Published:Updated:

பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?

தென் மாவட்டங்களில் கலவரப் புயல்

பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?

தென் மாவட்டங்களில் கலவரப் புயல்

Published:Updated:
##~##
பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?

சுபதி பாண்டியன் படுகொலை சம்பவத்துக்குப் பதிலடி கொடுக் கும் வகையில் ஒரு கொலை நடந்துவிடவே, சாதிக் கலவரம் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள், தென் மாவட்ட மக்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கடந்த 11-ம் தேதி திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் பதற்றம் உருவானது. அவரது சொந்த ஊரான அலங்காரத்தட்டு கிராமத்துக்கு உடலைக் கொண்டு வந்தபோது தூத்துக்குடி நகரத்தில் சில வணிக நிறு வனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

அத்துடன், பேருந்துகள் மீது கல்வீச்சு, குறிப்பிட்ட சில தலைவர் களின் படங்கள், சிலைகளுக்கு அவமதிப்பு சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில், நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தில் ஸ்டீபன் ராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதுதான், பொது மக்களை அச்சம் அடைய வைத்திருக்கிறது.

பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?
பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?

இந்தக் கொலை சம்பவத்தை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ''ராஜவல்லி புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வந்தார். சிறு வயதிலேயே கூலிப்படையை சேர்ந்த சிலரின் சகவாசம் கிடைத்ததால் அவர்களுடன் சேர்ந்து அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டார். 1999-ல் நெல்லை அருகே நடந்த ஒரு கொலை வழக்கில் ஸ்டீபன் ராஜுக்கு தொடர்பு உண்டு.

அதன் பிறகு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் சிவசுப்பிரமணியன் என்பவரைக் கொலை செய்த வழக்கிலும் இவர் சிக்கினார். செட்டிகுளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டோபர், சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர் பெயர் இருந்தது. இது தவிர வேறுசில கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது  நிலுவையில் இருக்கிறது. எதிரிகளால் ஆபத்து இருப்பதை உணர்ந்த ஸ்டீபன் ராஜ், கேரளாவிலும்

பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?

சென்னையிலுமாக நாட்களைக் கழித்துவந்தார். தற்போது பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இறைச்சி வாங்குவதற்காக வெளியே வந்த அவரை, ஒரு கும்பல் கொலை செய்துவிட்டது'' என்று சொன்னார்.  

மகனைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்த ஸ்டீபன்ராஜின் தாய் பாக்கியம் அம்மாளிடம் பேசினோம். ''ஊருக்குள்ள பதற்றமா இருந்ததால் பொங்கலுக்கு வந்த புள்ளைய வெளியே போக விடாம வீட்டிலேயே வச்சிருந்தேன். 16-ம் தேதி காலைல, 'பயப்படாதீங்கம்மா.. நான் ஆட்டுக் கறி வாங்கிட்டு வந்துருதேன். கறி வச்சிக் குடுங்க.. சாப்பிடணும்’னு சொல்லிட்டுக் கிளம்பினான். மறுபடி அவனைப் பொணமாத்தான் பார்த்தேன்...'' என்று கேவியவர், ''அவனுக்கு 30 வயசு ஆகிடுச்சு. பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க ஆசைப்பட்டேன். அதுக்குள்ள எந்த பாவிகளோ எம்புள்ளைய இப்படிப் பண்ணிட்டாங்களே.. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா பொங்கலுக்கு அவனைக் கூப்பிட்டு இருக்கவே மாட்டேன்'' என்று கதறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் பிடித்து இருக்கி றார்கள். பிடிபட்ட நிர்மல், ரூபன் ஆகிய இருவரும்,  ''பசுபதி பாண்டியன் கொலையால்

பசுபதி பாண்டியனுக்காக நடந்த கொலையா?

எங்களுக்கு மன உளைச்சல் எற்பட்டது. கொலையாளி யார் என்பதை ரகசியமாய் விசாரித்தோம். சம்பவ தினத்தில் ஸ்டீபன் ராஜ் திண்டுக்கல்லில் இருந்துள்ளான். அதனால் அவன் மீது சந்தேகம் வந்தது.

மேலும்,  திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் முருகன் வெட்டிக் கொல்லப் பட்டார். இப்படியே போனால் எங்கள் மீது பயம் இல்லாமல் போய்விடும் என்று நினைத்தோம். அந்த சமயம் ஸ்டீபன் ராஜ் ஊருக்கு வந்தான். அவனைக் கூட்டிச் சென்று மது வாங்கிக் கொடுத்து விசாரித் தோம். அவன் தெனாவெட்டாகப் பதில் பேசியதால் கொலை செய்தோம்'' என பதற்றமே இல்லாமல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்களாம்.

இது பற்றி நெல்லை மாவட்ட எஸ்.பி-யான விஜயேந்திர பிதரியிடம் கேட்டதற்கு, ''இந்த சம்பவம் நடந்ததும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரையும் ஒரே நாளில் கைது செஞ்சிருக்கோம். இந்தக் கொலையைச் செய் தவர்களுக்கும்  ஸ்டீபன் ராஜுக்கும்  ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது. ஸ்டீபன்ராஜை இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சுடலை மாடசாமி கோவிலுக்கு அழைத்ததும், 'தெரிந்த வர்கள்தானே...’ என்கிற துணிச்சலில் போயிருக்கிறார். அங்கே தகராறு ஏற்பட்டு அவரை வெட்டி இருக்கிறார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடிய போதிலும், அவரால் முடிய வில்லை. பழைய தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கிறதே தவிர பசுபதி பாண்டியன் கொலைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை'' என்று திட்டவட்டமாக மறுத்தார்.

கொலையான ஸ்டீபன் ராஜ் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்ததை அறிந்து அவரது நண்பர்கள் பலரும் குவிந்தனர். அவர்களிடம் பேசியபோது, ''தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார், செட்டிகுளம் ராஜ் ஆகியோ ருக்கு நெருக்கமாக  இருந்தவர் இந்த ஸ்டீபன் ராஜ். அதனாலேயே இவரைக் கொலை செஞ்சிருக்காங்க. பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிவாங்கத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. ஆனால் போலீஸார் திட்டமிட்டு மறைக்கிறாங்க'' என்று குமுறினார்கள்.    

போலீஸார் உஷாராக இல்லை என்றால் மீண்டும் மோதல் நிகழ்வதைத் தடுக்க முடியாது.!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்