Published:Updated:

போலி சான்றிதழ்... பேராசிரியர் நியமனங்கள்

பெரியார் பல்கலைக்கழகத்தில் குளறுபடியா?

போலி சான்றிதழ்... பேராசிரியர் நியமனங்கள்

பெரியார் பல்கலைக்கழகத்தில் குளறுபடியா?

Published:Updated:
##~##
போலி சான்றிதழ்... பேராசிரியர் நியமனங்கள்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் 1.8.2010 இதழில், 'பரீட்சை எழுத வேண்டாம், பணம் தந்தா மார்க்!’ என்ற கட்டுரையும், அடுத்து 'ஜெராக்ஸ் பேப்பரைத் திருத்தி மார்க்’ என்ற தலைப்பில் 11.8.2010 இதழிலும் எழுதி இருந் தோம். அடுத்து, 'பணம் கொடுத்தால் முனைவர் பட்டம்’ என்ற கட்டுரையை 03.7.2011 இதழில் எழுதியிருந்தோம். இப்போது போலிச்சான்றிதழ் வாங்கிக் கொண்டு இணை பேராசிரியர் பணியில் ஆட்கள் நியமிக்கப்படுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபற்றி, பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு முன்னாள் ஆணையரும், சிண்டிகேட் முன்னாள் உறுப்பினருமான ராஜேந்திரன் நம்மிடம் பேசினார். ''ஒரு பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சேர வேண்டுமானால் யு.ஜி.சி. விதிமுறைப்படி பிஹெச்.டி., முடித்தபின், கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். முழுநேர பிஹெச்.டி. செய்பவர்கள் வேறு எந்தப் பணிக்கும் செல்லக்கூடாது. இதற்கு மாறாக பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக இருக்கும் பெரியசாமி, 1996-ம் ஆண்டு முதல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுநேர பிஹெச்.டி. செய்து, 2000-ம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். ஆனால், இவர் பிஹெச்.டி. படித்த காலத்திலேயே மருதமலை முருகன் கோயிலில் முழுநேரப் புலவராக பணிபுரிந்து மாதம் 1500 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அதே காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்ததாகவும் சர்வீஸ் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்து இருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும்? போலிச் சான்றிதழ்கள் பெற்றுத்தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார் என்பது அம்பலமாகி உள்ளது.

போலி சான்றிதழ்... பேராசிரியர் நியமனங்கள்

இதேமாதிரி பிரச்னையில் கடந்த ஆண்டு போலிச்சான்றிதழ் கொடுத்து அனுபவம் இல்லாமல் சேர்ந்த

போலி சான்றிதழ்... பேராசிரியர் நியமனங்கள்

இணைப்பேராசிரியர் மகேந்திரனை, துணைவேந்தரே மூன்று பேர் கொண்ட குழு அமைத்து உடனே பணி நீக்கம் செய்தார். ஆனால், பெரியசாமி விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சிக்குழு பொறுப்பில் விட்டு விட்டார். இணைப் பேராசிரியர் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்தபோதே, பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்திருந்தால், இவரும் பணிநீக்கம் செய்யப் பட்டு இருப்பார்.

தொலைதூரக் கல்விப் பிரிவில் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடும்போது, அந்தப் பிரிவில் பணிபுரிந்த ரவி, கனகராஜ், செல்வம் ஆகிய மூவரும் சேர்ந்து பல ஸ்டடி சென்டர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்த விவகாரம் பெரிதாக வெடித்தது. அதை விசாரிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் சிண்டிகேட் உறுப்பினரும் இணைப் பேராசிரியருமான பெரியசாமியும் இருந்தார். பெரியசாமிதான், 'தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்த மூவரும் சேர்ந்துதான், இணைப் பேராசிரியர் பெரியசாமியின் தில்லுமுல்லுவை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் கீழ்மட்டப் பணியாளர்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை, பலரும் தில்லாலங்கடி செய்து வேலைக்கு வந்தவர்களாகவும், செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் கீழ்மட்டப் பணி யாட்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டினால்... அவர்கள் மேல்மட்ட ஆட்களின் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறார்கள்.

இனியாவது அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பல பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், போலிச்சான்றிதழ் கொடுத்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார்கள்'' என்றார் வேதனையுடன்.

இதுபற்றி பெரியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக இருக்கும் பெரியசாமி, ''நான் எந்தத் தவறும் செய்யவில்லை.  யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உட்பட்டு த்தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள் ளேன். நான் போலிச்சான்றிதழ் கொடுத்து இருந்தால், பல்கலைக் கழகத்துக்குத் தெரி யாமலா இருக்கும்? நான் பாரதியார் பல்கலைக் கழகத்தில் பிஹெச்.டி முடித் தேன். அந்தப் பல்கலைக்கழகத்தின் அனுமதியோடுதான் கல்லூரி முடிந்தபிறகு, மாலைநேரத்தில் மருதமலை முருகன் கோயிலில் புலவராகச் பணி புரிந்தேன். தேசிய தரச்சான்று விதிமுறைப்படி கல்வி விரிவாக்கப் பணிக்குச் செல்லலாம்'' என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்துப் பேச பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியனுக்கு போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். நேரிலும் சென்றோம். ''நான் பேச விரும்பலைன்னு சொல்லிடுங்க...'' என்று, உதவியாளரிடம் சொல்லி நம்மைத் திருப்பி அனுப்பி விட்டார். அவரே விளக்கம் அளித்தால் பிரசுரம் செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம்.

நாம் இந்த விவகாரம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த நேரத் திலேயே, 'பெரியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு ஃபர்னிச்சர் வாங்கியதில் பல லட்சம் ஊழல்’ என்று ஒரு செய்தி இறக்கை கட்டிப் பறக்கிறது. இதில் யாருடைய தலை எல்லாம் உருளப் போகிறதோ?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்:

க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism