Published:Updated:

கோட்டையை கலக்கிய தேர்தல்!

கோட்டையை கலக்கிய தேர்தல்!

கோட்டையை கலக்கிய தேர்தல்!

கோட்டையை கலக்கிய தேர்தல்!

Published:Updated:
##~##
கோட்டையை கலக்கிய தேர்தல்!

பொதுத்தேர்தலுக்கு இணையான பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது, சென்னை தலைமைச்செயலகச் சங்கத் தேர்தல்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாருக்கும் பொதுவான சங்கமாக இருக்கும் இந்தச் சங்கத்தின் தேர்தல் என்றால், ஒட்டுமொத்த தலைமைச்செயலகமே ஒரு வாரத்துக்கு கோலாகலமாக இருக்கும். இந்த முறை வழக்கத்தைவிட அதிக கோலாகலமும் பரபரப்பும் நிரம்பிவழிந்தது. காரணம், மும்முனைப் போட்டிதான்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் 'தலைமைச்செயலக சங்க’த்தில், லிஃப்ட் இயக்குபவர் முதல் ஐ.ஏ.எஸ். அல்லாத கூடுதல் அரசு செயலாளர் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2011 ஆண்கள், 1330 பெண்கள் என மொத்தம் 3,341 பேர் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்கள்.

கோட்டையை கலக்கிய தேர்தல்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர் தலில், தலைவர், செயலாளர், பொருளாளர், இரு

கோட்டையை கலக்கிய தேர்தல்!

இணைச்செயலாளர்கள் என ஐந்து பதவிகளுக்கும் 37 துறைகளின் சார்பில் தலா ஒருவர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'டீம்’ என்ற அணியினர்தான், நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக் கப்பட்டு வந்தனர். கடந்த 2009-ல் நடந்த தேர்தலில், புதிதாக 'பில்லர்’ என்ற அணி, போட்டியில் களமிறங்கியது. அந்த அணியின் பீட்டர் அந்தோணிசாமி செயலாளர் பதவிக்கு வெற்றி பெற்றார். டீம் அணியின் சுந்தரராஜன் தலைவர் ஆனார். திமுக ஆட்சியில் அந்த  இரு ஆண்டுகளும் ஓடிவிட்டன. இப்போது மறுபடியும் தேர்தல்.

கடந்த 23ம் தேதி அன்று தேர்தல் நடந்தது. முதல் முறையாக மூன்று அணிகள்

கோட்டையை கலக்கிய தேர்தல்!

களத்தில் இறங்கின. டீம், பில்லர் அணிகளுடன் 'வின்னர்ஸ்’ என்ற அணியும் போட்டியில் இறங்கியது.

380 வாக்குகள் வித்தியாசத்தில் வின்னர்ஸ் அணியின் பீட்டர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பில்லர் அணியின் சார்பில் சுரேஷ்குமார் (செயலாளர்) லலிதா (பொருளாளர்) சுகா (இணைச்செயலாளர்)ஆகிய மூவர் வெற்றிபெற்றனர். டீம் அணியின் சார்பில் மோகனவள்ளி மட்டும் (இணைச்செயலாளர்) வெற்றிபெற்றார்.

கடந்த முறை டீம் அணியிலிருந்து நிர்வாகிகள் ஆனவர்கள் மீது,  மற்ற தரப்பினர் பரவலாக அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கடந்த ஆட்சியின் கடைசிக் காலத்தில், தலைமைச் செயலக ஊழியருக்கான குடியிருப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறவில்லை என்பது அதிகம் பேர் வெளிப்படுத்திய குறை. ஆனால், 'நாங்கள் சரியாகவே செயல்பட்டோம். எந்த கட்சி ஆண்டாலும் பணியாளர் நலன்களைக் கேட்டு வாங்கித் தந்துள்ளோம்’ என விவரங்களை அடுக்கினார் சுந்தரராஜன். ஆனால், அந்தப் பிரசாரத்துக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

கோட்டையை கலக்கிய தேர்தல்!

இன்னொரு புறம், 'பில்லர்ஸ்’ அணியின் சார்பில் கடந்த முறை செயலாளர் ஆன பீட்டர், இந்த முறை தலைவர் பதவிக்கு நிற்க விரும்ப, அவரது அணியினரே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு, அவரது தலைமையில் மூன்றாவது அணி உருவானது. ஒருவழியாக முடிவுகள் அறிவிக்கப்பட, மூன்று அணியில் இருக்கும்  முக்கிய நிர்வாகிகள் வெற்றிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.  

இனி, புதிய நிர்வாகிகள், முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவது ஒரு முக்கிய நிகழ்வு. அது எளிதாக நடந்து முடிந்துவிட்டாலே, பிரச்னைகள் சரியாகி விடும் என்பதற்கு அறிகுறிதான் என்கிறார்கள், பரவலாக. ஊழியர்களின் இவ்வளவு தயக்கத்துக்குக் காரணம், 2003 வேலைநிறுத்தத்தில் நடந்த கசப்பான அனுபவம்தான். ஆனால், ''விரைவில் முதல்வரை சந்தித்து, வாழ்த்து பெறுவோம். அரசுடன் நல்ல இணக்கத்தைப் பேணி, ஊழியர்களின் நலன்களைப் பெற்றுத்தர முடியும்'' என்று உறுதியாகச் சொல்கிறார், பீட்டர். அதையே வழிமொழிந்து சொல்கிறார், செயலாளர் சுரேஷ்குமார்.

ஊழியர்கள் தரப்பிலோ, ''ஆங்கிலேயன் கட்டிய ஜார்ஜ் கோட்டையில் இருந்து, அரசினர் தோட் டத்துக்கு தலைமைச்செயலகத்தை மாற்ற கடந்த ஆட்சியில் முடிவுசெய்ததால், இங்கு நின்றுபோன மராமத்துப் பணிகளைச் செய்வது, அவசியம். குறிப்பாக, பல மாடிகளில் நல்ல குடிநீர் கிடைக்கச்செய்வது உடனடித் தேவை. அடுத்தது, காலிப் பணியிடங்கள்... தலைமைச்செயலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 37 துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பிரிவு அலுவலர், இரு உதவிப் பிரிவு அலுவலர்கள், ஒரு உதவியாளர், ஒரு தட்டச்சர் இருக்கவேண்டும். ஆனால், 700க்கும் மேல் உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இப்படி இருந்தால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு நிர்வாகத்தை எப்படி கண்காணித்து ஒழுங்குபடுத்த முடியும்?''என்பதுடன், துறைரீதியான ஆதங்கங்களைக் கொட்டுகிறார்கள்.

கசப்புக் காலத்தை மறக்கநினைக்கும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, முதல்வர் எப்படி இனிப்பு தரப்போகிறார், பார்ப்போம்!

- இரா. தமிழ்க்கனல்

படங்கள்: வீ.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism