Published:Updated:

பாலம் கட்டினால் போராட்டம்!

மீண்டும் கிளம்பிய ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் விவகாரம்

பாலம் கட்டினால் போராட்டம்!

மீண்டும் கிளம்பிய ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் விவகாரம்

Published:Updated:
##~##
பாலம் கட்டினால் போராட்டம்!

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சமீபத் தில் நடந்த ஆட்சியர்கள் மாநாட்டில், 'ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சாலை அருகே மேம்பாலம் அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொஞ்ச காலமாக 'மலையேறியிருந்த’ ஈரோடு பெரிய மாரி யம்மன் கோயில் போராட்டக் குழுவினர் மீண்டும் சாமியாடத் தொடங்கி விட்டனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கத் தலைவர் சந்திரசேகர், ''கடந்த ஆட்சியில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க பன்னீர்செல்வம் பூங்கா சாலை அருகே மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உடனே மக்களைத் திரட்டி பல போராட்டங்களை நடத்தினோம்.

அதனால், பாலம் கட்டும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், 2010-ல் மீண்டும் மேம் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டும் வேலை தொடங்கப்பட்டது. உடனே, முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் உதவியுடன் அப்போது அமைச்சராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனை சந்தித்து, 'இங்கு மேம்பாலம் கட்டினால் பாரம்பரியமிக்க பெரியமாரியம்மன் கோயில் பாதிக்கப்படும். அதற்குப் பதிலாக சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள 12.51 ஏக்கர் நிலத்தை மீட்டு 80 அடி சாலை அமைத்து விட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும்’

பாலம் கட்டினால் போராட்டம்!

என்று எடுத்துச் சொன்னோம். அதைத் தொடர்ந்து, ஆரம்பிக்கப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு வருடம்தோறும் 10 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். 50 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் வருகிறது. ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக 50 பேர்கூட ஒன்றாக நின்று சாமி கும்பிட முடியாது.

சி.எஸ்.ஐ. நிர்வாகம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது என்று வருவாய்த்துறை கூறுகிறது. ஆனால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் புரியவில்லை. அம்மன் கோயில் 1,200 வருடங்கள் பழமையானது. அதனால், இங்கு பாலம் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.  முதற்கட்டமாக, 5,000 பெண்கள் கடந்த வாரம் அம்மனுக்குப் பால்குடம் எடுத்துச் சென்று,

போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் பல கட்டமாகப் போராட்டம் நடத்த முடி வெடுத்து உள்ளோம்'' என்றார்.

சி.எஸ்.ஐ. தேவாலய பொறுப்பாளர் மனோகர் லாலிடம் பேசினோம். ''ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுவது எங்களுக்குச் சொந்தமான நிலம் என்பதற்கு அத்தனை ஆதாரங்களும் உள்ளன. அவர்கள்தான் கோயிலை சாலையில் கட்டி இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அது முடிவுக்கு வரும்போது உண்மை தெரியும்'' என்று சொன்னார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் கேட்டோம். ''மேம்பாலம் அமைக்க அரசு முடிவு எடுத்திருப்பது உண்மைதான். எம்.ஜி.ஆர். சிலை அருகில் சில விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதுபோல், 80 அடி சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவை எட்டுவோம்'' என்றார்.

இரண்டு மதம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்ப தால், அரசு நிதானமாக செயல்பட வேண்டும்!

                      - ம.சபரி

   படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism