Published:Updated:

''சமூக விரோதிகளை களம் இறக்குகிறார்கள்..''

குமுறும் கூடங்குளம் போராட்டக் குழுவினர்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''சமூக விரோதிகளை களம் இறக்குகிறார்கள்..''

'கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது’ என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி திரியைக் கொளுத்திப் போட்டதால் கொதித்து போயிருக்கும் அணு உலைக்கு எதிரான அமைப்பினர், அணு உலைக்கு ஆதரவானவர்கள் குறித்த அதிரடி தகவல்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புகிறார்கள். 

நம்மிடம் பேசிய கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைவர் சுப.உதயகுமாரன், ''அணு உலைக்கு எதிராக மக்களே தன் எழுச்சியுடன் போராடி வருகிறார்கள். அதற்கு ஆதரவு நாளுக்குநாள் பெருகுகிறது. இதனைப் பார்த்து பயந்து போன மத்திய அரசு உள் துறை அதிகாரிகள் மூலம் சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களை மட்டும் குறிவைத்து ஆய்வு நடத்தினார்கள். இதன் மூலம் சிறுபான்மை மக்களை தீவிரவாதிகள் போன்று சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்.

''சமூக விரோதிகளை களம் இறக்குகிறார்கள்..''

எங்களின் போராட்டத்துக்கான பணத்தை மக்களே கொடுக்கிறார்கள். சிலர் பொருட்களாக வாங்கித்

''சமூக விரோதிகளை களம் இறக்குகிறார்கள்..''

தருகிறார்கள். அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துறோம். மக்கள் பணம் மற்றும் பொருட்களுக்கான முறையான கணக்குகள் எங்களிடம் இருக்கிறது.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு எவரிடமும் அந்தக் கணக்குகளை காட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

கிறிஸ்துவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்தை மட்டும் 'சோதனை’ என்கிற பெயரில் அசிங்கப்படுத்திய மத்திய அரசுக்கு காங்கிரஸ்காரர்கள் பலர் தொண்டு நிறுவனம் நடத்துவது தெரியாதா? அவங்க கட்சி சார்பாக ராஜீவ் அறக்கட்டளை நடத்தப்படுகிறதுதே. அதுக்கு ஆண்டுக்கு எவ்வளவு வெளி நாட்டு நிதி வருதுன்னு மக்களிடம் வெளிப்படையாக சொல்லத் தயாரா?

நாங்கள் நடத்தும் நியாயமான போராட் டத்துக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வர்றாங்க. கடந்த வாரத்தில் பெருமணல் கிராமத்தில் இருந்து ராதாபுரம் வரை அணு உலை எதிர்ப்பு நடைப்பயணம் வைத்திருந்தோம். அதில் 10,000 பேர் பங்கேற்றாங்க. ஆனால், மத்திய அரசின் ஏற்பாட்டில் லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான போராட்டங்களுக்கு 50 பேர்கூட சேருவது இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்திருக்கும் மத்திய அரசு,  தவறான மனிதர்களை வைத்து  எங்களை மிரட்டுகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகப் பேசி வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான சத்தியசீலன் மீது சென்னை_ அம்பத்தூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கு. அவர் அந்தக் காவல் நிலையத்தின் போக்கிரிகள் லிஸ்டில் முதலாவது இடத்தில்

(1/2008) இருக்கிறார். அவர் மூலமாக போராடும் மக்களிடன் சாதி ரீதியான பிளவை ஏற்படுத்த முயற்சி செய் றாங்க.

''சமூக விரோதிகளை களம் இறக்குகிறார்கள்..''

இதுதவிர, நில மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மத்திய அரசு முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருக்கும் இன்னொரு நபரிடம் அணு உலைக்கு

''சமூக விரோதிகளை களம் இறக்குகிறார்கள்..''

ஆதரவான போராட்டத்தை நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கு. அவர்களும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக எதையும் செய்யத் துணிகிறார்கள். சமூக விரோதிகளை களம் இறக்கி போராட்டத்தை நசுக்கப் பார்க்கும் மத்திய அரசு, நியாயமான கோரிக்கைக்காக போராடும் எங்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்க முயற்சிப்பதுதான் வேதனை'' என்றார் காட்டமாக.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கூடங்குளம் அணு மின் நிலைய ஆதரவு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான டி.கே.சத்தியசீலனிடம் கேட்டோம். ''நான் பேசியதாக பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் 110-வது பிரிவின் கீழ் ஒரு வழக்கு இருந்தது. அதுவும் கைவிடப்பட்டது. இது தவிர, சிறிது காலத்துக்கு முன்பு காங்கிரஸ் கொடிக் கம்பத்தை இடித்ததைக் கண்டித்து சாலை மறியல் செய்ததற்காக 209(தீ) பிரிவில் ஒரு வழக்கை போலீஸார் பதிவு செஞ்சிருக்காங்க. மற்றபடி வழக்குகள் எதுவும் என் மீது இல்லை. ரவுடிகள் பட்டியலிலும் என் பெயர் கிடையாது. பொது வாழக்கைக்கு வந்துட்டாலே வழக்குகள் வரத்தானே செய்யும்? என்னைப் பற்றி அம்பத்தூர் காவல் நிலையத்தில் கேட்டீங்கன்னா... எந்த வழக்கும் இல்லைங்கறதை தெரிஞ்சுக்குவீங்க'' என்றார்.

அம்பத்தூர் காவல் துறை வட்டாரத்தில் பேசினோம். ''சத்தியசீலன் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கேஸ் இருப்பது உண்மைதான். சீட்டிங் சம்பந்தமான வழக்கு எதுவும் கிடையாது. அடிதடி, சண்டை தொடர்பான வழக்குகள் உள்ளன. போக்கிரிகள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதும் உண்மைதான்'' என்றார்கள்.

இது தொடர்பாக வழக்கறிஞர் காமராஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பி தகவல்களை கேட்டார். ''சத்தியசீலன் மீது 5 வழக்குகள் இருக்கின்றன'' என்று அம்பத்தூர் போலீஸார் சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது எதுவுமே  சத்யசீலனுக்குத் தெரியாதோ என்னவோ!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு