Published:Updated:

பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

கோவை திருமண்டல அதிரடி

பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

கோவை திருமண்டல அதிரடி

Published:Updated:
##~##
பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

தென்னிந்திய திருச்சபையின் கோவை திருமண்டல பிஷப்பாக 10 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வந்த மாணிக்கம் துரை, கடந்த ஜனவரி 13-ம் தேதி திருச்சபையின் பிரதம பிஷப் வசந்த்குமாரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபையின் பணத்தில் சுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

3.5 கோடியைக் கையாடல் செய்துவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு! 

மாணிக்கம் துரையைப் பற்றி கோவை வட்டாரத்தில் விசாரித்தோம். ''பூர்வீகத்தில் இந்துவான மாணிக்கம் துரை, கிறிஸ்துவ மதத்துக்கு மாறி சி.எஸ்.ஐ-க்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் பெங்களூரூ கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பயின்று 'பேச்சிலர் ஆஃப் டிவைன்’ பட்டம் பெற்று பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 25 வருடங்களாக கோவையில் பணியாற்றிய இவர்,

பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

10 வருடங்களுக்கு முன்புதான் தேர்தலில் போட்டி யிட்டு வென்று பிஷப் ஆனார். சமயச் சொற்பொழிவில் கெட்டிக்காரர். இனிய குரலுடன் பாடவும் செய்வார்.

இவரது நிர்வாகத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இருந்தன. பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடங்கி, ஆசிரியர்கள் நியமனம் வரையில் எல்லாவற்றிலும் பணம் பார்த்திருக்கிறார். முதன்முதலாக மாணிக்கம் துரை மீது, 'பண விஷயங்களில் நிறைய கையாடல் செய்துள்ளார்’ என்று கோவை டி.ஐ.ஜி-யிடம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபு என்பவர் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல இடங்களில் இருந்தும் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து,

பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

'கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள சி.எஸ்.ஐ. அறக் கட்டளையில் போலி ஆவணங்களைத் தயாரித்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக’ சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிஷப் மாணிக்கம் துரை, அவர் மனைவி சூடாமணி, மாணிக்கம் துரையின் சகோதரர்கள் தனபால், மூர்த்தி மற்றும் சில சி.எஸ்.ஐ. நிர்வாகிகள் என்று 31 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சி.எஸ்.ஐ. அறக்கட்டளை உறுப்பினராக பிரகாஷ் கடந்த 2010 ஜனவரியில், 'பிஷப் மாணிக்கம் துரை சுமார் மூன்று கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டார்’ என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வேகம் எடுக்கவே மாணிக்கம் துரை தலைமறைவானார்.

உடனே, 'மாணிக்கம் துரையை பிஷப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று திருச்சபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகிகள் கூட்டம் ரேஸ் கோர்ஸில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் அவருக்கு ஆதரவாகப் பேசியவர்கள், 'பிஷப் மாணிக்கம் துரை ஆன்மிகப் பணி தொடர்பாக திருமண்டலத்துக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் தலைமறைவாக இல்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகத் தயாராக உள்ளார்’ என்று சமாளித்து வந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடந்த 23.2.2010 அன்று பிஷப் மாணிக்கம் துரை, கோவை கோர்ட்டில் சரணடைந்து தனது பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்து, நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாவத்தின் சம்பளம் பதவி நீக்கம்?

மாணிக்கம் துரை மீதான வழக்கு விவகாரங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க... திருச்சபையின் தலைமையகமாக சென்னையில் செயல்பட்டு வரும் 'சினாட்’ இந்த விவகாரங்கள் குறித்து கடந்த இரண்டரை வருடங்களாக விசாரணை நடத்தி வந்தது. முதல் கட்டமாக பிஷப் மாணிக்கம் துரையைக் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. கோவை திருமண்டல நிர்வாகக் குழுவும் கலைக்கப்பட்டு, கோவை திருமண்டல நிர்வாகத்தை சினாட் கவனித்துக் கொண்டது. இந்நிலையில்தான், 'மாணிக்கம் துரை ஊழல் புரிந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி அவர் ஒருபோதும் திருமண்டல பிஷப்பாகச் செயல்பட முடியாது’ என்று சினாட் அறிவித்துள்ளது'' என்று விலாவரியாகச் சொன்னார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாணிக்கம் துரையின் கருத்தை அறிவதற்காக தொடர்பு கொண்டோம். அவர் பதில் தராத நிலையில், சென்னையிலுள்ள அவரது வழக்கறிஞர் இம்மானுவேலைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவரும், ''வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. அதனால் நான் எதுவும் சொல்ல இய லாது'' என்றார். மாணிக்கம் துரையின் தரப்பில் கருத்து தெரிவிக்க முன்வந்தால், நாம் அதனை வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

- பி.பி.சிவசுப்ரமணியன்

படங்கள்: தி.விஜய்