Published:Updated:

கல்லூரி மாணவர்களா.. சமூக விரோதிகளா?

டென்ஷனில் கோவை சட்டக் கல்லூரி

கல்லூரி மாணவர்களா.. சமூக விரோதிகளா?

டென்ஷனில் கோவை சட்டக் கல்லூரி

Published:Updated:
##~##
கல்லூரி மாணவர்களா.. சமூக விரோதிகளா?

ழத் தமிழர்கள் பிரச்னை, முத்துக்குமார் தீக்குளிப்பு, மூவருக்குத் தூக்குத் தண்டனை போன்ற சூழல்களில் எல்லாம் வீதிக்கு வந்து பெரும் போராட்டம் நடத்தி, இன உணர் வாளர்களின் பாராட்டுக்கு உள்ளானவர்கள் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள். ஆனால் சமீபத்தில் நடந்த விவகாரம் அத்தகைய பெருமை சேர்ப்பதாக இல்லை என்பது வருந்த வேண்டிய விஷயம்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 24-ம் தேதி காலையில் கோவை சட்டக் கல்லூரி முதல்வரின் அறை அருகிலேயே மாண வர்களுக்குள் பெரும் மோதல். உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தாக்குதல் நடந்திருக்கிறது. படுகாயம் அடைந்த வெள்ளைச்சாமி, ஆனந்தராஜ், சசிகுமார், சுந்தர், சிவா ஆகிய மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இப்படி ஒரு வன்முறை வெறியாட்டம் நடந்த காரணத்தை விசாரித்தோம். ''எங்க பசங் களுக்குள்ளே அடிக்கடி சண்டை வர்றதுக்கு முக்கியக் காரணமே பணம்தான். வசதியான பசங்க, பணத்தேவை இருக்கிற பசங்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கிறது உண்டு. வட்டி அதிகமாக் கேட்கிறதும், பணம் இல்லைன்னு ஓடுறதும், கொடுத்தாச்சுன்னு பிரச்னை பண்றதும் ரெகுலரா நடக்குற கதை.

கல்லூரி மாணவர்களா.. சமூக விரோதிகளா?

இளையராஜா என்பவரி டம் இருந்து ஜெயராமன் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினாராம். அதில் 47 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துட்டு மீதிப் பணத்துக்கு லேட் பண்ணியிருக்கார் ஜெயராமன்.

கல்லூரி மாணவர்களா.. சமூக விரோதிகளா?

இதுல ரெண்டு பேருக்கும் வாய்த் தகராறு. இளையராஜா தன்னோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரோட சேர்ந்துக்கிட்டு ஜெய ராமனை அடிச்சிருக்கார். டென்ஷனான ஜெயராமன் டீம், கத்தியைக் காட்டி அந்தப் பசங்களை மிரட்டி இருக்காங்க. இந்த விவகாரம் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிடுச்சு. உடனே எங்க பிரின்ஸ்பால் ரெண்டு டீமைச் சேர்ந்த 20 பேரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டார்.

இன்னைக்குக் காலையில ரெண்டு டீமைச் சேர்ந்த பசங்களையும் விசாரணைக்காக வரச்சொல்லி இருந்தார். வந்திருக்காங்க. அவரோட ரூமுக்கு வெளியே காத்திருந்தப்போ,  ரெண்டு டீமுக்கு நடுவிலும் வாய்த் தகராறு வந்திருக்கு. அப்படியே கைகலப்புல இறங்கினவங்க முதுகுல சொருகி யிருந்த இரும்புக் கம்பி, அரிவாள்களையும் எடுத்து தாக்கிக்கத் தொடங்கிட்டாங்க. தப்பிச்சு ஓடுன பசங்களை எல்லாம் ஆயுதம் வெச்சிருந்த பசங்க, விரட்டி விரட்டி அடிச்சதைப் பார்த்து நாங்க பதறிட்டோம். வெட்டுன பசங்க, போலீஸ் வர்றதுக்குள்ளே எஸ்கேப் ஆயிட்டாங்க'' என்று மாணவர்கள் பதற்றம் குறையாமல் நடந்ததை விவரித்தார்கள்.

கல்லூரிக்குள் மட்டுமின்றி வடவள்ளி, மருதமலை வட்டாரப் பொதுமக்களிடமும், போலீஸிடமும் கெட்ட பெயரையே சம்பாதித்து வைத்திருக்கின்றனர் இந்தக் கல்லூரியின் மாணவர்கள். ''எல்லாப் பசங்களையும் நாங்க குத்தம் சொல்லலீங்க. ஆனா நாலஞ்சு டீம் பசங்க ரொம்பவே ஆட்டம் போடுறாங்க. குரூப்பா வந்து உட்கார்ந்து சாப்பிட்டுட்டு பணம் கொடுக்காம கிளம்புறாங்க. கேட்டா, 'வக்கீல்கிட்டேயே ஃபீஸ் கேட்குறியா? கடையோட உன்னையும் சேர்த்துத் தூக்கிடுவோம்’னு எகத்தாளம் பண்றாங்க. பஸ்ல ஏறுனா கண்டக்டர், டிரைவர்கிட்ட சண்டை, ட்ராஃபிக் போலீஸ்கிட்ட

கல்லூரி மாணவர்களா.. சமூக விரோதிகளா?

சண்டை, வாடகைக்கு வீடு கொடுத்தவரை அடிக்கிறதுன்னு இவங்களோட அழிச்சாட்டியம் நீண்டுக்கிட்டே போகுது'' என்று புலம்புகிறார் மருதமலையில் கடை போட்டிருக்கும் ஒரு பெண்மணி.

இந்தப் பிரச்னை குறித்துப் பேசும் போலீஸாரோ, ''பணம் மட்டும் பிரச்னை இல்லைங்க. அதைத்தாண்டி சாதி விவகாரம்தான் பெருசா ஓடிக்கிட்டு இருக்கு. உன் சாதி பெருசா, என்னோடது பெருசான்னு அடிக்கடி மோதிக்கிறாங்க. படிக்கிற வயசுலேயே தங்களோட சாதித் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாளுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டி வம்பு இழுக்கிறாங்க. இதில் பணப் பிரச்னையும் சேர்ந்துகொண்டதால், சமூக விரோதப் போக்கு தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. மாணவர்கள் என்பதால் போலீஸ் பெரிய அளவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. அதனால் மிகவும் தெனாவெட்டாகத் திரிகிறார்கள். இவர்கள் பெற்றோர்கள் என்னதான் செய்கிறார்களோ...'' என்று டென்ஷன் ஆகிறார்கள்.

கோவை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ராமசாமி யிடம் பேசியபோது, ''நீங்க கேள்விப்பட்ட மாதிரி ஒட்டுமொத்தமாவே எங்க கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் பிரச்னையானவர்கள் இல்லை. சில பசங்கதான் அத்துமீறி நடந்துக்கிறாங்க. இன்னைக்கு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எந்த பிரச்னையும் வராம இருக்க, இப்போதைக்குக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விட்டிருக்கோம். இனி இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காது'' என்றார் நம்பிக்கையுடன்.

சட்டம் படிக்கிறவர்களே சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும்போது, எதிர்காலத்தை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism