Published:Updated:

''அமைச்சர் ராமலிங்கம் மீது விசாரணைக் கமிஷன்?''

குண்டு போடும் யுவராஜா

''அமைச்சர் ராமலிங்கம் மீது விசாரணைக் கமிஷன்?''

குண்டு போடும் யுவராஜா

Published:Updated:
##~##
''அமைச்சர் ராமலிங்கம் மீது விசாரணைக் கமிஷன்?''

'ராவணன் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல் வர், பொதுப்பணித் துறை  அமைச்சர் ராமலிங்கம் மீதும் விசா ரணைக் கமிஷன் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புதிய குண்டை வீசி இருக்கிறார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரிடம் பேசினோம். ''பொதுப் பணித்துறை அமைச்சர் ராமலிங்கம்  பதவி ஏற்ற பிறகு, இதுவரை எந்த ஒரு பணியும் ஈரோட்டுக்குச் செய்ய வில்லை. இதுவரை ஈரோட்டு நலனுக்காக சட்டமன்றத்தில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. மேம்பாலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காகத் தோண்டிய குழிகள் இதுவரை மூடப்படவில்லை. இதனால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளன. தமிழக அரசு பொறுப்பு ஏற்றுள்ள இந்தக் குறுகிய காலத்தில், அதிக முறைகேடு பொதுப்பணித்துறையில்தான் நடந்துள்ளது.

''அமைச்சர் ராமலிங்கம் மீது விசாரணைக் கமிஷன்?''

அமைச்சர், ஈரோட்டுக்கு வருவதே அதிசயம்தான். அத்தி பூத்தாற்போல் வந்தா லும், ஏதாவது நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுப் பறந்து போய்விடுகிறார். இப்போது,  ராவணன் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ராவணனின் அத்தனை செயல்களுக்கும்  அமைச்சரின் ஒத்துழைப்பு இருந்துள்ளது. இவர் இல்லாமல் ராவணனால் பொதுப்பணித்துறையில் எந்த ஒரு காரியத்தையும் செய்திருக்க முடியாது.

சாதாரண மனிதராக தாராபுரத்தில் இருந்த ராமலிங்கம், குறுகிய காலத்தில் மாவட்டச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் என்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததற்குக் காரணமே ராவணன்தான். தமிழக அரசு, ராவணன் செய்த தவறுக்கு கைது விசாரணை செய்யும்போது அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ராமலிங்கத்தை இதுவரை பதவி நீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? அரசின் நடவடிக்கை பாரபட்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் ராமலிங்கத்தின் பதவி பறிக்கப்பட்டு அவர்மீது விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். இவர், ராவணனுடன் நெருக்கமாக இருந்ததற்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதை உரிய நேரத்தில் வெளியிடுவேன்'' என்று படபடத்தார்.

யுவராஜாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கத்திடம் பேசினோம். ''அரசியல் கோமாளியான யுவராஜாவை மக்களே தூக்கி எறிந்த பிறகு என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற யோக்கியதை இல்லை. எனக்கு எதிராக ஆதாரம் இருக்கிறது என்று சொல்பவர், கல்லூரியில் காசு பெற்று கொண்டு ஸீட் தருவதற்கு நான் ஆதாரம் தர முடியும். மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தவருக்கு என் மீது குற்றம் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? அந்த அரசியல் கோமாளி எங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை. முதலில் யுவராஜாவின் கல்லூரி மீதுதான் விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும்'' என்றார்.

இரண்டு பேருமே விசாரணைக் கமிஷன் மீது இத்தனை ஆர்வமாக இருப்பதால், வைத்து விடலாமே!

                                  - ம.சபரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism