Published:Updated:

இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட ஆசிப்!

இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட ஆசிப்!

இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட ஆசிப்!

இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட ஆசிப்!

Published:Updated:
##~##
இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட  ஆசிப்!

த்தி பூத்தாற் போன்று எங்கோ ஒன்றாக நடந்து கொண்டிருந்த ஆள் கடத்தல் விவகாரம், இப்போது தமிழகம் எங்கும் தங்கு தடையின்றி நடைபெறத் தொடங்கிவிட்டது. இதில் லேட்டஸ்ட்,  திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் நடந்த விவகாரம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கு மளிகை, ஹார்டுவேர்ஸ் கடைகளை நடத்தி வருகிறார் ஜமால் முகம்மது. அவருக்கு நவீன்பாத்திமா என்ற 10 வயது மகளும் ஆசிப் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார்கள். இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஆசிப், கடந்த 21-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென அவன் காணாமல் போய் விட்டான். பதறிப்போன ஜமாலும் மற்றவர்களும் எல்லா இடத்திலும் தேடி இருக்கிறார்கள். எங்கும் காணவில்லை என்பதால் போலீஸுக்குப் போனார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆசிப் மீட்கப்பட்ட விவகாரத்தை பரபரப்பாக விவரிக்கிறார், ஜமால்.

''சாயங்காலம் 6.50 மணி இருக்கும். கடைக்கு வந்த ஆசிப், 'உண்டியல்ல பணம் சேர்க்கணும், 10 ரூபா தாங்க’ன்னு கேட்டான். 'சரி தர்றேன், நீ வீட்டில் போய் விளையாடு. கடைக்கு வந்து தொந் தரவு

இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட  ஆசிப்!

செய்யாதே’ன்னு சொல்லி அனுப்பிட்டேன். அதன் பிறகு 7 மணிக்கு கரன்ட் கட் ஆயிடுச்சு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆசிப் எங்கே என்று கேட்டு வீட்டில் இருந்து ஆள் வந்தது. வீட்டுக்கு அனுப்பி வெச்சதைச் சொன்னேன். அவன் வீட்டுக்கு வரவே இல்லை என்று என் மனைவி சொன்னதும், எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அக்கம்பக்கம் முழுவதும் பதறிப் போய் தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை. இப்போது அடிக்கடி கடத்தல், கொலை நடப்பதால் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அவர் களும் விசாரித்துவிட்டு, உடனடியாகத் தேட ஆரம்பித்தார்கள். எங்கள் பகுதி மக்களும் ஆளுக்கு ஒரு பக்கம் வேகமாகத் தேட ஆரம்பிச்சுட்டாங்க.

நான் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது என் செல்போனுக்குத் தொடர்பு கொண்ட ஒருவன், 'உன் குழந்தை என்னிடம்தான் இருக்கிறது. நீ 50 லட்சம் ரூபாய் தந்தால் குழந்தையை உயிருடன் விடுவோம். போலீஸுக்குப் போனால், உன் பையனை உயிருடன் பார்க்க முடியாது’ என்று மிரட்டினான்.

'நான் போலீஸுக்கு எல்லாம் போகமாட்டேன். ஆனால், நீ கேக்குற அளவுக்குப் பணம் கொடுக்க நான் பணக்காரன் இல்லை. என் குழந்தையை விட்டுடு’ என்று கெஞ்சினேன். அதற்குள் செல்போன் கட் ஆகிவிட்டது. தகவலை உடனே போலீஸாரிடம் தெரிவித்தேன். அவர்களும் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டை நடத்தி, என் மகனை உயிருடன் மீட்டுத் தந்துட்டாங்க. பணம் கேட்டுத்தான் இந்தக் கடத்தல் நடந்ததா தெரியுது. எனக்கு யாருமே விரோதிங்க இல்லை. ஆனால், போனில் பேசியவன் குரலை ஏற்கெனவே கேட்ட மாதிரிதான் இருந்தது. என் மகனை கண்டுபிடிக்கப் பாடுபட்ட காவல் துறையினருக்கும் ஊர் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்'' என்று சிறுவனைப் பிடித்தபடி கண் கலங்கினார்.

இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட  ஆசிப்!

கடத்தப்பட்ட சிறுவன் ஆசிப்பிடம் பேசினோம். ''ரெண்டு பேர் வந்து செல்போனை காட்டிக் கூப்பிட்டாங்க. கிட்டப் போன தும் அவங்க வந்த வண்டியில என்னை ஏத்திக்கிட்டு எங்கேயோ போனாங்க. நான் பயந்துபோய் கத்துனேன். அவங்க கேக்கலை. காடு மாதிரி இருந்த இடத்தில நிறுத்தி, சாப்பிட இட்லி வாங்கிக் கொடுத்தாங்க. அப்புறம் அப்பா செல்போன் நம்பரைக் கேட்டாங்க. நான் சொன் னதும், அப்பாகிட்ட பேசுனாங்க, எனக்கு பயமா இருந்துச்சு'' என்றான் மிரட்சி தெளியாமல்.

இதுகுறித்து விசாரித்து வரும் டி.எஸ்.பி. சேகரிடம் பேசினோம். ''ஆசீப்பின் அப்பா போலீசுக்குப் போய் விட்டார் என்று கடத்தல்காரர்களுக்குத் தெரிந்துவிட்டது. நாங்கள் தேடுவதை அறிந்துதான், பையனை உயிருடன் விட்டிருக்கிறார்கள். தனிப்படை அமைத்துள்ளோம். கடத்தி யவர்களை இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களை நெருங்கிவிட்டோம். எந்த நேரமும் பிடித்து விடுவோம்'' என்றார்.

இந்தக் கடத்தல் குறித்துப் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந் திரபாபு,  ''இந்தக் கடத் தலை பணத்துக்காக லோக்கல் ஆட்களே செய் திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பையனுக்கு செல்போன் என்றால் ரொம்ப விருப்பம் என்பதைத் தெரிந்துகொண்டு, அவனிடம் செல்போனைக் காட்டி கடத்திப் போயிருக்கிறார்கள். சிறுவனைக் கடத்தியவர்களில் ஒருவன் சாப்பாடு வாங்க வந்தபோது, ரோட்டில் போலீஸ் வேன்கள் பறந்தபடி இருப்பதையும் ஊரே சிறுவனைத் தேடிக்கொண்டு இருப்பதையும் பார்த்திருக்கிறான். நாம் எப்படியும் போலீஸில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் பையனை விட்டுவிட்டுப்போயிருக்கிறார்கள்'' என்றார்.

பையன் கிடைத்துவிட்டது சந்தோஷம்தான். ஆனால் குற்றவாளிகளை எப்போது பிடிக்கப் போகிறது போலீஸ்?

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

நெல்லை அள்ளியது ஏன்?

புதுச்சேரி மாநில விவசாயிகள் காரைக்கால் கலெக்டர் அலுவலகம் முன்பு 100 மூட்டை நெல்லைக் கொட்டி, ஆர்ப்பாடம் நடத்தியது குறித்து, 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்துப் பேசிய காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ''போராட்டம் முடிந்த பின்னர், சாலையில் கொட்டிய நெல்லை விவசாயிகள் அள்ள வந்ததாகவும், ஆனால், போலீஸார் வாகனங்களில் நெல்லை அள்ளிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. போராட்டம் முடிந்த பிறகு விவசாயிகள் நெல்லை அள்ளாமலே சென்று விட்டனர். அந்த இடம் முக்கியமான சந்திப்பு என்பதால், அங்கு கொட்டப்பட்டு இருந்த நெல்லை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என, நகராட்சி ஆணையருக்குத் தெரிவித்தேன். அவரோ, 'தற்போது ஆட்கள் இல்லை’ என்று கூறி விட்டார். அதனால்தான், போலீஸாரை விட்டு நெல்லை அள்ளச் சொன்னேன். வரப்பில் நெல்மணி கிடந்தால்கூட அதை மிதிக்காமல் செல்லும் விவசாய நாடு இது. சாலையில் கிடக்கும் நெல்லை நான் அப்படியே விட்டுச் செல்ல முடியுமா?'' என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism