ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை?

வேலூர் மக்களின் விடை கிடைக்காத கேள்வி

##~##
சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை?

''கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வேலூர் மாநகராட்சியில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடை, பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களும் தகன மேடையைத் திறக்காமல் காலம் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள்'' - ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044- 66808002) இப்படி ஒரு பதிவு. 

கடந்த முறையும் இப்போதும் வேலூர் மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீனிவாச காந்தியிடம் விசாரித்தோம். ''ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எரிவாயு தகன மேடை அமைக்கத் தீர்மானம் போடப்பட்டது. அதன்படி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓர் ஆண்டுக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை தகன மேடை திறக்கப்படவே இல்லை. இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறேன். கடந்த கூட்டத் தில் நான் கேள்வி எழுப்பியபோது, 'இன்னும் 10 நாட்

சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை?

களில் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் முதல்வர் திறந்துவைக்க இருக்கிறார்’ என்று சொன்னார்கள். ஒரு மாதம் கடந்த பிறகும் திறந்தபாடில்லை. திறக்காமல் காலம் தள்ளிக்கொண்டே போனால், தகன மேடையும் கட்டடங்களும் பாழாகிவிட வாய்ப்பு உள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கா னோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். யாராவது இறந்துவிட்டால், பிணத்தைச் சொந்த ஊருக்குக்

சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை?

கொண்டு செல்ல முடியாமல், பாலாற் றங்கரை சுடுகாட்டிலேயே இறுதிக் கடன்களை செய்கிறார்கள். அப்போது அவர்கள் படும் சிரமங்களை எழுத்தில் சொல்ல முடியாது. எரிவாயு தகன மேடை பயன்பாட்டில் இருந்தால், அதிகப் பொருட்செலவு மற்றும் அலைச்சல் இன்றி அவர்கள், வேண்டியவர்களுக்கான இறுதிக் கடன்களையாவது நிம்மதியாகச் செய்வார்கள். தகன மேடையைத் திறந்துவைப்பது சென்டிமென்டாக நல்லது இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டு காலம் தாழ்த்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இனியும் தாமதித்தால், காங்கிரஸ் கட்சியின் சார்பில்

சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை?

போராட்டம் நடத்துவோம்'' என்றார் ஆதங்கத்துடன்.

வேலூர் மாநகராட்சி யின் முன்னாள் மேயர் ப.கார்த்திகேயனிடம் கேட்ட போது, ''பணிகள் முடிந்த நிலையில் தகன மேடையை அமைத்த ஒப்பந்ததாரர் சோதனை செய்துதர தாமதப்படுத்தினார். சில வேலைகள் முடிக்கப் படாமல் இருந்தன. அதனால்தான் கடந்த ஆட்சியில் எரிவாயு தகன மேடையை உரிய நேரத்தில் திறக்க முடியவில்லை. எங்கள் ஆட்சியே தொடர்ந்து இருந்தால், இந்த நேரம் எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து இருப்போம்!'' என்றார்.

தற்போதைய மேயர் கார்த்தியாயினி, ''புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு எல்லா நலத் திட்டங்களையும் உரிய நேரத்தில் செய்துகொண்டுதான் இருக்கிறோம். எரிவாயு தகன மேடையை விரைவில் பயன் பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது'' என்றார்.

அதுதான், ஆனா... எப்போங்க?

- ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்