Published:Updated:

அவரு கொடுத்த நம்பர் ஆஃப் ஆயிடுச்சு

ஈரோடு எம்.எல்.ஏ-வைத் தேடும் மக்கள்

அவரு கொடுத்த நம்பர் ஆஃப் ஆயிடுச்சு

ஈரோடு எம்.எல்.ஏ-வைத் தேடும் மக்கள்

Published:Updated:
##~##
அவரு கொடுத்த நம்பர் ஆஃப் ஆயிடுச்சு

'எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வான சந்திரகுமாரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை, நீங்களாவது உதவுங்களேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-66808002) அலறியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தே.மு.தி.க-வின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சந்திரகுமார் குறித்து எழுந்த புகாரை விசாரித்தோம். நம்மிடம் பேசிய ஈரோடு நகர பா.ம.க. தொண்டரணி துணைச் செயலாளர் சலீம், ''சந்திரகுமார் எலெக்ஷன்ல ஜெயிச்ச பிறகு 10 நாள் மட்டும்தான் எம்.எல்.ஏ. ஆபீஸ் பக்கம் வந்தார். அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் அவர் தலைவச்சே படுக்கிறதில்லை. எம்.எல்.ஏ-வைப் பார்க்கலாம்னு வீட்டுக்குப் போனா, அவரு சென்னையில இருக்கிறதாச் சொல்றாங்க.

கோடை வெயில் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் ஈரோட்டுல இப்பவே தண்ணீர் பிரச்னை

அவரு கொடுத்த நம்பர் ஆஃப் ஆயிடுச்சு

தலை விரிச்சி ஆடுது. இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது அவருக்குத் தெரியுமான்னே தெரியல. ஓட்டு கேட்டு வரும்போது 24 மணி நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்னு சொல்லி ஒரு செல் நம்பர் கொடுத்தார். எப்போ ஜெயிச்சாரோ, அப்பவே அந்த நம்பர் ஆஃப் ஆகிடுச்சி'' என்று வேதனைப்பட்டார். நாமும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டோம், மௌனமாகத்தான் இருந்தது.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ''முன்னாள் தி.மு.க. அமைச்சர் ராஜா இருந்த சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம்தான் இப்போது சந்திரகுமாருக்கு

அவரு கொடுத்த நம்பர் ஆஃப் ஆயிடுச்சு

கொடுத்திருக்காங்க.  அது ராசி இல்லாததுன்னு யாரோ அவருகிட்ட சொல்லி இருக்காங்க. அதனால அவர்,  ஆபீஸ் பக்கம் வர்றதே கிடையாது. வாஸ்துப்படி சட்டமன்ற அலுவலகத்தை மாத்திக்கிட்டு இருக்காங்க. அதுக்குப் பிறகாவது வருவாரா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குச் சந்திரகுமார் என்ன பதில் சொல்கிறார்?

''நான் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வருவதில்லை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பிக்கிட்டு இருக்காங்க. ராத்திரி 10 மணிக்குக்கூட அங்கே மனு வாங்கி இருக்கேன். அப்போ யாராவது வந்து என்னை பாராட்டி னாங்களா? எந்த நேரத்திலும் போனை நான் ஆஃப் பண்ணுவது கிடையாது. நான் வேலையாக இருந்தால்கூட, என் உதவியாளர் போனை எடுத்துப் பதில் சொல்லிவிடுவார்.

குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க அதிகாரி களோடு ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரமே அந்தப் பிரச்னை தீர்ந்திடும். எம்.எல்.ஏ. ஆபீஸைப் பொறுத்தவரை நான் வாஸ்துப்படி எந்த மாற்றமும் செய்யல. செய்யப் போறதும் இல்ல. ஊருக்கெல்லாம் இளிச்சவாயன் யாருன்னா, அது கேப்டன் கட்சி எம்.எல்.ஏ-தான். அதனாலதான் வாய்க்கு வந்தபடி இல்லாததையும் பொல்லாததையும் சொல்றாங்க. என்னமோ சொல்லிட்டுப் போகட்டும், விடுங்க. என்னைப் பத்தி கேப்டனுக்குத் தெரியும்'' என்று சொன்னார்.

அவரு கொடுத்த நம்பர் ஆஃப் ஆயிடுச்சு

கேப்டனுக்குத் தெரிஞ்சா மட்டும் போதாது சார், உங்க தொகுதி மக்களுக்குத் தெரியணும்.

                     - ம.சபரி

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism