Published:Updated:

நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

மதுரை 'அரசியல்' விளையாட்டு

நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

மதுரை 'அரசியல்' விளையாட்டு

Published:Updated:
##~##
நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

'ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதியை நம்பி, குடியிருந்த குச்சு வீடுகளை இடிச்சுட்டு நடுத்தெருவில் நிற்கிறோம்’ என்று, மதுரை கோமஸ்பாளையம் துப்புரவுப் பணியாளர்கள் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) போன் செய்து புலம்பி இருந்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோமஸ்பாளையத்தில் துப்புரவுப் பணியாளர் களுக்காக 220 கான்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் திட்டம் போடப்பட்டது. அப்போது, 'ஒரு வீட்டுக்கு ரெண்டு லட்சம் செலவாகும். அதில் ஒரு லட்சத்தை ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் மூலம் மானியமாகக் கொடுப்போம். மீதி ஒரு லட்சத்தை மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும்’ என்று, அப்போது இருந்த மாநகராட்சி தி.மு.க. நிர்வாகம் அறிவித்து இருந்தது.

நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

'ஒரு லட்சத்துக்கு நாங்கள் எங்கே போவது? அதை வங்கிக் கடனாக ஏற்பாடு செய்து கொடுத்தால் திருப்பிச் செலுத்தி விடுவோம்’ என்று பயனாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே, வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி, அதற்கும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக நான்கு வங்கிகளில் தலா ஒரு கோடி ரூபாயை நிதி உத்தரவாதமாக டெபாசிட் செய்தது மாநகராட்சி.

நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

அதனால், துப்புரவுப் பணியாளர்களும் குடியிருந்த வீடுகளை இடிக்க சம்மதித்தார்கள். புதிய வீடுகள் கட்டுவதற்கு மத்திய அமைச்சர் அழகிரி கையால் கடந்த ஜூன் மாதம் பூமி பூஜை போடப்பட்டது. மாந கராட்சி தரப்பில் இருந்து இரண்டு தவணைகளாக 50 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டு, கட்டடப் பணிகளும் ஜரூராய் நடந்தன. இதற்கிடையில், சட்ட மன்றத் தேர்தலால் மூன்றாவது தவணை வராமல் கட்டுமானப் பணி முடங்கிப் போனது. மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில், பயனாளிகள்

நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

போராட்டம் நடத்திய பிறகே, மூன்றாவது தவணை ரிலீஸ் ஆனது. அடுத்த கட்டமாக, தருவதாகச் சொன்ன கடனை நம்பி வங்கிகளுக்குப் படை எடுத்தார்கள் பயனா ளிகள். அதற்குள்ளாக ஆட்சி மாறியதால், 'உங்களை நம்பி ஒரு லட்சம் கொடுக்க முடியாது’ என்று வங்கிகள் பின் வாங்கிவிட்டன. இதனால், கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கட்டடப் பணிகள் முடங்கிவிட, அந்த 220 குடும்பங்களும் இப்போது நடுத்தெருவில்!

இதுதொடர்பாக நம்மிடம் பேசினார் தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் முத்துக்குமார். ''மாநகராட்சி அதிகாரிகள், கலெக்டர், வங்கி அதிகாரிகள் எல்லாரும் உத்தரவாதம் கொடுத்ததால்தான் வீடுகளை இடிக்கவே சம்மதிச்சோம். ஆனால், ஆட்சி

நடுத்தெருவில் துப்புறவுப் பணியாளர் குடும்பங்கள்!

மாறியதும் அவங்களும் அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும் உண்ணா விரதம், மறியல்னு போராட்டங்களை நடத்தி ஓய்ந்துட்டோம்.

'நான் மேயர் ஆனதும் இந்தப் பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்’னு தேர்தல் வாக்குறுதி கொடுத்த ராஜன் செல்லப்பா, 'தி.மு.க-காரங்க இந்தத் திட்டத்துல பெரிய அளவுக்கு ஊழல் செஞ்சிருக்காங்க; அதனால பொறுமையாத்தான் செய்ய முடியும்’னு இப்போது சொல்றார். ஊழல் நடந்திருந்தா தாராளமா நடவடிக்கை எடுக்கட்டும். அதுக்காக எங்களை வெச்சா அரசியல் பண்றது? இந்த விவகாரத்துக்காக முதல்வர் தனிப்பிரிவில் ஜனவரி 5-ம் தேதி நேரடியா போய் மனு குடுத்தோம். அதுக்கும் நடவடிக்கை இல்லை. அதனால, ஜனவரி 30-ம் தேதி, எங்க இயக்கத்தைச் சேர்ந்த நாலு பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கப் போய் அரெஸ்ட் ஆகிருக்காங்க. 220 குடும்பங்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியலை'' என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து மேயர் ராஜன் செல்லப் பாவிடம் கேட்டதற்கு, ''வீடுகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிதியைக் கொடுக்க முடியாது. கடந்த ஆட்சியில் எப்படியோ கொடுத்து இருக்கிறார்கள். இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கோப்புகளை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அந்தக் கோப்புகள் வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம். துப்புரவுப் பணியாளர்கள் தரப்பிலிருந்து இதுவரை முறையாக யாரும் என்னைப் பார்க்கவில்லை. இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டி ருக்கிறேன். வங்கிக் கடன் வழங்குவது தொடர்பாகவும் விரைவில் நல்ல முடிவை எடுப்போம்'' என்றார்.

வங்கிகள் தரப்பில் நம்மிடம் பேசிய மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சுப்பிரமணியனோ, ''துப்புரவுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில்தான் வங்கிக் கடன் கொடுக்க முடியும். அதற்கு மேல் என்றால் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் அவர்கள் கேட்கும் தொகையை வழங்குவதற்கு சாத்தியமே இல்லை'' என்றவர், ''வங்கியில் கடன் தருவதாக நாங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. மாநகராட்சியில் என்ன உத்தரவாதம் கொடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது'' என்றார்.

கலெக்டர் சகாயத்திடம் பேசினோம். ''என்னைச் சந்தித்த துப்புரவுப் பணியாளர்களை பக்கத்தில் வெச்சுக்கிட்டே மாவட்ட முன்னோடி வங்கி அலுவலரிடம் பேசி இந்த பிரச்னையை முடிக்கச் சொல்லிட்டேனே...'' என்றவர், ''அந்த மக்களை மறுபடியும் வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள். உரிய பரிகாரத்தை தேடுவோம்'' என்றார்.

சகாயம் போன்ற  நேர்மையான அதிகாரிகள் இருந்தும், நகரின் அழுக்கைத் துடைக்கும் துப்புரவுப் பணியாளர்கள் துயரக் கண்ணீர் வடிக்கலாமா?

   - குள.சண்முகசுந்தரம்

   படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism