Published:Updated:

மிரட்டும் கவுன்சிலர்கள்... ரசிக்கும் மேயர்!

வேலூர் மாநகராட்சி வில்லங்கம்

மிரட்டும் கவுன்சிலர்கள்... ரசிக்கும் மேயர்!

வேலூர் மாநகராட்சி வில்லங்கம்

Published:Updated:
##~##
மிரட்டும் கவுன்சிலர்கள்... ரசிக்கும் மேயர்!

ட்டசபையில் ஆளும் கட்சியுடன் தொடங்கிய தே.மு.தி.க-வின் மோதல், ஒவ்வொரு மாநகராட்சி கூட்டங்களிலும் சரவெடியாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. லேட்டஸ்ட் மோதல் வேலூர் மாநகராட்சியில். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்துப் பேசும் தே.மு.தி.க கவுன்சிலர் ரேணுகோபால், ''தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சி என்றாலும் அ.தி.மு.க-வினரை மிகவும் கண்ணியத்தோடும், மரியாதையோடும்தான் நடத்தினார்கள். ஆனா, இப்போ நடக்கிறதைப் பார்த்தா வேதனையா இருக்கு. போன மாசம் 28-ம் தேதி மாநகராட்சிக் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர் சுகுமார், 'மாநகராட்சியில் இருக்கிற அதிகாரிங்க யாரும்  உருப்படியா எதுவும்வேலை செய்றது இல்லை. அவங்க எல்லாம் தீவிர தி.மு.க. விசுவாசிகளா இருக்காங்க. அதனால மேயர் அம்மா தலையிட்டு, அவங்க எல்லோரையும் மாத்தணும்’னு சொன்னார். கன்னத்துல கை வச்சிக்கிட்டு அவர் பேசுறதை ரசிச்சிக்கிட்டு இருக்காங்க மேயர். அரசு அதிகாரிகளை மாற்றம் செய்யும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?

மிரட்டும் கவுன்சிலர்கள்... ரசிக்கும் மேயர்!

வேலூரில் தாங்க முடியாத அளவுக்கு மின்தடை இருக்குது. அதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மெழுகுவத்தி ஏந்தி கூட்டத்துக்கு வந்தாங்க.

மிரட்டும் கவுன்சிலர்கள்... ரசிக்கும் மேயர்!

நாங்க லாந்தர் விளக்கை எடுத்துட்டு வந்தோம். இதுல என்ன தப்பு இருக்கு? அ.தி.மு.க. கவுன்சிலர் துரையரசன் எங்களைக் கண்டித்து கோஷம் போட்டு, கேவலமான வார்த்தைகளால் திட்டவும் ஆரம்பிச் சுட்டார். நான் கொண்டு வந்த லாந்தர் விளக்கை காலால் எட்டி உதைத்து உடைச்சுட்டார். அந்த அடாவடிச் செயலை மேயர் கண்டிக்காம வேடிக்கைதான் பார்த்தாங்க. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதும், அதை மேயர் ரசிப்பதும் வேதனையா இருக்கு.

சட்டசபையில் எங்க தலைவர் கேப்டன் நாக்கை மடிச்சிப் பேசினாருன்னு ஒரு காரணத்தைச் சொல்லி எவ்வளவு பிரச்னை செஞ்சாங்க. மாநகராட்சிக் கூட்டத்துல லாந்தர் விளக்கை காலால் எட்டி உதைச்சி உடைச்ச அ.தி.மு.க. கவுன்சிலரை என்ன செய்யப் போறாங்க?'' என்று கோபத்தில் கண் சிவந்தார்.

லாந்தர் விளக்கை உடைத்ததாகச் சொல்லப்படும் அ.தி.மு.க. கவுன்சிலரான துரையரசனிடம் கேட்டபோது,

''தே.மு.தி.க. கவுன்சிலர் லாந்தர் விளக்கை தூக்கிட்டு மேயரை நோக்கிப் போனாரு. லாந்தர் விளக்கால் மேயரை அடிச்சிட்டாருன்னா என்ன பண்றது? மேயரை காப்பத்தணுமே! அதுக்காகத்தான் விளக்கை உதைச்சி உடைச்சேன். தற்காப்புக்காக செஞ்ச விஷயத்தை பெருசு பண்றாங்க..'' என்றார் சாதாரணமாக.

சரி.. இதற்கெல்லாம் மேயர் கார்த்தியாயினி என்ன பதில் சொல்கிறார்?  ''லாந்தர் உடைஞ்சி போனதைப் பத்தி என்கிட்ட யாரும் புகார் பண்ணவே இல்லை. புகார் செஞ்சாத்தானே நான் நடவடிக்கை எடுக்க முடியும்?'' என்று கேட்டார்.

சபாஷ், சரியான கேள்வி!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism