Published:Updated:

சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக ரூபாய் 48,038 செலவாகியுள்ளது. மேலும், தலா 150 சூட்கேஸ் மற்றும் பேனாக்கள் வாங்கப்பட்டுள்ளன. பேனாவுக்கு ரூபாய் 14,112 செலவாகியுள்ளது. சூட்கேஸ் வாங்கியதற்கு ரூபாய் 2 லட்சத்து 8 ஆயிரத்து 350 செலவாகியுள்ளது.

சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக ரூபாய் 48,038 செலவாகியுள்ளது. மேலும், தலா 150 சூட்கேஸ் மற்றும் பேனாக்கள் வாங்கப்பட்டுள்ளன. பேனாவுக்கு ரூபாய் 14,112 செலவாகியுள்ளது. சூட்கேஸ் வாங்கியதற்கு ரூபாய் 2 லட்சத்து 8 ஆயிரத்து 350 செலவாகியுள்ளது.

Published:Updated:
சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமலேயே மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. குடிநீர் இணைப்பு தொடங்கி குப்பை வரி வரை அனைத்துக்கும் உள்ளாட்சி அமைப்புகள்தான் பொறுப்பு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  "இப்போது தேர்தல் நடத்துகிறோம்… அப்போது தேர்தல் நடத்துகிறோம்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநிலத் தேர்தல் ஆணையம் சம்பிரதாயத்துக்காக ஏதாவது ஒன்றைச் சொல்லிவருகிறது.

சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

"அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் துறையில் கொள்ளையடிப்பதற்காகத் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிவருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சி பட்ஜெட் கடந்த மார்ச் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையாளரும் தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத், பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பொதுவாக, சூட்கேஸ் எடுத்துவந்து பட்ஜெட் தாக்கல் செய்வார்கள். ஆனால், கோவை மாநகராட்சி பட்ஜெட்டில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு சூட்கேஸ் பரிசாக வழங்கப்பட்டது. நேர்மையான பத்திரிகையாளர்கள் அந்த சூட்கேஸை வாங்கவில்லை என்றாலும், மாநகராட்சியின் இந்தச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, நம் விகடன் இணையதளத்தில் செய்தியும் வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, சூட்கேஸ் வழங்கியது உட்பட, பட்ஜெட்டுக்கான செலவினம் குறித்து கோவை மாநகராட்சியிடம் சமூக ஆர்வலர் தியாகராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.

சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

அதில்,' LG media works' மூலம் ரோஷன், ஆர்.வி.ஆர் மார்க்கெட்டிங் ஆகியவற்றிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக 48,038 ரூபாய் செலவாகியுள்ளது. மேலும், தலா 150 சூட்கேஸ் மற்றும் பேனாக்கள் வாங்கப்பட்டுள்ளன. பேனாவுக்கு 14,112  ரூபாய் செலவாகியுள்ளது. சூட்கேஸ் வாங்கியதற்கு ரூ. 2,08,350 செலவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து, சூட்கேஸ் ஒன்று ரூ.1,389-க்கு வாங்கப்பட்டுள்ளது. அதேபோல, பேனா ஒன்று ரூ.94-க்கு வாங்கப்பட்டுள்ளது. 'இதற்கு முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முறையே தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கெனத் தனி உத்தரவு எதுவும் பெறப்படவில்லை' என்று மாநகராட்சி தரப்பில் பதிலளித்துள்ளனர். பட்ஜெட் நிகழ்ச்சி நடந்ததே மொத்தம் அரை மணி நேரம்தான். அதிலும், மாநகராட்சி சொல்லும் அளவுக்கு அங்கு செய்தியாளர்கள் இல்லாத நிலையில், இதற்காக ஏன் 2,70,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன், "இது தவறான முன்னுதாரணம். செய்தியாளர்களுக்கு எதற்காக பரிசு வழங்க வேண்டும்? அதுவும், 10 நிமிடம் நடக்கும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு செலவு செய்யவேண்டிய அவசியமே இல்லை. மாநகராட்சி விதிகளின்படி, 20,000 ரூபாய்க்கு மேல் ஆகும் செலவினங்களைக் காசோலை மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும்.  மேலும், பெரிய செலவினங்களைக் கையாளும்போது, மாநகராட்சி ஆணையாளரின் பெயரில் வாங்கப்பட வேண்டும். ஆனால், இதில் எந்த முறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தனியார் நிறுவனம் ஒன்று மாநகராட்சிக்கு வாங்கித் தந்ததாகக் கூறுகின்றனர். இந்த சூட்கேஸ்களை மாநகராட்சி ஊழியர்களுக்கும் வழங்கியதாகவும் சொல்கின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, மக்கள் வரிப்பணத்தை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

சூட்கேஸ் 2 லட்சம்... பேனா 14,000... கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்த அதிர்ச்சி ஆர்.டி.ஐ

இதுகுறித்து மாநகராட்சி உதவி ஆணையாளரும் பொதுத்தகவல் அலுவலருமான சரவணன், "கடந்த காலங்களில் பேக் வழங்கினோம். இந்த ஆண்டு சூட்கேஸ் வழங்கினோம். பேகைவிட குறைந்தவிலையில்தான் சூட்கேஸ் வாங்கப்பட்டுள்ளது. பி.ஆர்.ஓ கேட்ட பட்டியலின்படி சூட்கேஸ் வாங்கினோம். எங்களது ஊழியர்களுக்கும் சூட்கேஸ் வழங்கியிருக்கிறோம். அவுட் சோர்ஸிங் மூலம் வாங்கினோம். அந்த நிறுவனம்தான் நேரடிக் கொள்முதலில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான், ரசீதில் எதுவும் குறிப்பிடவில்லை. அவுட் சோர்ஸிங் செய்த நிறுவனத்துக்கு நாங்கள் காசோலை மூலமாகத்தான் பரிவர்த்தனை செய்தோம்” என்றார்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், "இதற்கு முன் பேக் வழங்கினார்கள்.  அதற்கும் சூட்கேஸுக்கும் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால்தான், சூட்கேஸ் வழங்கினோம். மேலும், கடந்த காலங்களில் மன்ற உறுப்பினர்கள், செய்தியாளர்கள் என்று அனைவருக்கும் விருந்துவைத்தனர். இந்த முறை அதையெல்லாம் தவிர்த்துவிட்டோம். எனவே, கடந்த காலங்களைவிட இந்தமுறை செலவும் குறைந்துள்ளது" என்றார்.

கடந்த முறையைவிட இந்த முறை குறைந்தசெலவு என்ற சமாளிப்பையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அடிப்படை வசதிகளுக்கே அவதிப்படும் சமூகத்தில், இதுபோன்ற செலவினங்கள் அநாவசியம்தான் என்பதை அதிகாரிகள் எப்போது உணரப்போகிறார்கள்!