Published:Updated:

கொலை மிரட்டல் புகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.!

சிவகங்கை அ.தி.மு.க. களேபரம்

##~##
கொலை மிரட்டல் புகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.!

'கொடுத்த பணத்​தைத் திருப்பிக் கேட்ட​தற்காக, கூலிப்படையை வைத்து கொலை செய்வேன் என்று மிரட்டினார்’ என்று காரைக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான சோழன் பழனிச்சாமி மீது புகார் கிளம்பியது. அதில் எஃப்.ஐ.ஆர். போடச் சொல்லி இருக்கிறது காரைக்குடி கோர்ட்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னைத் தொழிலதிபரான சின்னையா அம்பலம், சில வருடங்களுக்கு முன் சிவகங்கை மாவட்ட அரசியலுக்குள் வந்தார். அப்போது சோழன் பழனிச்சாமி, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தார். அவரோடு ஒட்டிக்கொண்டு தாரா​ளமாய் பணத்தை இறைத்தார் சின்னையா. ஆனாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சின்னையாவுக்கு ஸீட் கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்த சூட்டோடு பழனிச்சாமியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனதால், சின்னையா அம்பலமும் புதிய மாவட்டச்

கொலை மிரட்டல் புகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.!

செயலாளரான முருகானந்தம் பக்கம் சாய்ந்தார். இந்த நிலையில்தான், தேர்தல் செலவுகளுக்காக பழனிச்சாமி வாங்கியதாகச் சொல்லப்படும் 28 லட்ச ரூபாய் பிரச்னையாகி உள்ளது.

கோர்ட் உத்தரவைக் கையில் வைத்துக்கொண்டு பேசினார் சின்னையா அம்பலம். ''பழனிச்சாமி எனக்கு அஞ்சு வருஷமாப் பழக்கம். ஒன்றரை ரூபாய் வட்டிக்கு என்னிடம் 28 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால், என்னுடைய வளர்ச்சியை பொறுக்காதவர், உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டப் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்காக நான் முயற்சித்தபோது, அதைத் தடுக்கப் பார்த்தார். மீறி நான் ஸீட் வாங்கி ஜெயித்தேன். அடுத்ததாக மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நான் வந்துடக் கூடாதுன்னு தனது நண்பர் ராவணன் மூலமாகத் தடுத்தார்.

என்னோட பணத்தால் எம்.எல்.ஏ. ஆகிட்டு எனக்கே துரோகம் பண்றார்னு தெரிஞ்சதும், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். 'பணத்தைத் தர முடியாது. உன்னால முடிஞ்சதைப் பாத்துக்க... நான் இப்ப எம்.எல்.ஏ., என்கிட்ட எந்த போலீஸும் வராது’னு சவடாலாப் பேசினார். அதனால், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதுக்கு அவர் பதில் சொல்லலை. அதனால், அம்மாவுக்கே புகார் அனுப்பினேன். இந்தத் தகவல் தெரிஞ்சதும், ஜனவரி 21-ம் தேதி அடியாட்களோட எங்க வீட்டுக்கு வந்தார். 'நான் கொடுக்கிறப்பத்தான் பணத்தை வாங்கிக்கணும். தேவை இல்லாம டார்ச்சர் கொடுத்தா, கூலிப் படையை வெச்சு உன்னை க்ளோஸ் பண்ணிடுவேன்’னு மிரட்டினார்.

இது சம்பந்தமா நான் கொடுத்த புகாருக்கு போலீஸ் ரசீது குடுக்கலை, விசாரிக்கவும் இல்லை.

கொலை மிரட்டல் புகாரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.!

அதனால், பிப்ரவரி 6-ம் தேதி சிவகங்கைஎஸ்.பி-க்குப் பதிவுத் தபாலில் புகார் அனுப்பினேன். அதுக்கும் நடவடிக்கை இல்லை என்றதும் கோர்ட்டுக்குப் போனேன். எனது புகாரில் நியாயம் இருப்பதால், 'பழனிச்சாமி மீது 24 மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்து விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் பண்ணணும்’னு காரைக்குடி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. நான் கோர்ட்டுக்குப் போறேன்னு தெரிஞ்சதும், தன்னோட ஆதரவாளரான ராமநாதனைத் தூண்டிவிட்டு என் மீது பி.சி.ஆர். கேஸ் கொடுக்கவெச்சிருக்கார் பழனிச்சாமி. என்னைப்​போல, இன்னும் பலரை இப்படி மோசடி செய்திருக்கிறார் பழனிச்​சாமி. மாவட்டச் செயலாளரா இருந்தப்ப, பலரிடம் பணம் வாங்கிட்டு பதவிகள் கொடுத்திருக்கார். இனி, அதெல்லாம் ஒவ்வொன்​னா வெளியில் வரும்'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு  சோழன் பழனிச்​சாமியின் பதில் என்ன?

''சின்னையா அம்பலத்தை வளர்த்துவிட்டதே நான்தான். உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளரும் அமைச்சர் கோகுல இந்திராவும் கலந்து பேசித்தான் ஸீட் ஒதுக்கினாங்க. அதில் என்னோட பங்கு எதுவும் இல்லை. நான் வணங்கும் முருகன் மேல் சத்தியமா சொல்றேன்... ஒரு நாள், ஒரு பொழுதுகூட நான் அவருக்குக் கெடுதல் நினைச்சது இல்லை. நான் அவரிடம் பணம் வாங்கி இருந்தால், அதை என்னிடம் நேரில் வந்து திருப்பிக் கேட்டிருக்கலாமே. ஒரு தடவைகூட அவர் என்னை சந்திக்கலை. அடியாட்களுடன் போய் மிரட்டியதா சொல்லும் தேதியில் நான் சென்னையில் இருந்தேன். அம்பலம் நல்லவர்தான். அவரை சிலர் எனக்கு எதிராக ஆட்டுவிக்கிறார்கள். நான் மாவட்டச் செயலாளராக இருந்தப்ப, கட்சிப் பதவிகளை வழங்கியது யார்? எப்படி வழங்கப்பட்டது என்பது எல்லாம் அம்பலத்துக்கும் தெரியும்... அவரை இயக்குபவர்களுக்கும் தெரியும்.

சின்னையா அம்பலம் தன்னை சாதியைச் சொல்லி திட்டி அவமானப்​படுத்துனதா ராமநாதன் மீது புகாரைக் கொடுத்துட்டு வந்துதான் எனக்கே தகவல் சொன்னார். அந்த விஷயத்திலும் எனக்குத் தொடர்பு இல்லை'' என்றார் விரக்தியுடன்.

சிவகங்கை எஸ்.பி-யான பன்னீர்​செல்வத்திடம் பேசியபோது, ''கோர்ட் உத்தரவு பற்றி இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை'' என்றார்.

அ.தி.மு.க. உள்குத்து பற்றிப் பேசும் நிர்வாகிகள், ''அமைச்சர் பதவியைப் பிடிக்கத் தவம் இருக்கிறார் சோழன் பழனிச்சாமி. அதைக் கலைப்பதற்காக அவரது எதிரிகள் ஒன்றுகூடி வேலை செய்கிறார்கள். திவாகரனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக போஸ்டர் ஒட்டினார்கள். இப்போது, பண மோசடிப் புகாரைக் கிளப்புகிறார்கள். இன்னும் சில புகார்களும் வரும் பாருங்கள்...'' என்கிறார்கள் நமட்டுச் சிரிப்போடு!

   - குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்