Published:Updated:

பலிகடா ஆக்கப்பட்டாரா வெங்கடாஜலம்?

சேலம் அ.தி.மு.க. அக்கப்போர்

பலிகடா ஆக்கப்பட்டாரா வெங்கடாஜலம்?

சேலம் அ.தி.மு.க. அக்கப்போர்

Published:Updated:
##~##
பலிகடா ஆக்கப்பட்டாரா வெங்கடாஜலம்?

சிகலாவின் குடும்பம் கூண்டோடு வெறியேற்றப் பட்டதும், 'சின்ன அம்மா சசிகலா உட்பட 14 பேரை கழகத்தை விட்டு நீக்கிய அறிக்கை, என் மனதை மிகவும் வேதனை அடைய வைத்தது. இவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள மாண்புமிகு அம்மா அவர்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன்’ என்று சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் ஏகமாய் பரபரப்பு கிளப்பியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தன்னுடைய லெட்டர்பேடை எடுத்து யாரோ இப்படிக் கடிதம் எழுதிவிட்டார்கள்’ என்று செல்வராஜ் பதறிப்போய் போலீஸுக்குப் புகார் கொடுக்கவே விவகாரம் அமுங்கிப் போனது. இந்த நேரத்தில், 'சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், சசிகலாவின் தீவிர ஆதரவாளர்தான். அவர் என்னைப் பலிகடா ஆக்கிக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். என் உள்ளக்

பலிகடா ஆக்கப்பட்டாரா வெங்கடாஜலம்?

குமுறலைக் கொட்ட வேண் டும் வாருங்கள்...’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) அழைப்பு விடுத்தார் முன்னாள் எம்.எல்.ஏ.வான வெங்கடாஜலம்.

அவரை சந்தித்தோம். ''நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த காலத் தில் இருந்தே அ.தி.மு.க-வில் இருக்கிறேன். இன்றுவரை  அம்மாவின் ஆசியோடு முழு நேரக் கட்சி பணி ஆற்றி வருகிறேன். அல்லும் பகலும் அயராது உழைத்து கட்சியில் பல பொறுப்புகளையும் பெற்று இருக்கிறேன். ஆனால் எந்தக் காரணமும் சொல்லாமல், கடந்த 5-ம் தேதி என்னைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். உடனே சேலம் மேயரிடம் போய் விளக்கம் கேட்டேன். 'எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் மாவட்டச் செயலாளர் செல்வராஜைக் கேட்டுப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார். உடனே நான் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜின் வீடு தேடி போனேன். 'சட்ட மன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்த என்னைக் கட்சியில் இருந்து என்ன காரணத்துக்காக நீக்கினீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், 'நான் உன்னைப் பற்றி எதுவும்

பலிகடா ஆக்கப்பட்டாரா வெங்கடாஜலம்?

எழுதி அனுப்பவில்லை. உன்னைக் கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. அதனால் அமைதியாக இரு. சட்டமன்றக் கூட்டத் தொடருக்காக சென்னை செல்லும் போது  அம்மாவிடம் சொல்லி மீண்டும் உன்னைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு எனக்குச் சமாதானம் ஆகவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, சேலம் நகரின் முக்கியமான 10 இடங்களில் ஃபிளெக்ஸ் அடித்து வைத்தேன். அதில் 'இறைவா... சூது வென்றது நியாயமா?’ என்று என் ஆதங்கத்தை எழுதி வைத்தேன். அதைப் பார்த்த செல்வராஜ், 'எவன்டா இந்த பேனர்களை வைச்சது. அதை எல்லாம் கிழிச்சு எறிங்கடா...’ என்று உத்தரவு போட்டிருக்கிறார். உடனே அவரின் அடியாட்கள் பேனரைக் கிழித்துவிட்டார்கள். அப்போதுதான், 'செல்வராஜ் லெட்டர்பேட்டில் சசிகலா குறித்து எழுதியது நீதான்

பலிகடா ஆக்கப்பட்டாரா வெங்கடாஜலம்?

என்று புகார் செய்யப்பட்டு இருப்பதால்தான் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள்’ என்று செல்வ ராஜ் ஆதரவாளர்கள் என்னிடம் தகவல் சொன்னார்கள்.

உண்மையில் எனக்கும் அந்தக் கடிதத் துக்கும் எந்த சம்பந்தமும் கிடையவே கிடையாது. செல்வராஜ் தப்பிக்க வேண்டும் என்பதற்காக என்னைப் பலிகடா ஆக்கி இருக்கிறார். ஆனால், அந்த லெட்டர் பேடில் இருந்தது அனைத்தும் உண்மைதான். சசிகலா குருப் போடு  சேர்ந்துகொண்டு இவர் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ராவணனுக்குக் கப்பம் கட்டி விட்டு, பணம் வாங்கிக்கொண்டு பதவிக் கொடுக்கும் கலாசாரத்தை சேலத்தில் இவர்தான் தொடங்கிவைத்தார். இவர் கட்சியில் சேர்த்தவர்களைவிட, நீக்கியவர்கள்தான் அதிகம். சேலத்தில் அ.தி.மு.க-வை இவர் அடியோடு அழிப்பதற்குள் அம்மா இவர் பதவியைப் பறித்துவிட வேண்டும். எந்தத் தவறும் செய்யாத என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜிடம் வெங்கடாஜலத்தின் புகார் குறித்துக் கேட்டோம். ''எந்த பேனர்களையும் நான் பார்க்கவே இல்லை. வெங்கடாஜலம் என்பவரை அ.தி.மு.க. கட்சித் தலைமை நீக்கிவிட்டது. அவரிடம் நாங்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வது கிடையாது. அந்த ஆதங்கத்தில் அவர் ஏதாவது பேசி இருப்பார். அவர் சொல்லும் புகார்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

கட்சித் தலைமை என்ன சொல்லப் போகிறது?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்.