Published:Updated:

விடியல் தருமா விலையில்லா காலணி?

ஏக்கத்தில் அருந்ததி இன மக்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
விடியல் தருமா விலையில்லா காலணி?

ள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலணி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், அருந்ததி இன மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு, கிடப்பில் போடப்பட்ட இலவசக் காலணி திட்டம், ஜெயலலிதா ஆட்சியில் விலையில்லா காலணி வழங்கும் திட்டம் என்று மீண்டும் உயிர் பெறப்போகிறது. ஆனால் இந்தத் திட்டத்தால் எங்களுக்குப் பயன் இல்லையே என்று வருந்துகிறார்கள், அருந்ததி இன மக்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு காலணி தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நலவாரியத்தின் முன்னாள் தலைவருமான வலசை இரவிச்சந்திரன், ''கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வந்த

விடியல் தருமா விலையில்லா காலணி?

பழங்கால வரலாற்றில் அருந்ததி இன மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பாசனத்துக்கு மின்சாரம் பயன்படுத்தாத அந்தக் காலகட்டத்தில், கிணற் றில் இருந்து நீர் இறைக்க பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலால் தயாரிக்கப்பட்ட சால் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சால் உருவாக்குவதிலும் பழுதடைந்தால் தைத்துத் தரவும் அருந்ததி மக்கள்தான் தேவைப்படுவார்கள்.

ஆனால், கடன் உதவியோடு மானிய விலையில் மின் மோட் டார் பம்புசெட் வாங்க அரசு உதவி செய்து ஊக்குவிக்கவே, விவசாயிகள் சால் மூலம் நீர் இறைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார்கள். அதன்பின்புதான், விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த அருந்ததி இன மக்கள் நகர்ப்

விடியல் தருமா விலையில்லா காலணி?

புறத்துக்கு நகர்ந்து, செருப்பு தயாரிப்பதைப் பிரதானமாகச் செய்துவந்தார்கள். வட மாவட்டங்களான திருவண் ணாமலை, வேலூர், காஞ்சி புரம், சென்னையில் ஏராளமான அருந்ததி இன மக்கள் ஏழ்மை நிலையில் வாடுகிறார்கள். இப்போது, பெரும்பாலோர் தோல் செருப்புகளைத் தயாரித்து மொத்த வியாபாரிகளுக்கும் சில்லறை வியாபாரி களுக்கும் விற்பனை செய்து, அதில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். எங்கள் சமுதாய தொழிற்சங்கத் தலைவர்களின் முயற்சி காரணமாக, தோல் பொருள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காக சென்னையில் பெரம்பூர் லெதர் ஒர்க்ஸ் கம்பெனி ஆபரேட்டிவ் சொஸைட்டி மற்றும் மாலு கம்பெனி ஆகிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டன. இதனால், தோல் பொருள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கால ணிகள் தயாரிப்பதோடு, பேருந்து நடத்துனர்களுக்கு தோல் பைகளும், காவல் துறையினருக்கு ஷூ, பெல்ட் போன்ற பொருட் களையும் தயாரித்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்து பலன் பெற்றனர்.

தற்போது, கதர் கிராம கைத்தொழில் வாரியத்தின் மூலமாக அம்பத்தூர் லெதர் ஒர்க் ஷாப்பில் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் காவல் துறையினருக்குத் தேவையான தோல் பைகள், காலணிகள், ஷூக்கள், பெல்ட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் தொழிலையே நம்பி வாழும் அருந்ததி இன மக்கள் முழுமையான வேலை வாய்ப்பு இன்றி வறுமையில் உழன்று வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். கொண்டுவந்த பள்ளிக் குழந்தை களுக்கான இலவச காலணி வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டமாக செயல்படுத்த ஆணையிட்டிருப்பது எங்கள் நெஞ்சில் பால் வார்க்கும் செய்தியாக இருக்கிறது. அதேநேரம், இயந்திரங்களைக் கொண்டு காலணிகள் தயாரிக்கும் பெரு நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகி நசிந்து கிடக்கும் அருந்ததி இனத்

விடியல் தருமா விலையில்லா காலணி?

தொழிலாளர்களுக்கு விலையில்லா காலணிகள் தயாரிக்கும் பணியை வழங்கினால், பல லட்சம் அருந்ததி இனக் குடும்பங்கள் நல்வாழ்வு பெறும்'' என்றார் நம்பிக்கை ததும்ப.

காலணி தோல் பொருள் தயாரிப்போர் மற்றும் தோல் பதனிடுவோர் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளரான ராணி, ''தமிழகத்தில் மூன்று லட்சத்துக்கும் மேலான அருந்ததி இன மக்கள் தோல் பொருளில் காலணிகள் தயாரிக்கும் கைவினைத் தொழில் செய்து வருகின்றனர். குடிசைகளிலும் சாலை ஓரங்களிலும் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வரும் எங்கள் மக்கள் சரியான தொழில் வாய்ப்பின்றி வறுமையில் அல்லல்படுகின்றனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலை ஓரங்களில் செருப்புத் தைக்கும் எங்கள் அருந்ததி இன மக்களுக்குப் பணிக்கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. கைவினைத் தோல் பொருட்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் வாங்க நிதிஉதவியும் அரசால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த வசதிகள் வழங்கப் படவில்லை. பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவை யான இலவசக் காலணிகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதால், கைவினைக் காலணிகள் கொள்முதல் செய்வதும் நிறுத்தப்பட்டது. இதனால், அருந்ததி இன மக்கள் வாழ்வாதாரமே மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிவிட்டது.

தோல்பொருள் கைவினைப் பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய ஆணை பிறப் பித்தால் வறுமைக் கோட் டுக்குக் கீழே உள்ள பல லட் சம் அருந்ததி இன ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும்!'' என்றார்.

அருந்ததி இன மக்களின் கோரிக்கை குறித்து கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சர் செந்தூர் பாண்டியனிடம் பேசியபோது, ''தொழில் நலிந்து கிடக்கும் அருந்ததி இன மக்களின் காலணித் தொழில் மேம்பாடு குறித்து நிச்சயம் ஆலோசிக்கப்படும். தோல் பொருட்களால் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களின் சங்கங்கத்தினரின் தயாரிப்புகள் தரமானவையாகவும் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யத் தகுதியும் இருப்பின், அவர்களின் கோரிக்கையை அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்'' என்றார்.

விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் அருந்ததி இன மக்களின் வாழ்வையும் மேம்படுத் தட்டுமே!

- ரியாஸ்                                                                                                                  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு