Published:Updated:

அஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது? #DoubtOfCommonMan

அஞ்சலகம்
News
அஞ்சலகம்

"எனது அஞ்சலகச் சிறுசேமிப்புக் கணக்குப் புத்தகம் தொலைந்துவிட்டது. உள்ளூர் அலுவலகத்தில் பலமுறை கேட்டும் பயனில்லை. திரும்பப் பெறுவது எப்படி..?"

Published:Updated:

அஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது? #DoubtOfCommonMan

"எனது அஞ்சலகச் சிறுசேமிப்புக் கணக்குப் புத்தகம் தொலைந்துவிட்டது. உள்ளூர் அலுவலகத்தில் பலமுறை கேட்டும் பயனில்லை. திரும்பப் பெறுவது எப்படி..?"

அஞ்சலகம்
News
அஞ்சலகம்

கிராமப்புறங்களில் வங்கிக்கு இணையாக அஞ்சலகங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். செல்வமகள் சேமிப்புத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படுகின்றன. எளிய மக்கள் பலர் அஞ்சலகங்களில்தான் தங்கள் சேமிப்புகளைச் சேர்த்து வைக்கிறார்கள். இச்சூழலில், ``எனது அஞ்சலகச் சிறுசேமிப்புக் கணக்குப் புத்தகம் தொலைந்துவிட்டது. உள்ளூர் அலுவலகத்தில் பலமுறை கேட்டும் பயனில்லை. திரும்பப் பெறுவது எப்படி..?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்துக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார் விகடன் வாசகர் பொம்முராஜ்.ஓ. இதுகுறித்து சென்னை அண்ணாசாலை, தலைமை அஞ்சலக டெபுடி போஸ்ட் மாஸ்டர் யாதவனிடம் கேட்டோம்.  

``மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் அஞ்சலகச் சேமிப்புக் கணக்குப் புத்தகம் தொலைந்து போயிருந்தால் நகல் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கென ஒரு விண்ணப்பம் அஞ்சல் அலுவலகங்களில் உண்டு. அதைப்பெற்று பூர்த்திசெய்து 10 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டி, அங்கேயே கொடுக்கவேண்டும். விண்ணப்பத்துடன் உங்கள் KYC ஆவணங்களையும் கொடுக்கவேண்டியிருக்கும்.  
விண்ணப்பத்தைப் பெறும் அதிகாரிகள், நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் உண்மையா என்று சரிபார்ப்பார்கள். அதன்பின், மக்கள் தொடர்பு ஆய்வாளர் (PRI) நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு வந்து, முகவரி சரிதானா என்று சோதிப்பார். அடுத்தசில தினங்களில் அஞ்சலகத்திலிருந்து உங்கள் நகல் கணக்குப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி தகவல் வரும். சென்று கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளலாம். 
இருவர் கூட்டாகக் கணக்கு (Joint Account) வைத்திருந்தால், இருவரும் விண்ணப்பத்தில் கையொப்பமிடுவது அவசியம். ஒருவர் மட்டும் கையொப்பமிடும்பட்சத்தில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உங்கள் சேமிப்புக் கணக்கில் அதிகம் பணம் இருந்து, பயணத்திலோ திருட்டிலோ காணாமல் போயிருந்தால் அது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பெற்று (FIR Copy) விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டியது அவசியம்..." என்கிறார் யாதவன். 

சில வாடிக்கையாளர்கள் தங்களின் அசல் கணக்கு புத்தகத்தை வெளியில் அடகுவைத்து பணம் வாங்கிவிடுகிறார்கள்,  பிறகு, 'அசல் புத்தகம் தொலைந்து போய்விட்டது' என்று விண்ணப்பித்து நகல் புத்தகம் பெற்று கணக்கிலுள்ள தொகையை எடுத்துவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அஞ்சலகக் கணக்குப் புத்தகத்தை அடகு வைத்து பணம் பெறுவதும், அடகு வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதை எல்லோரும் உணரவேண்டும். 

அஞ்சலகச் சிறுசேமிப்பு கணக்கு நகல் புத்தகம் கோரும் விண்ணப்பப்படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

விண்ணப்பம்
விண்ணப்பம்
அஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது? #DoubtOfCommonMan