Published:Updated:

10 மணிக்கு மேல புதுச் சரக்கு!

ஈரோடு ஹாட்

10 மணிக்கு மேல புதுச் சரக்கு!

ஈரோடு ஹாட்

Published:Updated:
##~##
10 மணிக்கு மேல புதுச் சரக்கு!

ரோட்டைச் சேர்ந்த 'குடி’மகன்கள் எல்லாம் ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறார்கள். காரணம், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், அஞ்சுரம் பாளையம் பகுதியில் சைலன்ட் ஆக இயங்கி வந்த போலி மதுபானத் தொழிற்சாலையை போலீஸ் கண்டு பிடித்திருப்பதுதான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ரெய்டு குறித்துப் பேசும் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி. லட்சுமி, ''ஈரோடு மாவட்டம் சென்னி மலை அரச்சலூர் பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் அதிகம். அதனால் அந்த ஏரியாக்களில் டாஸ்மாக் விற்பனை எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே டாஸ்மாக் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்களை அறிய விசாரணை நடத்திக்கொண்டு இருந்தோம்.

இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி, 'அரச்சலூர் அருகே இருக்கும் அஞ்சுரம்பாளையத்தில் போலி மதுபானங்கள் கடத்தப்படுகின்றன’ என்ற ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே எஸ்.பி. தலைமையில் இரவு 2 மணிக்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு வாகனங் களை நிறுத்திப் பரிசோதனை செய்தோம். அந்த வாகனங்களில் 1,020 குவார்ட்டர் பாட்டில்களும் 117 ஆஃப்  பாட்டில்களும் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட எட்டுப் பேரையும் கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கேட்டு நாங்களே ஆடிப்போய்ட்டோம்.

10 மணிக்கு மேல புதுச் சரக்கு!
10 மணிக்கு மேல புதுச் சரக்கு!
10 மணிக்கு மேல புதுச் சரக்கு!

ராசிபுரம், சேலம், ஆத்தூர், ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இவர்கள் போலி மதுபானங்களை விற்பனை செய்திருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் போலி மதுபானங்களை, இரவு 10 மணிக்கு மேல் கேட்டு வருபவர்களுக்குக் கொடுப்பார்களாம். பயங்கர வியாபாரம் நடந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் இவர்களது போலி மதுபானத் தொழிற்சாலை தொடங்கிய கொஞ்ச நாட் களுக்குள் இவர்களைக் கைது செய்துவிட்டோம். அதனால் பெரிய அளவுக்கு இன்னமும் இவர்களது நெட்வொர்க் பரவவில்லை. இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் பெரிய அளவில் பரவி இருப்பார்கள்.  உயிருக்கு ஆபத்தும் நேர்ந்திருக்கலாம்.

கூடிய விரைவில் இந்தத் தொழிற்சாலையில் இருந்து எந்தெந்த டாஸ்மாக் கடைகளுக்கு போலி மதுபானம் சப்ளை ஆனது, யார் யாருக்கு இதில் தொடர்பு உண்டு என்பதையும் கண்டுபிடித்து விடுவோம். இந்த போலி மதுபான ஆலையின் முக்கியமான குற்றவாளியையும் விரைவில் கைது செய்துவிடுவோம்'' என்று விவரித்தார் சுவாரஸ்யமாக. இப்போதும் ஈரோடு ஏரியா குடிமகன்களுக்கு அச்சம் தீரவில்லை. கையில் பாட்டிலை வாங்கியதும், 'இது நல்ல சரக்கா... இல்லையா’ என்று பல வகையான பரீட்சைகளும் செய்து பார்த்துத்தான் வயிற்றுக்குள் இறக்குகிறார்கள்.

நல்லா இருங்கப்பா...

- ச.ஆ.பாரதி, படங்கள்: மு.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism