Published:Updated:

ஜெ.ஜெ. டி.வி., ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல்!

சிவகங்கை கேபிள் கலாட்டா

##~##
ஜெ.ஜெ. டி.வி., ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல்!

'மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்​சிக்​குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவின் நேர்முக உதவியாளர் இப்ராஹிம் ஷா மற்றும் வேகம்பத்தூர் கருமுருகன் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்’ என்று ஒரு போஸ்டர் காரைக்குடியைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்ன விவகாரம் என்று அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத்​தின் தாலுக்கா தலைவர் வேலுவிடம் விசாரித்தோம். ''அ.தி.மு.க-வைச் சேர்ந்த கரு​முருகனின் வீட்டில்தான் சிவகங்கை மாவட்டத்துக்கான கேபிள் கன்ட்​ரோல் ரூம் இருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு, கேபிள் ஆபரேட்டரான கருமுருகனும் கோகுல இந்திராவின் உதவியாளரான இப்ராஹிம் ஷாவும் கேபிள் ஆபரேட்டர்களைப் படுத்தி எடுக்கிறார்கள். லோக்கல் சேனல் நடத்துவதற்கு கடந்த டிசம்பரில் நடந்த டெண்டரில் 45 பேர் கலந்துகொண்டார்கள். அதில் நான்கு பேரின் டெண்டர்கள் ஏற்கப்பட்டு, அதில் ஒருவருக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுத்து

ஜெ.ஜெ. டி.வி., ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல்!

இருக்கிறார்கள். ஆனால், டெண்டரில் கலந்துகொள்ளாத சிலர் இப்போது ஜெ.ஜெ .டி.வி, ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல் போன்ற பெயர்களில் லோக்கல் சேனல்களை நடத்துகிறார்கள். 'ஜெயா டி.வி-யின் கிளை நிறுவனம்’ என்று பொய் சொல்லி விளம்பரங்களையும் வாங்குகிறார்கள். இதில் ஜெ.ஜெ. டி.வி. கருமுருகனுக்குச் சொந்தமானது.

கலெக்டர் சொன்னதால், அனுமதி பெறாத லோக்கல் சேனல்களை நிறுத்தி​னோம். உடனேயே, காரைக்குடி பகுதிக்கு வரும் அரசு கேபிள் ஒளிபரப்பையே நிறுத்திவிட்டார் கருமுருகன். அதனால், அனுமதி பெறாத சேனல்களை மறுபடியும் நாங்கள் ஒளிபரப்ப வேண்டியதாகிப் போச்சு. சிக்னலை பூஸ்ட் செய்து கொடுப்பதற்காக காரைக்​குடியில் ஆபரேட்டர்கள் ஒன்றுசேர்ந்து சப்-கன்ட்ரோல் ரூம் வைத்திருக்​கிறோம். அதைத் தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லி அதிகாரிகளை நெருக்குகிறார் கருமுருகன்'' என்று சொன்னார்.

மேலும் சில விவரங்களை இன்னொரு பொறுப்பாளர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ''லோக்கல்

ஜெ.ஜெ. டி.வி., ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல்!

சேனலுக்கான டெண்டர் முடிந்த பிறகு, அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் மகன் யோகேஷ் தரப்பில் இருந்து நான்கு சேனல்களுக்கான விண்ணப்பப் படிவங்களைக் கொண்டுவந்தாங்க. அதை அதிகாரிகள் நிராகரிச்சுட்டாங்க. அதற்கு மறுநாளே அரசு கேபிள் டி.வி-க்கான தனி தாசில்தார் சுந்தரபாண்டியன் மாற்றப்பட்டார். இப்ப, டெண்டர் போடாமலேயே ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல்னு ரெண்டு லோக்கல் சேனல்களை நடத்திக்கிட்டு இருக்கார் யோகேஷ். இப்படி, ஆளாளுக்கு அனுமதி பெறாமல் சேனல் நடத்த ஆரம்பிச்சா அரசுக்குப் பணம் கட்டி சேனல் லைசென்ஸ் பெற்றவங்களோட கதி என்னாவது?'' என்று நியாயம் கேட்டார்.

கருமுருகனைத் தொடர்பு​கொண்ட​போது, ''சிவகங்கை மாவட்டத்துக்கான எம்.எஸ்.ஓ. நான். எல்லா மாவட்​டங்களிலும் எம்.எஸ்.ஓ-வாக இருப்ப​வர்களுக்கு டெண்டர் இல்லாமலேயே ஒரு லோக்கல் சேனலை நடத்த அனுமதி கொடுத்திருக்காங்க. அதன்படி, 'அரசு விதிக்கும் கட்டணத்தைச் செலுத்த சம்மதிக்கிறேன்’னு எழுதிக் குடுத்துட்டு சேனல் நடத்துறேன். நான் மரியாதை நிமித்தமாக மாவட்ட

ஜெ.ஜெ. டி.வி., ஜெ.ஜெ. ப்ளஸ், ஜெ.ஜெ. டிஜிட்டல்!

அமைச்சர் கோகுல இந்திராவை சந்தித்தபோது, 'அவரும் ஏதாவது உதவி தேவைப்பட்டால், இப்ராஹிம் ஷாகிட்ட பேசுங்க’ என்று சொன்னார். அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகம். சத்தியமா சொல்றேன் .அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

கோகுல இந்திராவின் அண்ணன் மகன் யோகேஷ், ''ஆவணங்களை ரெடி பண்ண தாமதமானதால் டெண்டர் நேரத்துக்குள் எங்களால் வர முடியாமல் போய் எங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும் 'அரசு அறிவிக்கும் கட்ட​ணத்தைச் செலுத்தத் தயார்’ என்று எழுதிக் கொடுத்து, அதிகாரிகள் அனுமதித்த பிறகுதான் நாங்கள் லோக்கல் சேனல்​களை நடத்து​கிறோம்'' என்கிறார்

இப்ராஹிம் ஷாவிடம் பேசினோம். ''எனக்கும் அரசு கேபிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கருமுருகனுடன் நெருங்கிய பழக்கமும் இல்லை. என் மீது பழி போடுகிறவர்கள், கேபிள் ஆபரேட்டர்கள்.யாரிடமாவது நான் போனிலோ, நேரிலோ பேசி இருக்கிறேன் என்பதை நிரூபிக்க முடியுமா? 'நாங்​களும் ஆளும் கட்சி’ என்று சொல்கிறவர்கள், நான் தவறு செய்தால் அமைச்சரிடம் சொல்லி இருக்கலாமே'' என்று கேட்டார்.

அரசு கேபிள் தனி தாசில்தார் தங்க​பாண்டி​யனிடம் இந்த பிரச்னைகள் குறித்து கேட்டதற்கு, ''கருமுருகன், அரசால் அனுமதிக்கப்பட்ட எம்.எஸ்.ஓ. அதனால் அவருக்கு ஒரு சேனல் கொடுத்தோம். அனுமதி பெறாத மற்ற லோக்கல் சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தச் சொல்லி கேபிள் கார்ப்பரேஷன் எம்.டி-யிடம் இருந்து உத்தரவு வந்தது. பிறகு, 'பேசி முடிவெடுத்துக்கலாம்’னு சேர்மன் சொன்னதால், நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறோம்'' என்றார்.

இப்போது திடீரென ஜெ.ஜெ. டி.வி. தவிர மற்ற 'ஜெ’ டி.வி-கள் தற்காலிகமாக நிறுத்தப்​பட்டுவிட்டன. இந்த விஷயத்துக்கு எப்படி முற்றுப்​புள்ளி விழுகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!

    - குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்