Published:Updated:

''இனிமே வாய்க்கரிசி வாங்கிட்டுத்தான் கடலுக்குப் போகணும்!

''வேதனையில் துடிக்கும் நாகை மீனவர்கள்

##~##
''இனிமே வாய்க்கரிசி வாங்கிட்டுத்தான் கடலுக்குப் போகணும்!

கேரளாவில் நடந்தால் உலகின் கவனத்துக்குப் போகும். அதுவே தமிழகத்தில் நடந்தால்... ஒரு நாள் சம்பவமாக முடிந்துபோகும். மீனவர்கள் மீதான தாக்குதலைத்தான் சொல்கிறோம்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இலங்கைக் கடற்படையின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில், வயிற்றுப்பாட்டுக்காகக் கடலுக்குப் போகும் தமிழக மீனவர்களுக்கு, இந்த முறை அதிர்ச்சியைக் கொடுத்து இருப்பவர்கள் இலங்கை மீனவர்கள். சிங்களக் கடற்படையே தேவலாம் என்று சொல்லும்படி கொடூரமாகத் தாக்கப்பட்டு முகம், கை, கால் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் படுத்துக்கிடக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

நாகை அக்கரைப்பேட்டை மற்றும் சின்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த எட்டுப் பேர், ராஜாராமன்

''இனிமே வாய்க்கரிசி வாங்கிட்டுத்தான் கடலுக்குப் போகணும்!

என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்களைத்தான் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள் சிங்கள மீனவர்கள். வாயில் அரிவாள் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும் படகு உரிமையாளர் ராஜாராமன் படபடப்பு விலகாமல் பேசினார். ''18-ம் தேதி நைட் நாங்க கிளம்பினோம். கோடியக்கரைக்கு கிழக்கே வலை விரிச்சு மீன் பிடிச்சுட்டு இருந்தோம். 21-ம் தேதி 9 மணி இருக்கும். அஞ்சு சிங்களப் படகுகள் வேகமா வந்து எங்களை ரவுண்ட் கட்டிச்சு. சுத்தி வளைச்சு நெருங்கினதுக்கு அப்புறம், பெட்ரோல் குண்டுகளை எங்க மேல வீசினாங்க. நாங்க கீழே படுத்து தப்பிச்சுட்டோம். ஆனா படகு தீ பிடிச்சுருச்சு. உடனே தண்ணியை மொண்டு ஊத்தி, தீயை அணைச்சோம். அதற்குள் அந்தப் படகுங்க பக்கத்தில் வந்திருச்சு. அதுல இருந்து 20 பேர் எங்க படகுல குதிச்சாங்க. குதிச்ச வேகத்துல முன்னாடி நின்னுட்டு இருந்த வடிவேலுவை வெட்ட ஆரம்பிச்சாங்க. அவர் கையால தடுக்கவே, கையில கடுமையான வெட்டுக் காயம். அடுத்து இன்னொருத்தன் அவரோட கழுத்தைக் குறிவைச்சு வெட்டினான். அதுக்குள்ள தலையைப் பின்னால இழுத்ததால, தப்பிச்சார். ஏன் இப்படிச் செய்றீங்கன்னு கேட்டதுதான் தாமதம்... ஒருத்தன் என் வாயிலேயே கத்தியால கீறிட்டான். மத்தவங்க சரமாரியா எல்லாரையும் வெட்ட ஆரம்பிச்சிட்டாங்க'' என்றார் காயத்துடன் இருக்கும் வையாபுரி.  

''இனிமே வாய்க்கரிசி வாங்கிட்டுத்தான் கடலுக்குப் போகணும்!

அவர்கள் உபயோகித்த இன்னொரு ஆயுதம் இரும்பு பைப். எல்லாரையும் நிறுத்திவைத்து, கை, கால், தலை, உடல் என்று அடி பின்னி எடுத்துவிட்டார்களாம். இலங்கை மீனவர்கள் வெட்டியதில் வையாபுரிக்கும் வடிவேலுவுக்கும்தான் அதிகக் காயங்கள். வையாபுரிக்கு பாதி மூக்கு  துண்டாகிவிட்டது. வடிவேலுவுக்கு கண்ணிலும் கையிலும் கடுமையான காயங்கள்.

''ரெண்டு பேரும் வலியைப் பொறுத்துகிட்டு செல்​போன், திசை காட்டும் கருவிகளை

''இனிமே வாய்க்கரிசி வாங்கிட்டுத்தான் கடலுக்குப் போகணும்!

மறைச்சுவைச்சோம். எல்லார் கழுத்திலும் கத்தியை வைச்சு மிரட்டி, ஜட்டியோடு முட்டி போடவைச்சாங்க. கெட்ட கெட்ட வார்த்தையில திட்டினாங்க. எல்லோர் கையிலும் இருந்த செல்போன்கள், திசைக்காட்டும் கருவி, படகில் இருந்த ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான மீன்கள் எல்லாத்தையும் வாரிக்கிட்டு கிளம்பினாங்க. 'இனிமே இதுதான் நடக்கும். நீங்க மீனைப் பிடிச்சு வையுங்க. நாங்க வந்து அள்ளிக்கிட்டு போறோம்’னு எகத்தாளமா சொல்லிட்டுப் போனாங்க'' என்று கதறினார்கள். காயங்களுடன் தவித்த மீனவர்கள் தட்டுத்தடுமாறி படகைச் செலுத்தி 22-ம் தேதி, கரை திரும்பி இருக்கிறார்கள்.

''இதுவரைக்கும் நாங்க எல்லை தெரியாம போனாக்கூட திட்டி அனுப்பிட்டு இருந்தாங்க. சில சமயம் மீனை அள்ளி கடல்ல போட்டுட்டுப் போவாங்க. ஆனா இப்பல்லாம், அவங்க ரத்த வெறியோடதான் அலையுறாங்க. அங்க உள்ள தமிழர்களைக் கொன்ற பிறகு, இப்ப இங்கே இருக்கும் தமிழர்கள் மேல குறி வைக்கிறாங்க. அவங்க வந்த வேகத்தையும், வெட்டுன மூர்க்கத்தையும் பார்த்தா... அவங்களை மீனவர்கள்னே சொல்ல முடியாது. தீவிரவாதிகள்னுதான் சொல்லணும். நடந்ததைப் பார்த்தா எங்களுக்கு நிச்சயம் ஜல சமாதினுதான் நினைச்சோம். எந்த சாமி புண்ணியமோ... உயிரோட கரைக்குத் திரும்பி இருக்கோம். ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது... இனிமே கடலுக்குப் போனா வாய்க்கரிசி வாங்கிட்டுத்தான் போ​கணும். உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை'' என்று டென்ஷன் ஆனார்கள் மீனவர்கள்.  

'தமிழக மீனவர்கள் பிரச்னையைத் தீர்த்து​வைப்போம்’ என்று ஆட்சிக்கு வந்த மாநில அரசும், 'இனி தமிழக மீனவர்களுக்குப் பிரச்னை வராது’ என்று உறுதி அளித்த மத்திய அரசும் என்ன சொல்லப் போகின்றன?

- கரு.முத்து