Published:Updated:

''பெரிய ஆளுன்னா என்கிட்ட மோதிப் பாரு..''

விஜயகாந்த்துக்கு ராமராஜன் சவால்

''பெரிய ஆளுன்னா என்கிட்ட மோதிப் பாரு..''

விஜயகாந்த்துக்கு ராமராஜன் சவால்

Published:Updated:
##~##
''பெரிய ஆளுன்னா என்கிட்ட மோதிப் பாரு..''

ட்டசபையில் நாக்கைத் துருத்தி ஆவேசம் காட்டிய விஜயகாந்த்துக்கு, ''ஆம்பளைக்கி ஆம்பளை... வா, மோதிப் பார்ப்போம்'' என்று நடிகர் ராம​ராஜன் சவால்விடவே அரசியல் மேடைகள்  சூடாகிக் கிடக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர் நடிகர் ராமராஜன். சமீபத்தில் உடல் நலம் தேறி​​யவர், ’மேதை’ படத்தை வெளியிட்ட கையோடு அ.தி.மு.க. கூட்டங்களில் மீண்டும் மேடை ஏறத் தொடங்கி விட்டார். கடந்த 5-ம் தேதி, புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்​பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தினார்,  மாவட்டச் செயலாளராக பதவி ஏற்று இருக்கும், விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர்.

இந்தக் கூட்டத்தில் மைக்கைப் பிடித்த ராமராஜன் பேசிய பேச்சு பலே தமாஷாக இருந்தது!

''அம்மாவின் நலத்திட்டங்களை தினந்தோறும் நீங்கள் பார்த்து வருகிறீர்கள். வாக்குறுதிகள் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்கிற அக்கறை வேண்டுமல்லவா? அந்த அக்கறை புரட்சித் தலைவி அம்மாவிடம் மட்டும்தான் இருக்கிறது.

''பெரிய ஆளுன்னா என்கிட்ட மோதிப் பாரு..''

விஜயகாந்த் ஒரு கட்சி நடத்துறார். நீங்க எல்லாருமே டி.வி-யில பார்த்து இருப்பீங்க, அவர் எவ்வளவு தரங்கெட்டுப் போனாருங்கிறதை. அங்க என்ன சினிமா ஷூட்டிங்கா நடக்குது. ஏன் நாங்கெல்லாம் நடிக்கலையா. நாங்க வேட்டிய மடிச்சிக் கட்டலையா... நாக்கை மடிச்சிப் பேசலையா. தமிழகத்துல ஏழு கோடி பேர் இருக்​காங்க. அதுல 234 பேர்தான் சட்ட​சபைக்குப் போக முடியும். அதுல அவரும் ஒரு ஆளுய்யா. அங்க போய் நாக்கைத் துருத்தி, அம்மாவை எதிர்த்துப் பேசுற? எவ்வளவு கேவலமா இருக்கு!  எங்க அம்மாவுக்கு சவால்விட அவர் யார்? நான் சவால் விடுறேன். நான் சாதாரண கட்சித் தொண்டன். நான் விடுறேன்யா... அவரும் நடிகன், நானும் நடிகன். அவரும் மதுரை. நானும் மதுரை.

புரட்சித்தலைவி அம்மா ஆசியால் 'கரகாட்டக்காரன்’ 500 நாள் மதுரையில ஓடுச்சி.  ஆனா விஜயகாந்த்....

''பெரிய ஆளுன்னா என்கிட்ட மோதிப் பாரு..''

ஒரு 100 நாள் படம் கொடுத்திருப்பியா? கொடுக்க முடியுமா உன்னால? என்ன அரசியல் பண்ற? அவரு கட்சி ஆரம்பிச்சு ஒரு படம் ஓடுச்சா? இதுல டைரக்ஷன் வேற. டைரக்ஷனைப் பத்தி என்னய்யா தெரியும் உங்களுக்கு? அவரு ஹீரோவா நடிக்க வந்தப்ப நான் அசிஸ்டென்ட் டைரக்டர். நான் 40 படத்துக்கு உதவி இயக்குனரா இருந்து டைரக்டரா ஆனவன்யா. கிளாப்னா என்னன்னு தெரியாத நீங்கள் எல்லாம் டைரக்டரா? ரெண்டரை மணி நேரப் படத்துக்கு மக்களை உக்கார வைக்க உங்களுக்குத் தகுதி இல்லை. அவரு போய் ஆட்சியைப் புடிக்கிறேன்னு சொல்றதைக் கேட்டா காமெடியாத்தான் இருக்கு. அவரு மக்களை இன்னைக்கு ஏமாத்தலாம், என்னைக்கும் ஏமாத்த முடியாது. அவரு  என்ன வேணும்னாலும் பேசட்​டும். மவனே... புரட்சித்தலைவர் பேரைச் சொல்​லாம உள்ளே வந்து உட்கார். அவரு கருணாநிதி​யோட கைக்கூலி. அது எனக்கும் தெரியும்... இங்க உக்காந்து இருக்குற எல்லாருக்கும் தெரியும்.

நாங்க எல்லாம் புரட்சித்தலைவரோட இருந்த போட்டோவை இன்னைக்கும் காட்டுறோம். ஆனால், விஜயகாந்தால் ஒரு போட்டோவைக் காட்ட முடியுமா? அவரு எம்.ஜி.ஆர். ரசிகனா? இல்லை, கருணாநிதி ரசிகன். புரட்சிகலைஞர்ன்னு... பேர் வச்சிருக்க. யாரை ஏமாத்தப் பாக்குறே.  கறுப்பு எம்.ஜி.ஆர்.னு சொல்ற? எம்.ஜி.ஆர் என்ன கறுப்பாவா இருப்பார்? அங்கே போய் உக்காந்துகிட்டு சவால் விடுற...

நீங்க கட்சி ஆரம்பிச்சு சட்டசபைக்குப் போனப்ப, துணைக்கு ஒருத்தனையாவது கூட்டிக்​கிட்டுப் போக முடிஞ்சுதா? 234 தொகுதியில போட்டி​போட்டு ஒத்தை ஆளாப் போனவர் பின்னால இன்னைக்கு 28 பேரை அனுப்பி வச்சிருக்காங்கன்னா அது அம்மாவாலதான். இதை ஒப்புக்கிறதுல அவருக்கு என்ன கவுரவக் குறைச்சல்?  இப்ப, 'நேத்து நான் ஒண்ணு. இன்னைக்கி 29. நாளைக்கு....’ன்னு கேக்குறார். நான் சொல்றேன், நேத்து நீ ஒண்ணு... இன்னைக்கி 29, நாளைக்கி நீ ஜீரோ...'' என்று அழுத்திச் சொல்ல... ஒட்டுமொத்தக் கூட்டமும் கைதட்டி விசில் அடித்தது. உடனே உற்சாக​மானவர், ''நாக்கை மடிக்கவா உன்னைய ஓட்டுப் போட்டு சட்டசபைக்கு அனுப்பி வச்சாங்க. எவ்வளவு கேவலம். ஆம்பளைக்கு ஆம்பளை மோதிப் பாரு. நீ மதுரையில பெரிய ஆளுன்னா... என்கிட்ட மோதிப் பாரு.  ஒரு பெண் முதலமைச்சரா இருக்கும்​போது என்ன நாக்கை மடிச்சிப் பேசுறது. நீ என்ன தரங்கெட்டுப் போயிட்டியா...'' என ஏகத்துக்கும் வெடித்துத் தள்ளினார்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் விஜயபாஸ்கருக்கு போயஸ் கார்டனில்  இருந்து அழைப்பு வந்ததாம். 'இதே போலப் பண்ணுங்க... பாத்துக்கிடலாம்’ என்று மேலிடத்தில் இருந்து பாராட்டு கிடைத்ததாம். குஷியில் இருக்கிறார் மனுஷன்.

- வீ.மாணிக்கவாசகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism