Published:Updated:

''ரூ 125 கோடி என்னங்க ஆச்சு?''

புதுவை கலாட்டா

''ரூ 125 கோடி என்னங்க ஆச்சு?''

புதுவை கலாட்டா

Published:Updated:
##~##
''ரூ 125 கோடி என்னங்க ஆச்சு?''

காங்கிரஸ் கட்சியுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி இணையுமா, இணையாதா என்று கடந்த ஓர் ஆண்டாகவே நிலவி வந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்தே விட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குதல், உயர்த்தப்பட்ட வாட் வரியைக் குறைத்தல், பணிநீக்கம் செய்யப்பட்ட  4,000 ஊழியர்களுக்கு பணி வழங்குதல், விவசாயி களின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்தல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, புதுச்சேரி அரசுக்கு எதிராக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரணி என்பதால், ஒவ்வொரு தொகுதி தலை வர்களும் தங்கள் ஆட்கள் பலத்தைக் காட்டவே, கூட்டம் எக்குத்தப்பாகத் திரண்டது. முதல்வர் ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடியில் இருந்து, ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் திரளான மக்கள் கலந்துகொண்டு ரங்கசாமிக்கு எதிராக கோஷம் இட்டது கூடுதல் ஆச்சரியம்.

''ரூ 125 கோடி என்னங்க ஆச்சு?''

பேரணிக்கான காரணம் குறித்து முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் பேசிய போது, ''தேர்த லுக்கு முன்னால் வீட்டுக்கு ஒருத்தருக்கு அரசு வேலைன்னு சொன்னார். ஆனா, ஆட்சிக்கு வந்த உடனே, வீட்டுக்கு ஒருத்தரை வேலையை விட்டு அனுப்பிட்டார். காரணம் கேட்டா காசு இல்லைன்னு சொல்றார். ஆனா, அவங்க ஏரியா ஆட்களுக்கு வேலை கொடுக்க மட்டும் காசு இருக்குதா?

மத்தியில் இருந்து கொடுத்த புயல் நிவாரணத்தொகை 125 கோடி என்னங்க ஆச்சு? இது பத்தாதுன்னு வரியை வேற உயர்த்திட்டார். வரிபாக்கி வச்சிருந்த பெட்ரோல் பங்க்குகளை காங்கிரஸ் ஆட்சியில் மூடினோம், அதை  திறந்துட்டாங்க. மக்களுக்குச் சேர வேண்டிய காசை வாங்கி என்ன செய்தீங்க? பாக்கெட்டுல போட்டீங்களா, இல்ல சேலத்துக்கு அனுப்பிட்டீங்களா. மேல இருக்குற சாமியைக் கேக்குறதா, இந்த சாமியைக் (ரங்கசாமி) கேக்குறதா, இல்லன்னா அந்த சாமியைக் (சேலம், அப்பா பைத்தியம் சாமி ) கேக்குறதா?'' என்று ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.

''ரூ 125 கோடி என்னங்க ஆச்சு?''

அடுத்துப் பேசிய மத்திய அமைச்சர் நாராயண சாமி, ''ஆளும் கட்சியைப் பத்தி ஆறு மாசத்துக்கு விமர்சனம் செய்ய மாட்டோம்னு சொன்னோம்.  அவங்க கட்சி ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு. இப்ப இருக்கிற கேவலமான சூழ்நிலையில வெற்றிவிழா கொண்டாடணுமா? 4,000 குடும்பத்தோட வயித்துல அடிச்சிட்டு இப்படி ஒரு விழா வேணுமா? வேலை போனதால ஒருத்தர் தூக்குப் போட்டு இறந்துட்டார். பலருடைய வீட்டுல கல் யாணம் நின்னுடுச்சு. பல குடும்பங்களில் பிரச்னை ஏற்பட்டு பிரிஞ்சு போயிட்டாங்க.  எந்த

மந்திரியைக் கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்றது கிடையாது. எல்லாமே முதல்வரைத் தான்

''ரூ 125 கோடி என்னங்க ஆச்சு?''

கேக்கணும்னு சொல்றாங்க. வரும் சட்டமன்றக் கூட்டத் தொடர்ல, 4,000 பேருக்கும் திரும்ப வேலை தருவதாக அறிவிக்கணும். இல் லைன்னா சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம். எல்லாரும் மக்கள் ஆட்சி, மக்கள் முதல்வர்ன்னு சொல்றாங்க. ஆனா இவர் மக்கள் முதல்வரா... 'மா’க்கள் முதல்வரான்னு தெரியலை. காலையில ரெண்டு மணி நேரம், மாலையில ரெண்டு மணி நேரம் டென்னிஸ் விளையாட மட்டும் எப்படியோ நேரம் கிடைச்சுடுது. இங்க இருக்குற மந்திரிகள் எல்லாம் கொலு பொம்மைங்க மாறி சிலையாத்தான் இருக்காங்க. ஏதாவது மீறிப் பேசுனா அவன் ரெட் லைட்டைப் புடுங்கி டுவாங்க.

கடந்த அஞ்சு நாளுல மட்டும் புதுச்சேரியில 10-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்திருக்கு. ஆனா, எட்டு கேஸுக்கு எப்.ஐ.ஆரே பதிவு பண்ணலை. காரணம் கேட்டா, பயம்னு சொல்றாங்க. இப்படிப் பயப்படுறவங்க சட்டையைக் கழட்டி வச்சிட்டு, வீட்டுக்குப் போயிடணும்.

ஒரு மத்திய அமைச்சர் எப்படி பேரணியில கலந்துக்கலாம்னு கேட்டாங்க. கட்சித் தலைமை சொன் னாலும் சொல்லலைன்னாலும் புதுச்சேரி மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நான் போராடுவேன். மக்களுக்குத் துரோகம் செய்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் இடம் இல்லை. உள்துறை அமைச்சரவை அதிகாரிகளை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வேன்'' என்று ஆவேசம் காட்டினார்.

காங்கிரஸ் கட்சிக்குப் பதில் அளிப்பது போல் என்.ஆர். காங்கிரஸின் ஆண்டு விழாவில் பேசினார் முதல்வர் ரங்கசாமி.

''கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் மட்டும் இரண்டு அமைச்சர்கள் 1,400 பேரை வேலைக்கு வைத் திருந்தார்கள். நான்கு பேர் வேலை செய்ய வேண்டிய பாப்ஸ்கோ காய்கறிக் கடையில் 16 பேர் இருக்கின்றனர். மத்திய அமைச்சர், '125 கோடி எந்த சாமிகிட்ட போச்சு?’னு கேக்குறார். இதற்கு அந்த சாமிதான் (நாராய ணசாமி) பதில் சொல்லணும். புயல் நிவாரணமா 29 கோடி கொடுத்திருக்காங்க. மீதி 96 கோடியை மத்திய அரசின் கொடையில் இருந்து குறைத்துவிட்டார்கள். இதுவரை நாராயணசாமி, தனது எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து புதுவைக்கு ஏதாவது செய்துள்ளாரா?'' என்று 'அதிசயமாக’ வாய் திறந்துப் பேசினார்.

அடப் போங்க சாமி!

- நா.இள.அறவாழி

படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism