Published:Updated:

தொடை நடுங்கின ஆள்தானே நீ..

ராமதாஸை விளாசும் வேல்முருகன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தொடை நடுங்கின ஆள்தானே நீ..

'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’ என்ற பெயரில், அன்புமணி ராமதாஸ் கூட்டம் நடத்திய அதே இடத்தில், மூன்று வார இடைவெளிக்குப் பிறகு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூட்டம் நடத்தியதில்... ரணகளமாகி விட்டது தர்மபுரி. 

கூட்டத்தில் முதலில் பேசியவர் சிவகுமார். பா.ம.க-வில் இருந்து விலகி வேல்முருகன் கட்சியில் சேர்ந்திருக்கும் சிவகுமார், பா.ம.க-வை யும், ராமதாஸையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார். ஓரமாக நின்று கொண்டிருந்த பா.ம.க. தொண்டர்கள் டென்ஷனாகி, கூட்டத்துக்குள் புகுந்து நாற்காலிகளை நொறுக்கி... பேனர்களைக் கிழித்து எரிந்தனர். காத்திருந்த போலீஸ் என்ட்ரி கொடுத்து பா.ம.க-வினரை அள்ளிக் கொண்டு போனது. அதற்குப் பிறகு கூட்டத்தில் நடந்ததைக் கேட்கவா வேண்டும்..? நாக்கையே சவுக்காக மாற்றி விளாசித் தள்ளி விட்டார்கள்.

தொடை நடுங்கின ஆள்தானே நீ..

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான காவேரி சூடாக வந்து மைக் பிடித்தார். ''பொதுவா நிறைய பெண் பிள்ளைகளைப் பெத்துக்கிட்ட பெற்றோர் ஒரு காரியம் பண்ணுவாங்க. முதல்

தொடை நடுங்கின ஆள்தானே நீ..

மகளை வரன் பார்க்க மாப்பிள்ளை வரும்போது, மத்த பொண்ணுங்களை வீட்டில் நடமாட விடமாட்டாங்க. ஏன்னா... மூத்த பொண்ணைவிட இளைய பொண்ணு அழகா இருந்து, 'அந்தப் பொண்ணை கட்டிக்கிறேன்’னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயப்படுவாங்க. அதுமாதிரி தன் மகன் கொம்புமணியின் (அன்புமணியைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்) மக்குத்தனம் வெளியில் தெரிஞ்சுடக்கூடாதுன்னு பதறுகிறார் ராமதாஸ்.

'நெற்றிக்கண்’ படத்தில் ரஜினி போட்டிருக்கும் கண்ணாடிக்கு ஸ்கேன் பண்ணும் சக்தி இருப்பதாகச் சொல்வார்கள். ராமதாஸ் போட்டிருப்பதும் அப்படி ஒரு கண்ணாடிதான். தன் கட்சிக்கு வருபவனின் சட்டை பாக்கெட்டை மட்டுமல்ல அவனது பூர்வீகச் சொத்துக்களையும் ஸ்கேன் செய்யக்கூடியது அவரது கண்ணாடி. வசதி படைச் சவன்னு தெரிஞ்சாலே, அவனை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி மொத்தத்தையும் கறந்துடுவார் அந்த டாக்டர்.

போற இடத்துல எல்லாம் மரங்களை காக்கப் பிறந்த மகான் மாதிரியே தன்னைக் காட்டிக்குவார் ராமதாஸ். அந்த மரத்தை வச்சே அவருக்கு ஒரு அறிவுரை சொல்றேன். பனை மர மடல் ஓலைகளைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிற குருத்து ஓலையும்... அடுத்த சில மாசத்திலேயே மடல் பரப்பி பழுத்து கீழே விழுந்து விடும். பா.ம.க-வின் வளர்ச்சிக்கு உதவின எல்லோரையும் ஏளனப்படுத்திட்டு இன்றைக்கு பழுத்து விழுந்திருக்கு பா.ம.க-ங்கிற அந்தக் குருத்து ஓலை. தன் கட்சி  படுத்துக்கிடக்கும் இந்த நிலையிலாவது ராமதாஸுக்கு மன மாற்றம் வரணும். இனியாவது அடுத்தவனை அழிக்கும் திட்டத்தைக் கைவிட்டுட்டு, சுருட்டிய கோடிகளை வெச்சுக்கிட்டு நிம்மதியா வாழ்ந்தா அவருக்கு நல்லது. இல்லை என்றால் எப்படி பதிலடி கொடுப்பது என்று எங்களுக்கும் தெரியும்'' என்று சீறினார்.

தொடை நடுங்கின ஆள்தானே நீ..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பேசிய வேல் முருகன், ''திராவிடக் கட்சியினரை சகட்டுமேனிக்குத் திட்டுவது... கலைஞரை இனத்துரோகி என்று சொல்வது... ஜெயலலிதாவை இளநீர் வித்தவள் என்று கிண்டல் செய்வது என்று எல்லாமே செய்துவிட்டு, தேர்தல் சமயத்தில் என்னைப் போன்றவர்களை அனுப்பி கூட்டணி பேசச் சொல்வார். மகனுக்கு மந்திரி பதவி கேட்டு தூது விடுவார். நீங்க சொல்றது எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு இத்தனை நாளா இருந்தோம்.

ஆனா, முத்துக்குமார் இறுதி ஊர்வலத்துல கலந்துக் கிட்ட என்னை, நாயைவிட அசிங்கமா திட்டின ஆள் அவர் தானே. முத்துக்குமார் மாதிரி ஆட்களின் தியாகத்தைவிட கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்துல, 'வேல்முருகா.. வேறு யாரும் நம்மை சேர்த்துக்குற மாதிரி தெரியலை. விஜயகாந்தையாவது பார்த்து நீ பேசுப்பா’ என்று தொடை நடுங்கின ஆள்தானே.

வீரப்பனுக்கும் அவரது குடும்பத்துக்கும் அவர் செஞ்ச தூரோகங்களை நாடு அறியும். இப்போ எந்த தைரியத்துல மேடைக்கு மேடை வீரப்பன் போட்டோவையும் பெயரையும் பயன்படுத்துற? இந்தக் கேள்வியை வெகு விரைவில் சகோதரி முத்துலட்சுமியே எங்க கட்சி மேடைகளில் நின்னு கேட்கப் போறாங்க.

உங்களுக்காக  சினிமாக்காரர்களை எல்லாம் எதிர்த்தோம், அடிச்சோம். ஆனா சொரணையே இல்லாமல் அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைக்க மொத்த நடிகர், நடிகை வீட்டுக்கும் போய் பல்லிளிச்சு போஸ் கொடுத்தது யார்?

உங்கள் முகமூடியை கிழிப்பதுதான் எங்கள் கட்சியோட முதல் வேலை. அதை  இனி ஒவ்வொரு மேடையிலும் பார்க்கத்தானே போகிறீர்கள். அதே நேரத்துல எங்களைச் சீண்டிப் பார்க்கணும்னு நினைச்சா.. அடிக்கு அடி, உதைக்கு உதைதான்!'' என்று ரத்தத்தை சூடேற்றிப் பேச்சை முடித்தார்.

ஆஹா... ஆரம்பமாயிடுச்சுப்பா!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு