக்கூட முடியாமல் அப்படியே போட்டுவிட்டு வேறெங்கோ போய் விட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு வீட்டில் கதவை மாட்டி தங்கி இருந்தோம். தமிழர்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி ராணுவத்தினர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் எந்த வீட்டிலும் சோதனை என்ற பெயரில் நுழைகிறார்கள். பெண்கள் தனியாக இருப்பது தெரிந்தால் என்ன வேண்டுமானாலும்

''தஞ்சம்னு வந்தவங்கள ஜெயில்ல போடுறாங்களே..''

செய்வார்கள். அதற்குப் பயந்து மீன் பிடித் தொழிலுக்குச் செல்பவர்கள், வீடுகளில் இருக்கும் அனைவரையும் ஒரே இடத்தில் இருக்கச் செய்துவிட்டுத்தான் போகிறார்கள்.

இன்னமும் மின்சாரம் வரவில்லை. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 90 ரூபாய். தேங்காய் 50 ரூபாயும், ஒரு கிலோ உருளைக் கிழங்கு 200 ரூபாயும், ஒரு கிலோ சாதாரண அரிசி 80 ரூபாயும், ஒரு லிட்டர் பெட்ரோல் 170 ரூபாய் என்று விலைவாசி எக்கச்சக்கமாய் ஏறிக்கிடக்கிறது.  நாள் ஒன்றுக்கு குறைந்தது 1,000 ரூபாய் இருந்தால்தான் அங்கு காலம் தள்ள முடியும் என்ற நிலை. அங்கே மானத்தோடும், உயிரோடும் வாழ்வது சிரமம் என்பதால்தான் குடும்பத்தோடு கிளம்பினோம். எங்கள் உறவினர்கள் ஜேசுதாஸன், அவரது மனைவி, பிள்ளை, நண்பர் என இன்னும் நான்கு பேர் சேர்ந்து புறப்பட்டோம்.

4-ம் தேதி இரவு 11 மணிக்கு படகைக் கிளப்பினோம். மறுநாள் காலை 9.30 மணி அளவில் கோட்டைப்பட்டிணம் அருகில் நேவிகாரர்கள் எங்களைக் கைது செய்தார்கள். இப்போது ஜெயிலில்

''தஞ்சம்னு வந்தவங்கள ஜெயில்ல போடுறாங்களே..''

போடுவதாகக் கூறுகிறார்கள். எங்களை ஒன்றாக ஜெயிலுக்குள் வைத்தால்கூட பரவாயில்லை. பிள்ளைகளை தனியே பிரிந்து கிடக்க வேண்டும் என்றால், நாங்கள் அங்கேயே செத்துப் போயிருக்கலாம்'' என்றார் சோகமாக. அவருக்கு இரண்டு குழந்தைகள்.  ரத்திகாவுக்கு ஒன்பது வயது.  நிவேதாவுக்கு  ஏழு வயது.  வழக்கை விசாரித்த நீதிபதி, பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் நுழைந்ததற்காக 15 நாட்கள் ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் விருதுநகர் முகாமில் தங்கி இருந்த திருக்குமரனின் தாயார் குமரேஸ்வரி, தகவல் அறிந்து வந்திருந்தார். ''மானத்துக்குப் பயந்துதான் இங்க வந்தோம். அங்க அத்தன கொடுமைகள் நடக்குது. வயசு கொறைஞ்ச பொண்டு புள்ளைக மானத்தோட வாழ வழியில்ல. எதுத்துக் கேள்வி கேட்க நாதியுமில்ல. சொந்த பந்தங்களை எல்லாம் கண்ணு முன்னாலயே பறிகொடுத்துட்டு தஞ்சம்னு வந்தவங்க நாங்க. என் மருமகளின் அம்மாவுக்கு ஒடம்பு சொகமில்லன்னுதான் எல்லாரும் போனாங்க. அதத்தவிர வேற எந்த தப்பும் செய்யல. தஞ்சம்னு வந்தவங்கள இப்ப ஜெயில்ல போடுறாங்களே. தயவு செஞ்சி எம் புள்ளைகள எங்கூட அனுப்பி வச்சிருங்கய்யா'' என்று அழுது புலம்பினார்.

இந்த வழக்கில் ஆஜரான தமிழின உணர்வு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரான ராஜேஷிடம் பேசினோம். ''இதுவரை அகதிகளாக வந்த யாரையும் ரிமாண்ட் செய்தது இல்லை. இம்முறை எட்டு பேரையும் ரிமாண்ட் செய்து, அதில் இரண்டு குழந்தைகளை மட்டும் அவர்களின் பாட்டியோடு அனுப்பி வைக்க இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு வரும் திங்கள், செவ்வாய்கிழமை ஜாமீன் வாங்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சொந்த மண்ணாய் தமிழகத்தை நினைப்பதால்தான் இலங்கைத் தமிழர்கள் இங்கு வருகிறார்கள். இங்கும் அவர்களுக்கு நிம்மதி இல்லையெனில் அந்தப் பாவப்பட்ட தமிழர்கள் எங்கேதான் செல்ல முடியும்?'' என்றார்.

அந்தக் கேள்வி இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது... பதில்தான் இல்லை.

- வீ.மாணிக்கவாசகம்