ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சம்பாதிக்க சினிமா... செலவழிக்க கட்சி!

வந்தாச்சு புதிய இயக்கம்

##~##
சம்பாதிக்க சினிமா... செலவழிக்க கட்சி!

கொங்கு மண்டலத்தைக் கலக்கிய சில கட்சி​களின் நிலைமையே கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இருந்து, 'தீரன் இளைஞர் இயக்கம்’ என்ற புதிய அமைப்பு உருவாகி இருக்கிறது. 

புதிய இயக்கத்தின் நிறுவனத் தலைவரான ராஜா அம்மையப்பனை சந்தித்தோம்... ''கொ.மு.க-வில் ஒருங்​கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராக இருந்தேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதி வேட்பாளராகவும் நின்றேன். ஆனால் இப்போது எனக்கு கொ.மு.க-வின் செயல்பாடுகள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்னைப் போல பலரும் இந்த இயக்கத்துக்காக சொந்தக் காசைப் போட்டு கட்சியை வளர்த்தோம். இரவு பகலாக உழைத்தோம். ஆனால், கொங்கு பேரைச் சொல்லி தலைவர்கள் மட்டும்தான், தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள். மக்களுக்கும் மண்ணுக்கும் அவர்கள் எதுவுமே

சம்பாதிக்க சினிமா... செலவழிக்க கட்சி!

செய்யவில்லை. கொ.மு.க-வில் பெஸ்ட் ராமசாமிக்கும், ஈஸ்வரனுக்கும் நடந்த ஈகோ மோதல், அந்தக் கட்சியையே குட்டிச் சுவராக்கிவிட்டது. கொங்கு மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பட்டியல் போடச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

கவுண்டர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட அவர்கள் முன்வைக்கவில்லை. கவுண்டர் சமுதாயத்தில் உள்ள எத்தனையோ இளைஞர்கள் படிக்கக்கூட வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். கொங்கு பேரைச் சொல்லி பணம் சம்பாதித்து, காலேஜ் நடத்தும் யாராவது எங்க ஏழைப் பசங்களுக்கு இலவசக் கல்வி கொடுத்திருக்காங்களா? சாதியைப் பணம் சம்பாதிக்கத்தான் பயன்படுத்திக்கிட்டாங்க. இப்போது சட்டமன்றத்தில் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ-க்களும் ஒன்பது அமைச்சர்களும் இருக்​காங்க. அதோடு கொங்கு பேரிலேயே கட்சி நடத்தும் தனியரசுவும் இருக்கிறார். இவர்களில் யாராவது, ஒரு நாளாவது இந்த சமுதாய மக்கள் பிரச்னையைப்பத்தி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார்களா? அதனால்தான், கொ.மு.க-வில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறேன்.

சம்பாதிக்க சினிமா... செலவழிக்க கட்சி!

அரசியலை வைத்து எந்தக் காலத்திலும் பணம் சம்பாதிக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அதனால் பணம் சம்பாதிப்பதற்காக, விஜயகாந்த் பாணியில் நானும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். இப்போது இரண்டு படங்களில் வில்லனா நடிக்கிறேன்.

தீரன் சின்னமலையோட வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளேன். சினிமாவில் நான் சம்பாதிக்கும் பணத்​தையும், நாங்கள் புதிதாகத் தொடங்கி இருக்கும் இயக்கத்துக்காகவே செலவு செய்யப்​போகிறேன்.

சம்பாதிக்க சினிமா... செலவழிக்க கட்சி!

கொங்கு பேரைச் சொல்லி இனி யாரும் மக்களை ஏமாற்றவிட மாட்டோம். இது நாள் வரை கொ.மு.க. அரசியலை எப்படி எல்லாம் வியாபாரமாக்கியது என்பதை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம்'' என்று கொந்தளித்தார்.

ராஜா அம்மையப்பன் குற்றச்சாட்டுக்கள் பற்றி கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசுவிடம் கேட்டோம். ''உண்மையில் ராஜா அம்மையப்பன் ரொம்பவும் பாவங்க. கொ.மு.க-வோட கணக்குப் பிள்ளையாகத்தான் அவரை வைச்சிருந்தாங்க. நான் சாதிக்காக குரல் கொடுக்கவில்லை என்று அவர் சொல்வது உண்மைதான். நாங்கள் நடத்துவது சாதிக்​கான இயக்கம் அல்ல. அனைத்து சமுதாய மக்களின் ஆதரவும் இருந்ததால்தான், நான் எம்.எல்.ஏ. ஆனேன். அரசியலைப் பற்றித் தெரியாதவர்கள்தான் புதிய இயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்​டாமே'' என்றார் கடுப்பாக.

கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமியிடமும் பேசி​னோம். ''கோஷ்டிப் பூசல் இல்லாமல், தமிழ்நாட்டில் எந்தக் கட்சி இருக்குதுன்னு சொல்லுங்க? எங்க கட்சியில் என்னை சிலருக்குப் பிடிக்கும். ஈஸ்வரனை சிலருக்குப் பிடிக்கும். இதனால் கட்சி​யில் பெரிய பாதிப்பு எதுவும் வந்துவிடாது. தீரன் சின்ன​மலை பற்றி நாங்கள் நிறைய பேசி இருக்கோம். இன்று ராஜா அம்மையப்பன் திடீரெனக் கிளம்பி இருப்பது வேடிக்கையாத்தான் இருக்​குது. கொங்குக் கட்சிகள் ஒன்றுசேர வாய்ப்பே இல்லை. ஆனால், அவர் சொல்வது போல கட்சியால் நாங்கள் எதுவும் சம்பாதிக்கவில்லை, இழந்ததுதான் அதிகம். ராஜா அம்மையப்பன் ஆரம்பித்​திருக்கும் இயக்கம் பத்தோடு பதினொன்றாக இருக்குமே தவிர, எதையும் சாதிக்க முடியாது. எவ்வள​வோ பார்த்துட்டோம். இதையும் பார்ப்போம்...'' என்றார் கொஞ்​சமும் அலட்டிக்​கொள் ளாமல்.

இப்பவே கண்ணைக் கட்டுதே!

          - ம.சபரி    படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்