Published:Updated:

''தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமல் போகும்''

காரைக்குடி போஸ்டர் கலகம்

''தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமல் போகும்''

காரைக்குடி போஸ்டர் கலகம்

Published:Updated:
##~##
''தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமல் போகும்''

முன்னாள் அமைச்சரும் தி.மு.க. இலக்கிய அணியின் மாநில துணைத் தலைவருமான தென்னவனுக்கு எதிராக காரைக்குடியில் போஸ்டர் புயல் அடிக்கிறது.  'தி.மு.க-வின் வெறிபிடித்த தொண்டர்கள்’ என்ற பெயரிலும் தி.மு.க. பிரமுகரான நாராயணன் பெயரிலும் தென்னவனைத் திட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்களை, இரவோடு இரவாகக் கிழித்து எறிந்தது தென்னவன் கோஷ்டி. அதோடு நில்லாமல், 'தி.மு.க. தலைவர்களைப் பற்றியும் தொண்டர்களைப் பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்து தி.மு.க. கட்சிக்குக் களங்கத்தை உண்டாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்றும் எதிர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாராயணனிடம் பேசினோம். ''எல்லாத்தையுமே பணம் பண்ணப் பார்க்கிறார் தென்னவன். தி.மு.க-வை இந்தப் பகுதியில் வளர்த்த சித.சிதம்பரம் காலத்தில் 10,000 ஓட்டு வித்தியாசத்தில் காரைக்குடி நகராட்சியைக் கைப்பற்றிய தி.மு.க., இப்போது 10,000 ஓட்டு வித்தியாசத்தில் தோத்துப் போயிருக்குன்னா அதுக்குக் காரணம் தென்னவன். ஜான் பீட்டர், ஆவுடையப்பன் போன்றவர்களுக்கு கவுன்சிலர் ஸீட் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனா, அவங்க சுயேச்சையா நின்று ஜெயிச்சுட்டாங்க. நகரச் செய லாளர் மருமகனுக்கே கெஞ்சிக் கூத்தாடித்தான் ஸீட் வாங்குனாங்க. காசு கொடுத்தாத்தான் அவர்கிட்ட எந்தக் காரியமும் நடக்கும். இனியும் தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமப் போயிரும். அதனால்தான் இப்படி போஸ்டர் ஒட்டுனோம். நகரச் செயலாளர் துரை.கணேசனும் எங்க கூடத்தான் இருந்தார். ஆனா, அவரோட பதவியை பறிச்சிருவோம்னு மிரட்டின தால, ராவோடு ராவா அவர் பல்டி அடிச்சிட்டார். கட்சிக்காக உழைத்துவிட்டு இப்போது ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கும் கழகத் தோழர்களை ஒன்று சேர்த்து காரைக்குடி தி.மு.க-வை தென்னவனிடமிருந்து மீட்டு எடுப்பதுதான் இனி எங்களின் வேலை'' என்று கொந்தளித்தார்.

''தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமல் போகும்''

''நீங்கள் அ.தி.மு.க-வுக்கு போக இருப் பதால்தான் இப்படி போஸ்டர் ஒட்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?'' என்று கேட்டோம்.

''தென்னவனை சிவகங்கையை விட்டு துரத்திவிட்டு கட்சியைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கும் நாங்கள் ஏன் அ.தி.மு.க-வுக்குப் போகணும்?'' என்று கேட்டார்.

''தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமல் போகும்''

அப்போது கவுன்சிலர் ஜான் பீட்டர், ''முன்னாள் தி.மு.க. வட்டப் பிரதிநிதியான என்னைப் பார்த்து, 'நீ எல்லாம் கட்சியில இருக்கியா?’னு ஏளனமா கேட்கிறார் தென்னவன். நகரச் செய லாளர் எவ்வளவோ சொல்லியும் எனக்கு ஸீட் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டார்'' என்று வருத்தப்பட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய கட்டுகுடி இளங்கோ, ''காரைக்குடி தி.மு.க-வுல காசு இருந்தால்தான் எதுவுமே நடக்கும். என்னோட நண்பர் ராஜேந்திரனுக்கு கவுன்சிலர் ஸீட் குடுக்குறதா வாக்குறுதி குடுத்திருந்த தென்னவன், கடைசி நேரத்துல வேற ஆளுக்கு மாத்திவிட்டுட்டார்'' என்று பொங்கினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தென்னவனின் பதில் என்ன? ''வட்டச் செயலாளர் களுக்கு ஸீட் கொடுக்க

''தென்னவனை நம்பினால் கட்சி அட்ரஸ் இல்லாமல் போகும்''

வேண்டி இருந்தது. அதனால்தான் ஜான் பீட்ட ருக்கும் ராஜேந்திரனுக்கும் ஸீட் குடுக்க முடியலை. நான் பணம் வாங்குவதாகச் சொல்பவர்கள்,  யாரிடம் பணம் வாங்கினேன் என்பதையும் சொல்லணும். வார்டை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்க வேண்டி வந்ததால் ஆவுடையப் பனுக்கு ஸீட் கொடுக்க முடிய வில்லை. அவருக்கு ஸீட் கொடுத்தால் ரெண்டு லட்சம் தருவதாக நாராயணன் என்னிடம் பேரம் பேசினாரே. காசுக்கு ஆசைப்பட்டு இருந் தால் அவருக்கு ஸீட் கொடுத்துருப்பேனே. நாராயணன் சிபாரிசு செய்த மூன்று பேருக்கு ஸீட் கொடுத்தோம். மூன்று பேருமே மூன்றாவது இடத் துக்கு தள்ளப்பட்டார்கள்.

கட்டுகுடி இளங்கோ, 5-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயிக்க வைப்பதற்காக டம்மியான கேன்டிடேட் ஒருவருக்கு தி.மு.க-வில் ஸீட் கொடுக்கச் சொன்னார். சத்தியமூர்த்தி, சுப.தங்கவேலன் மூலமாக எல்லாம் எனக்கு பிரஷர் கொடுத்தார்கள். அதற்கு எல்லாம் நான் மடங்காமல் வாய்ஸ் உள்ள லெட்சுமணனை அங்கே நிறுத்தி ஜெயிக்க வைத்தேன். 'நான் தி.மு.க-வும் இல்லை, அ.தி.மு.க-வும் இல்லை. கள்ளர் பேரவை; சசிகலாவுக்குச் சொந்தக்காரன்’ என்று சொல்லி கான்ட்ராக்ட் கேட்கும் நாராயணன், தன்னை வெறிபிடித்த தி.மு.க. தொண்டன் என பிரகடனப்படுத்துவது காமெடியாகத்தான் இருக்கிறது. தனக்கு மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக முறைப்படி அறிவிப்பு வரணும்னு நாராயணன் சொன்னார். 'செய்வோம்’ என்று சொல்லி இருந்தேன். ரவுடி லிஸ்ட்டில் இருந்த அவரது பெயரை எஸ்.பி-யிடம் பேசி நீக்க வைத்தேன். இதை எல்லாம்தான் கட்சிக் காரனுக்கு நான் செய்த துரோகம்னு அவர் சொல்றார் போலிருக்கு'' என்றார்.

நகர தி.மு.க. செயலாளரான துரை.கணேசனிடம் பேசினோம். ''என்னுடைய பதவியை யாராலும் பறிக்க முடியாது. யாருடைய மிரட்டலுக்கும் நான் பயப்படுறவனும் இல்லை. எனக்கும் அந்த போஸ் டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்தான் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்றார். இது குறித்துப் பேசும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனோ, ''ரெண்டு தரப்பும் புகார் குடுத்துருக்கு. விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார்.

'காய்த்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள். காய்ந்த மரத்தில் கல்லை வீசி வி¬ளையாடிக் கொண்டு இருக்கிறது காரைக்குடி தி.மு.க.

  - குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்