Published:Updated:

போராட வந்த தேவதைகள்!

பரிதாபத்தில் செவிலியர் போராட்டம்

போராட வந்த தேவதைகள்!

பரிதாபத்தில் செவிலியர் போராட்டம்

Published:Updated:
##~##
போராட வந்த தேவதைகள்!

ளிச்சிடும் சீருடை... சிரிப்பு முகம்... துறுதுறு நடையுடன் மிளிரும் நர்ஸ்களின் சேவையை யாரும் பாராட்டாமல்  இருக்கமுடியாது. நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அவர்கள் கருணை உள்ளம் கொண்ட தேவதைகள். அவர்கள்தான், தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தத்துடன் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். சென்னையில் ஐந்து தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மருத்துவமனைகளில் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்ட நிலையில்  மியாட் மற்றும் அப்பல்லோவில் மட்டும் 9-ம் தேதி வரை போராட்டம் தொடர்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை சென்ட்ரல் விக்டோரியா ஹால் முன்பு போராட்டத்தில் ஈடுபட் டிருந்த செவிலியர்களைச் சந்தித்தோம். ''ஒரு வார்டுக்குக் குறைந்தபட்சம் ஆறு செவிலியர் களையாவது பணியில் ஈடுபட வைக்கவேண்டும். ஆனால் 15, 20 படுக்கைகள் இருக்கும் வார் டுக்கு இரண்டு செவிலியர்களை மட்டுமே நியமிக்கிறார்கள். இரவு நேரப் பணிக்கு ஒரு நாளைக்கு 25 ரூபாய் மட்டுமே கூடுதல் சம்பள மாகத் தருகிறார்கள். அதை 100 ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும். அரசு நிர்ணயித்த ஊதியத்தை எங்களுக்குத் தருவது இல்லை, மேலும் பஞ்சப்படியும் கிடையாது. இதை எல்லாம் எதிர்த்து, தொழிலாளர் வாரியத்தில் போய்க் கேட்டோம். வாரிய அதிகாரிகள் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டபோது, 'புதிய செவிலியர்களுக்கு 9,500 ரூபாய் சம்பளம் தருவதாகவும் பணியில் இருக் கும் மற்ற செவிலியர்களுக்கு அவர்களின் அனுபவ அடிப்படையில் சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொண்டதாகவும்’ மருத்துவமனை சார்பாகத் தெரிவித்து இருக்கிறார்கள். புதிய செவிலியர்களுக்கு 15,000 ரூபாய் சம்பளம் கேட்டுப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கி றோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயப் போவதில்லை'' என்றார் செவிலியர் சங்க இணைச்செயலர் மோனிகா.

போராட வந்த தேவதைகள்!

அடுத்துப் பேசிய செவிலியர் இளங்கண்ணன், ''நான் இந்த மருத்துவமனையில் சேர்ந்து  இரண்டு வருடங்கள் ஆகின்றன. வந்ததிலிருந்து 5,000 ரூபாய் மட்டும்தான் மாதச் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு இருக்கிறேன். எங்களின் சம்பளப் பிரச்னையைக் கடந்த மூன்று மாத காலமாகவே அவர்கள் முன்பு வைத்தோம். இதற்காக 20 முறை மீட்டிங் போட்டாயிற்று. சம்பள உயர்வு கொடுப்பதாக அவர்கள் கூறவே இல்லை. அதனால்தான் போராட் டம் நடத்தப் போவதாக அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால், மருத்துவமனை சார்பாக 'இன்னும் ஏழு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு நாங்கள் சொல்கிறோம்’ என்று கூறினார்கள். அதன்படி போராட்டம் நடத்தாமல் அவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தோம். ஏழு நாட்கள் முடிந்ததும், சம்பள உயர்வு தரமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். இதையடுத்துதான் தமிழ்நாட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த செவிலியர்களும் மார்ச் 3-ம் தேதி கிரீம்ஸ் ரோட்டில் போராட்டத்தில் இறங்கினோம்.

போராட வந்த தேவதைகள்!

எங்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்ட செவிலியர்களின் தட்டுப் பாட்டைச் சமாளிக்க, பிற மாநிலக் கிளைகளில் செவிலியருக்காகப் படித்துக் கொண்டிருக்கும் மாண வர்களைப் பணியில் அமர்த்தி இருக்கிறார்கள். எந்த முன் அனுபவமும் இல்லாத, மாணவர்களைப் பணியில் வைத்திருப்பதால் நோயாளி களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. மருத்துவமனைக்குள் 6-ம் தேதிவரை போராட்டம் நடத்திப் பார்த்தோம். எந்தப் பதிலும் இல்லாததால்தான் இன்று சென்னை சென்ட்ரல் அருகே விக்டோரியா மெமோரியல் ஹால் முன்பு போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்'' என்றார்.

போராட வந்த தேவதைகள்!

செவிலியர் சின்னமுத்து, ''இப்போது பணிக்கு அமர்த்தியிருக்கும் மாணவர்களை, டியூட்டி பார்க்க வில்லை என்றால் சான்றிதழ் தரமாட்டோம் என்று மிரட்டி அழைத்துவந்திருக்கிறார்கள். கிட்டத் தட்ட

போராட வந்த தேவதைகள்!

நாங்கள் எல்லோரும் அடிமைகளாக இருக் கிறோம். போராட்டத்தில் இறங்கியிருக்கும் நிறையப் பேரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்'' என்று பதறினார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு குரல் எழுப்பி இருக்கும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்தரநாத்தை சந்தி தோம். ''மருத்துவமனை விடுதிகளில் தங்கியிருக்கும் செவிலியர்களுக்குத் தண்ணீர் வசதி, மின்சார வசதி போன்றவைகூட முறைப்படி மருத்துவமனைகள் செய்து கொடுப்பது இல்லை. பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகளை எடுக்காமல், மிரட்டுவது தவறானது. படிக்கும் மாணவி களை வைத்து வேலை வாங்குவதும் தவறான விஷயம். இந்தப் பிரச்னை இப்படியே போனால், தொழிற்சங்கத்தோடு இணைந்து போராட்டம் நடத்த வேண்டிவரும்'' என்றார்.

செவிலியர்களின் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் செயலாளர் தா. பாண்டியனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போராட்டம் குறித்து விளக்கம் பெற அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப்

சி. ரெட்டியைச் சந்தித்தோம். ''எங்களுடைய மருத்துவமனைக் கட்டமைப்புகள் எல்லாமே சரியாகத்தான் இருக்கின்றன. செவிலியர்கள் தேவை இல்லாமல் போராட்டம் நடத்துகிறார்கள். சம்பளமும் சரியாகத்தான் வழங்குகிறோம். நாங்கள் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. மருத்துவமனை நிர்வாகத்தின் பிரச்னையில், அரசியல்வாதிகளும், வெளியாட்களும் கலந்துகொண்டு போராட்டம் நடத்துவது தேவையில்லாதது'' என்றார்.

பல மருத்துவமனைகளில் போராட்டம் சுமுகப் பேச்சுவார்த்தை மூலம் முடிவடைந்துவிட்டது.

மற்ற மருத்துவமனைகளால் முடியும்போது, அப்பல்லோவால் முடியாதா?

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்:   க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism