Published:Updated:

அது, பாச மகனுக்கான கட்சி!

பா.ம.க-வுக்கு வேல்முருகன் புது விளக்கம்

அது, பாச மகனுக்கான கட்சி!

பா.ம.க-வுக்கு வேல்முருகன் புது விளக்கம்

Published:Updated:
##~##
அது, பாச மகனுக்கான கட்சி!

மிழக வாழ்வுரிமைக் கட்சி ஊருக்கு ஊர் பொதுக்கூட்டம் நடத்தி, பா.ம.க-வுக்கு எதிராகக் கொந்தளித்து வருகிறது. பாட்டாளிக் கட்சி யினரை கடுமையாக விமர்சிப்பதால், வேல்முருகன் கூட்டம் நடக்கும் இடத்தில் எல்லாம் கலவரம் உரு வாகும் அளவுக்கு நிலவரம் இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த வாரம் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் அப்பா அய்யனாரைத்தான் முதலில் பேச அழைத்தார்கள். ''நானும் பா.ம.க-காரன்தான். 25 வருஷமா சாதி சாதின்னு சொல்லி பட்டிதொட்டியெல்லாம் பா.ம.க-வை வளர்த்தோம். வீரப்பன் உசுரோட இருக்கும்போதுதான் சம்பாதிச்சுக் கொடுத்தான். அவன் செத்துப்போயிட்டான். அவனுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கு. அவுங்க வாழ்க்கை என்னாவது? அந்தப் பொம்பளை எப்படிப் பிழைப்பா? அவளும் வன்னியர் பிள்ளைதானே என்று கொஞ்சம்கூட சிந்திக்காம,  'சந்தனக்காடு’ நாடகம் போட்டு கோடி கோடியா சம்பாதிச்சுட்டாங்க. வீரப்பன் செத்த

அது, பாச மகனுக்கான கட்சி!

இழவுக்குக்கூட வரலை. ஆனா, வன்னியர்களின் காவல் தெய்வமுன்னு வெக்கமே இல்லாம வீரப்பன் படத்தைப் போட்டு சம்பாதிக்கிறாங்க. வாடிய பயிர் போல இருந்த நமக்கு உரமாக வேல்முருகன் கிடைத்துள்ளார். இனி நாம் செழிப்பாக இருப்போம்'' என்றார் சூடாக.

மாநில இணை பொதுச்செயலாளர் போரூர் சண்முகம், ''சுகாதாரத் துறை மந்திரியாக இருந்த அன்புமணிக்கு  மருத்துவக் கல்லூரியில் ஏராளமான ஸீட்கள் உண்டு. அதை வடநாட்டவருக்குக் கூவிக்கூவி விற்றார்கள். ஒரு இடத்தையாவது தமிழர்களுக்குத் தந்திருப்பாரா? நடிகை ஒருவரின் வீட்டை ஐந்து கோடிக்கு வாங்கி இருக்கிறார். திராவிடக் கட்சி களை ஒழிப்பேன் என்று கூறுகிறார். முதலில் இவர் வளர்ந்தால்தானே மற்ற கட்சிகளை ஒழிப்பதற்கு?'' என்று கிண்டல் அடித்தார்.

அடுத்துப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி, ''என்னை மிரட் டியவர்களுக்குச் சொல்கிறேன்.. நான் தைலாபுரம் தோட்டத்தில் பண்ணையத்துக்கு இருந்தேன். ராமதாஸ் காலில் மண் பட்டால்கூட, என் மடியில் வைத்து துடைப்பேன்.  ராமதாஸை தெய்வமாக நினைத்த என்னையே கட்சியைவிட்டு அனுப்பி ட்டாங்க.

அன்புமணி கட்சியில் உறுப்பினரா? மரம் வெட்டினாரா? சிறைக்குச் சென்றாரா? என்னை போலீஸ் அடித்ததால் கால்நரம்பு பாதித்து, முதுகுத்தண்டு பிரச்னையுடன் இப்போதும் அவஸ்தைப்படுகிறேன். இப்படி, கட்சிக்காக கஷ்டப் பட்ட என்னிடம், ஐந்து கோடி கொடுத்தாத்தான் ஸீட்’ என்று, வேட்பாளர் ஆய்வுக் கூட்டத்தில் சொன்னார் அன்புமணி. இவர்தான் நாட்டைத் திருத்தப் போகிறாரா? வேல்முருகன்தான் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்'' என்று விளாசினார்.

அது, பாச மகனுக்கான கட்சி!

இறுதியாகப் பேசிய வேல்முருகன், ''உழைப்ப வனுக்கு பா.ம.க-வில் மரியாதை இல்லை. 92-ல் ஈழ மக்களுக்கான வாழ்வுரிமை மாநாடு நடத்திய கட்சி அது.  இன்று, பாச மகனுக்கான கட்சி. இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த 21 குடும்பங்களுக்கு 10 லட்சத்தில் வீடு கட்டித் தாருங்கள் என்று கேட்டேன். இதைக் கேட்டதற்குத்தான் கட்சியில் இருந்து நீக்கினார்கள். அந்தக் குடும்பங்கள் உதவி கேட்டபோது அவர்களைக் கழுத்தைப்

பிடித்து வெளியே தள்ளியவர் ராமதாஸ். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வாங்கி கொடுத்து இருப்பாரா? சாதிக் கட்சியாக பார்க்கப்பட்ட பா.ம.க-வை, தமிழர்களுக்காகப் போராடும் கட்சியாக மாற்றினேன். நீங்கள் என்ன மாற்றினீர்கள்? ஒன்றரை ஏக்கராக இருந்த தைலாபுரம் தோட்டத்தை 120 ஏக்கராக மாற்றி இருக்கிறீர்கள்.

தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தாரே ராமதாஸ். அப்போ... அன்புமணி யார்? புதுவை மாநில பா.ம.க. தலைவர் தன்ராஜ் உங்களுக்குச் சொந்தம் இல்லையா? இதுவரை ராமதாஸ் ஒரு சத்தியத்தையாவது காப்

பாற்றியது உண்டா?

'பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க-வை வேரடி மண்ணோடு அழிப்பேன்’ என்றார். மறுநாளே ஸ்டாலினிடம் தன் மகனுக்குப் பதவி கேட்கச் சொல்லி என்னையும், ஜி.கே.மணியையும் அனுப்பினார். அன்று வீரபாண்டியாரைச் சந்தித்த அன்புமணி, 'அங்கிள்... எனக்கு ராஜ்யசபா ஸீட் வாங்கித்தாங்க அங்கிள்’ என்று கேட்டார்.

இப்போது ராமதாஸ் புதிதாக ஒரு சத்தியம் செய்து இருக்கிறார். வானம் உள்ள வரை, கடல் உள்ள வரை, பூமி உள்ள வரை இனி யாருடனும் கூட்டணி கிடையாது என்று சொல்கிறார். திடீரென்று ஞானோதயம் வந்து, வன்னியர் சங்க மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். தன்னை வளர்த்து விட்ட வாழப்பாடியாரையும், வீரபாண்டி யாரையும் பதம் பார்த்தவர்தான் ராமதாஸ்'' என்று முடிக்க, மிளகாய் பஜ்ஜி கடித்துத் தின்ற திருப்தியில் கலைந்தனர் தொண்டர்கள்.

- வீ.கே.ரமேஷ்,

ம.சபரி

படங்கள்: எம்.விஜயகுமார்,

மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism