Published:Updated:

மனைவிக்குப் பதவி... கணவருக்கு அதிகாரம்!

அடடே வேலூர்..

மனைவிக்குப் பதவி... கணவருக்கு அதிகாரம்!

அடடே வேலூர்..

Published:Updated:
##~##
மனைவிக்குப் பதவி... கணவருக்கு அதிகாரம்!

''முதல்வர் அம்மா, மாயாவதி, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களால் மட்டுமே தன்னிச்சையாக சிறப்பாகச் செயல்பட முடியும். ஆனால் மற்ற பொறுப்புகளில் இருக்கும் பெண்களால் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அவர்களின் கணவர் அல்லது உறவினர்கள் உதவியோடுதான் பொறுப்புகளில் செயல்பட முடியும். என் மனைவி ராணி மேல் முட்டுக்கூர் ஊராட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் நான்தான் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்!'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார், ராணியின் கணவர் தாமோதரன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்மடுகு கிராமம் கீழ் தெருவைச் சேர்ந்த சந்தியா நம்மிடம், ''கீழ்த் தெரு, மேல் தெருவைச் சேர்த்து எங்க பகுதியில் மட்டும் 1,500 பேருக்கு மேல இருக்கோம். போன உள்ளாட்சித் தேர்தல்ல ராணி எங்க

மனைவிக்குப் பதவி... கணவருக்கு அதிகாரம்!

பகுதிக்கு வந்து ஓட்டு கேட்டாங்க. நாங்களும் எங்க பகுதியில் உள்ள குறைகளை எல்லாம் சொன்னோம். அந்த சமயத்தில் தண்ணீர் பிரச்னை அதிகமா இல்லை. வாரத்துக்கு மூணு முறை வரும். அதனால அவங்ககிட்ட கழிவுநீர் பிரச்னை, 100 நாள் வேலை வாய்ப்பு ஆகியவை குறித்துக் கேட்டோம். அவங்களும், 'எல்லாத்தையும் கூடிய விரைவில் உங்களுக்குச் செய்துதர்றேன்’னு சொல்லிட்டுப் போனார். ஆனால் அதுக்குப் பிறகு இந்தப் பகுதியை எட்டிக்கூட பார்க்கல. வாரத்துக்கு ஒரு தடவை ஊராட்சி அலுவலகத்துக்கு வருவாங்க. அப்போது ராணி யுடன் தாமோதரனும் கூடவே வருவார். நாங்க ஏதாவது கேட்டால், ராணி பதில் சொல்லமாட்டாங்க. தாமோதரன்தான் பதில் சொல்வார்.

எங்க பகுதியில் சாக்கடை கால்வாய் அடைத்து, ஒரு மாசம் ஆகுது. தினமும் நாற்றம் தாங்கமுடியலை. இதனால் குழந்தைகள் பலருக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுது. தண்ணீரும் இப்ப மாசத்துக்கு இரண்டு முறைதான் வருது. அதுவும் உப்புத் தண்ணீர். குடிக்கவே முடியலை. எங்க தெருவுக்குப் பின்னால பெரிய கால்வாய் இருக்கு. அதில் இருந்து வரும் கொசுக்களால் பலருக்கு மலேரியா காய்ச்சல் வந்திருக்கு. அதையும் சுத்தம் பண்ணாம இருக்காங்க. நாங்களும் எத்தனை நாளுக்குத்தான் பொறுமையா இருக்கிறது? போன வாரம் ராணிகிட்ட போய் கேட்டோம். அதுக்கு அவர் அவங்க கணவரைப் பார்த் தாங்க. உடனே அவர், 'நீங்க யாரும் எங்களுக்கு ஓட்டுப் போடலைன்னு தெரியும். அதனால் உங்களுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? எங்க வேணும்னாலும் புகார் கொடுத்துக்கோங்க. உங்களுக்கு ஒண்ணும் பண்ண முடியாது. இனிமே இங்க வந்து கேட்கற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க’ன்னு கோபமா சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.

மனைவிக்குப் பதவி... கணவருக்கு அதிகாரம்!

எங்க ஊருல மட்டும் சுமார் 350 பேர், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்றோம். ஆனா கூலி இரண்டு மாசத்துக்கு அப்புறம்தான் வருது. அதுவும் குறைவா கொடுக்குறாங்க. தமிழக அரசு சொல்லி

மனைவிக்குப் பதவி... கணவருக்கு அதிகாரம்!

இருக்கும் பசுமை வீடுகள் திட்டத்துல வீடு வேணும்னு கேட்டோம். 'பணம் கொடுத்தாத்தான் உங்களுக்கு வீடு வாங்கிக் கொடுப்பேன்’னு சொல்றார் தாமோதரன். அந்த அம்மா ராணி ஓட்டுக் கேட்டதோட சரி, இதுவரைக்கும் எங்க பகுதிக்கு வந்து பார்த்ததே இல்லை. ராணி பேரைச் சொல்லிக்கிட்டு தாமோதரன்தான் தலைவரா வலம் வந்துக்கிட்டு இருக் கார். யார் தலைவரா இருந் தாலும் பரவாயில்லை... எங்க பிரச்னையைத் தீர்த்தாப் போதும்'' என்று புலம்பி னார்.

இது குறித்து நாம் ஊராட்சித் தலைவர் ராணியிடம் கேட்டோம். அப்போதுதான் ராணிக்குப் பதிலாகப் பேசிய தாமோதரன், சொன்னதுதான் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ''நான் அந்தப் பகுதிக்கு வர்றது இல்லைன்னு சொல்றது பொய். நான் அந்தப் பகுதி வழியாதான் தினமும் போவேன். குடிநீர்ப் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டுவிடும். எங்க வீட்டுக்காரம்மாவுக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்? அதனாலதான் நான் அந்த வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்றேன். இதைப் புரிஞ்சுக்காம என் மேல பழியைப் போடுறாங்க!'' என்று தன் பங்கு நியாயத்தை விளக்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ்விடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். ''பெண்களுடைய பதவிகளில் அவரது கணவர் உட்பட யாரும் தலையிடக் கூடாது. இது குறித்து விசாரித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று உறுதியளித்தார்.

சட்டத்தின் மூலம் பெண்களுக்குப் பதவிகளை உருவாக்கித் தரலாம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அந்தப் பெண்களின் கையில்தான் இருக்கிறது.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism