Published:Updated:

ஓ.... லாஸ்யா!

காங்கிரஸ் - அ.தி.மு.க. காதல் சடுகுடு

ஓ.... லாஸ்யா!

காங்கிரஸ் - அ.தி.மு.க. காதல் சடுகுடு

Published:Updated:
##~##
ஓ.... லாஸ்யா!

ட்சியைத் தாண்டிய காதல் திருமணம் அது. கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி-யான தம்பிதுரையின் மகள் லாஸ்யாவை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. வேலூர் ஞானசேகரனின் மகன் நவீன் கடந்த 4-ம் தேதி திருப்பதியில் காதல் மணம் செய்துகொண்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தம்பதியரை வாழ்த்திவிட்டு, காதல் பிறந்த கதை கேட்டோம். சங்கோஜத்துடன் பேசினார் நவீன். ''ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ். முடிச்சிட்டு, எம்.டி. ரேடியாலஜி படிச்சிட்டு இருந்தேன். லாஸ்யா அப்போ எம்.பி.பி.எஸ். தேர்டு இயர் படிச்சிட்டு இருந்தா. அவங்க வகுப்புக்கு நான் கிளாஸ் எடுப்பேன். கிளாஸுக்குப் போனாலே அதிகமா கேள்விதான் கேட்பேன். நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற ஒரேஆள் இவங்கதான். மனசுக்குள்ள பூ பூத்தது, மணி அடிச்சது.

ஒருநாள் கிளாஸ் முடிச்சிட்டு வெளியே வந்தபோது, 'உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. கல்யாணம்

ஓ.... லாஸ்யா!

பண்ணிக் கலாமா?’னு கேட்டேன். முழிச்சி முழிச்சிப் பார்த்துட்டு எதுவுமே சொல்லாமப் போயிட் டாங்க.  எந்தப் பதிலும் வரலை.

நான் டல்லா இருக்கிறதைப் பார்த் துட்டு, அப்பா என்னன்னு விசாரிச்சார். மனசுல இருந்ததை எல்லாம் அப்படியே கொட்டிட்டேன். அவருதான் விசாரிச்சிட்டு, 'நவீன்.. அது தம்பிதுரை எம்.பி-யோட பொண்ணு’னு தயக்கமா சொன்னார். 'அதனால என்னப்பா?’னு அழுத்திக் கேட் டேன். 'சரிப்பா... உன் விருப்பம் எதுவா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம்தான்’னு அப்பா சொல்லிட் டார்.

ஆனா, லாஸ் அதுக்குப் பிறகும் ரெண்டு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. திடீர்னு ஒரு நாள் எனக்கு போன் பண்ணி, 'எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. ஆனா எங்க வீட்டை நினைச்சாத்தான் பயமா இருக்கு’னு சொன்னாங்க.

அதுக்குப் பிறகு லாஸ் வீட்டுலேயும் விஷயத்தைச் சொன்னோம். அவங்க அப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்ல. நிறையப் பேர் பேசினதுக்கு அப்புறம் ஓகே சொன்னார். இரண்டு வருஷங்களுக்கு முந்தியே நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனா அதுக்குப் பிறகு கல்யாணத்தைப் பத்தி எப்போ பேச்சு எடுத்தாலும், 'அம்மாகிட்ட டேட் கேட்டிருக்கேன்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’னு ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டே இருந்தார். அதுக்குப் பிறகு, 'சில காரணங்களால் என்னால் கல்யாணத் துக்கு வரமுடியாது. நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க’ன்னு சொல்லிட்டார். வேற வழி இல்லாமத்தான் நாங்க திருப்பதியில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். தம்பி துரை அங்கிளைத் தவிர அவங்க வீட்டுல எல்லோருமே கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. இனி காலம் முழுக்க என் லாஸ்சியாவை இதே சிரிப்போடு பார்த்துக் கணும். பார்த்துக்குவேன்'' என்று சொல்ல, லாஸ்யாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.!

வாழ்க மணமக்கள்!

- கே.ஏ.சசிகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism