Published:Updated:

கோயில் சொத்தை மீட்கவேண்டும்!

கிடுகிடுக்கும் கச்சத்தீவு விவகாரம்

கோயில் சொத்தை மீட்கவேண்டும்!

கிடுகிடுக்கும் கச்சத்தீவு விவகாரம்

Published:Updated:
##~##
கோயில் சொத்தை மீட்கவேண்டும்!

'கச்சத்தீவை திரும்பப் பெறுவதன் மூலமே தமிழக மீனவர்கள் இழந்த உரிமையை மீட்க முடியும். எனவே, கச்சத்தீவை திரும்பப் பெறும்வரை ஓய மாட்டேன்’ என்று, சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சூளுரை செய்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நேரத்தில்தான், 'கச்சத்தீவு ராமேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமானது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நானே நீதிமன் றத்தை நாடுவேன்’ என்று பகீர் கிளப்பி உள்ளார் சிவபக்தர் ஒருவர்.

அவர், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணை அமைப்பான திருக்கோவில் - திருமடங்கள் பாது காப்புப் பிரிவின் மாநில இணை அமைப்பாளர் பக்ஷி சிவராஜன். ''ராமேஸ்வரம், தலைமன்னார், நெடுந்தீவு போன்றவை மணல் திட்டுப் பகுதிகள் ஆகும். வரலாற்று அடிப்படையில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்து தமிழர்கள் அங்கு வாழ்ந்த அடையாளங்கள்

கோயில் சொத்தை மீட்கவேண்டும்!

இருக்கின்றன. மணிநாகதீபம், மணிப்புரம், மணிபல்லபம் என்பன ராமேஸ்வரம் தீவின் முற்பெயர்கள் ஆகும். இவற்றுடன் இலங் கையின் கட்டுப்பாட்டில் உள்ள காரைத்தீவு, புங்கடித்தீவு, அணலைத்தீவு, வேலனை, மண்டைத் தீவு, நைநார் தீவு, நெடுந்தீவு ஆகிய பகுதிகள், 'தென்முதுகோடி’ என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.

இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் இடையே சுமூக உறவு இருந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் சோழ மாமன்னன் பராந்தகச் சோழன் முதன்முதலாக படையெடுப்பு நடத்தி, இலங்கையின் வடக்குப் பகுதியை கைப்பற்றி இருக் கிறார். ராஜேந்திர சோழன் காலம் வரை நீடித்த இந்த நிலை குலோத்துங்கச் சோழன் காலத்தில் வீழ்ச்சி அடைந்தது.

பின்னர், இலங்கையின் வடக்குப் பகுதி சிங்கை ஆரிய அரசர்கள் கைகளுக்குப் போனது. அதன்பின் போர்த்துக்கீசியர் படையெடுப்பால், மன்னார் தீவு அவர்களின் ஆளுகைக்கு மாறியது. மதமாற்றத்தில் ஈடுபட்ட போர்த்துக்கீசியர்கள் கச்சத்தீவில் இருந்த இரட்டைத்தாளை முனியசாமி கோயிலை அகற்றி விட்டனர். அவர்களிடம் இருந்து விஜயநகரப் பேரரசால் மீட்கப்பட்ட கச்சத்தீவு, வித்தலராயர் என்ற தளபதியின் வழியாக ராமநாதபுரம் சமஸ் தானத்துக்குக் கிடைத்தது. அதன்பின் ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி, கச்சத்தீவு உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை ராமநாதசுவாமி கோயிலுக்கு தானசாஸ்திரம் செய்து கொடுத்தார். அதனால், இந்தப் பகுதியில் நடந்த முத்துக்குளிப்பு மூலம் கிடைத்த வருமானம் கோயி லுக்குக் கிடைத்தது. இதன்பின் ஆட்சியில் அமர்ந்த பிரிட்டிஷ் அரசு 1880-ம் ஆண்டு, இதனை தடுத்து நிறுத்தி, கோயில் வருமானத்தையும் தன்வசம் எடுத்துக் கொண்டது. மேலும் கச்சத்தீவை ராமநாதபுரம் சமஸ்தான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.

கோயில் சொத்தை மீட்கவேண்டும்!

சுதந்திரத்துக்குப்பின், ஜமீன் ஒழிப்புச் சட்டத் தின் கீழ், ராமநாதபுரம் சமஸ் தானத்திடம் இருந்து கச்சத்தீவை எடுத்துக் கொண்ட இந்திய அரசு, அதை, கால்நடைத்துறை மூலம் அரசு புறம்போக்கு நிலமாக பதிவு செய்தது (புல.எண் 1250). அந்த நிலப்பகுதியை 1974-ல் இந்திய - இலங்கை எல்லை ஒப்பந் தத்தின்போது இலங்கைக்கு இந்தியா கொடுத்தது. இப்படித்தான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் நிலப்பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கை வசமாகிப்போனது.

கோயிலுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலத்தை சமஸ்தானத்துக்குச் சொந்தமானதாக மாற்றியது முதல் தவறு. பிறகு, அதை இன்னொரு நாட்டுக்குத் தாரை வார்த்தது அதைவிடத் தவறு. 1959-ல் இயற்றப் பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலை கட்டளைகள் சட்டத்தின்படி காலவரையறைச் சட்டம், கோயில் நிலங்களுக்குப் பொருந்தாது. இலங்கைக்குக் கச்சத்தீவு கொடுக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இப்போதாவது, இந்து அறநிலையத் துறையின் மூலம் நேரடியாக வழக்குத் தொடர்ந்து கச்சத்தீவை மீட்கலாம்.

இதுதவிர, ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான பலகோடி மதிப்புள்ள கட்டடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. கந்தர்மடம், கோபே, இருபாலை, அராலி தெற்கு, புதுவயல் பகுதிகளில் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் உள்ளன. இதுபற்றிய குறிப்புகள் கோயில் ஆவணங்களில் உள்ளன. இப்போது வரை இந்த நிலங்களின் மூலம் கோயிலுக்கு எந்த வருவாயும் வரவில்லை. கோயில் சொத்துக்களை மீட்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அந்த நிலங் களை மீட்கவேண்டும். அல்லது அந்த நிலங்களை இலங்கை அரசுக்கு ஒப்படைத்துவிட்டு, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். இதன் மூலம் இழந்த கச்சத்தீவைத் திரும்ப பெறுவதுடன் காலங்காலமாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நம் மீனவ சகோதரர்கள் நிம்மதியாக தொழிலும் செய்யலாம்.

நான் கூறும் இந்த இருவழிகளில் ஒன்றை அரசு மேற்கொள்ள வேண் டும். அப்படி செய்யாத நிலையில் ராமநாதசுவாமி கோயிலின் பக்தன் என்ற முறையில் எனக்கு உள்ள வழிபாட்டு உரிமையின் அடிப் படையில் கச்சத்தீவை மீட்க நேரடி யாக சட்டநடவடிக்கைகளில் இறங்கு வேன்'' என்றார்.

இலங்கையில் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் இருக்கிறதா என்று கோயிலின் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கேட்டோம். ''இலங்கை யாழ்ப்பாணத்தில் கோயிலுக்குச் சொந்தமான எட்டு கட்டடங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் அளவீடு மற்றும் மதிப்பு குறித்து தகவல்கள் இல்லை. ஒரே ஒரு கட்டடத்தில் இருந்து மட்டும் வாடகை வந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

ஆட்சியாளர்களால் பறிபோன கோயில் சொத்து, ஆண்டவன் பெயரில் மீட்கப்பட்டால் மகிழ்ச்சி தான்!

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism