Published:Updated:

நடுரோட்டில் பிடிபட்ட சுரேஷ்!

சேலம் பரபரப்பு

பிரீமியம் ஸ்டோரி
##~##
நடுரோட்டில் பிடிபட்ட சுரேஷ்!

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவை நோக்கி வந்தது, தி.மு.க. கொடி கட்டிய கார் ஒன்று. திடீரென, ரவுண்டானாவின் நான்கு பக்கங்களில் இருந்தும் சீறிப் பாய்ந்து வந்த ஜீப்கள்... அந்தக் காரை வழிமறித்து நின்றன. ஜீப்பில் இருந்து திடுதிடுவென இறங்கிய போலீஸ்காரர்கள் காருக்குள் இருந்தவரை வெளியே இழுத்து... ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கிளம்பினார்கள். அவர் களால் பிடிக்கப்பட்டவர், வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்.   

என்ன காரணத்துக்காக அதிரடியாக சுரேஷ் கைது செய்யப்பட்டார் என்பதை ஆரம்பத்தில் போலீஸ் சொல்லவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பிறகே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சுரேஷை கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டதாக அறிவித்தது, சேலம் மாநகர காவல் துறை.

நடுரோட்டில் பிடிபட்ட சுரேஷ்!

குண்டர் சட்டம் பாயும் அளவுக்கு பாரப்பட்டி சுரேஷின் பராக்கிரமங்கள் என்னவாம்? தி.மு.க-வின் நடுநிலை யாளர்கள் சிலரிடம் பேசினோம். ''தி.மு.க. ஆட்சி இருந்தபோது சுரேஷ் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் வந்தன. அடாவடி, ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்து என்று எதையும் விட்டு வைக்கவில்லை என்று சொன்னார்கள். அப்போது இவருடைய தலையீடு இல்லாமல் சேலத்தில் எந்த ஒரு நிலத்தையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலைமை கூட இருந்தது.  அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த 30 குடும்பங்களை காலி செய்த விவகாரத்தில் சுரேசுக்குப் பெரிய டேமேஜ்.  இது எல்லாத்தையும் விட கொடுமையான விஷயம், தாசநாயக்கன்பட்டியில் நடந்த ஆறு கொலைகள்தான். ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் குடும்பத்தைத் துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள். அந்தக் கொலையில் சுரேஷ§க்குத் தொடர்பு இருப்பதாக, தி.மு.க. ஆட்சியிலேயே கைது செய்யப் பட்டார். தற்போது ஜாமீனில்தான் வெளியே இருக்கிறார். அதே போல கோயமுத்தூர் ஜூவல்லரி உரிமை யாளர்களுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதும், அதன் உரிமையாளர்களை மிரட்டிய வழக்கும் சுரேஷ் மீது இருக்கிறது. இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி 26-ம் தேதி வீரபாண்டி ஆறுமுகத்தின் பிறந்த நாள் விழா நடந்தது. அந்த விழாவில் வழக்கம் போலவே சுரேஷ் கொஞ்சம் ஓவராத்தான் நடந்து கொண்டார். அதுதான் ஆளும் கட்சிக்காரங்களோட கண்ணை உறுத்தி இருக்கும்னு நினைக்கிறோம்'' என்றுசொல்கிறார்கள்.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் மாஹாளி யிடம் பேசினோம். ''பாரப்பட்டி சுரேஷ் மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் அனைத்திலும் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாகவே தெரி கிறது. எனவே, சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து இருக்கிறோம். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமோ... அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. காவல்துறை தன் கடமையை செய்திருக்கிறது'' என்றார்.

- வீ.கே.ரமேஷ்

படம்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு