Published:Updated:

வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முறைகேடுகள்

வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முறைகேடுகள்

Published:Updated:
##~##
வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?

ரு காலத்தில் இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், இன்று ஊழல் முறைகேடுகளால் சிறுமைப்பட்டுக் கிடக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அரசியல் கட்சிகளும் போராட் டம் நடத்தி வருகின்றனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி என்னதான் நடக்கிறது?

''துணைவேந்தராக மீனா பொறுப்பு ஏற்றபிறகு, பணம் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார். குறிப்பாக, பிரின்டிங் பணிகளில் ஏராளமான முறைகேடுகள். முன்பு, இரண்டு ரூபாய்க்கு அச்சிடப்பட்ட ஒரு கவர், இப்போது ஆறு ரூபாய்க்கு அச்சிடப்படுகிறது. முன்பு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருப்புப் பட் டியலில் இடம்பெற்ற ஒரு நிறுவனத்துக்கு அச்சுப் பணி ஆர்டர் கொடுத்துள்ளார். அதோடு, எந்த அனு பவமும் இல்லாத ஒரு புதிய அச்சகத்துக்கு, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பட்டச் சான்றிதழ்களில் தனது நிறுவனப் பெயர் மற்றும் விலாசத்தையும் பழக்கதோஷத்தில் அச்சடித்து விட்டதால், அந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்த முடியாமல் பல்கலைக் கழகத்துக்கு நிதி இழப்பும், கால விரயமும் ஏற்பட்டது.

வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?
வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?

பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகளில் தேவையற்ற பொருட்களை வாங்கி பணவிரயம் செய்கிறார் மீனா. துணை வேந்தருக்கு ஏற்கெனவே நல்ல நிலையில் ஒரு சொகுசுக்கார் இருக்கும்போதே, டாடா சஃபாரி கார் ஒன்றையும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறார். துணைவேந்தர் அறை மற்றும் இல் லத்தை அலங்கரிக்க மட்டும் 30 லட்சம் ரூபாய்வரை பணம் வாரி இறைக்கப் பட்டுள்ளது.

இவர் இதற்கு முன் பணியாற்றிய கல்லூரி மற்றும் திருச்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான கல்லூரிகளிடம் கோர்ஸ் கட்டணம்கூட வாங்காமல் ஏராள மான சலுகைகளை வழங்கி இருக்கிறார். அதனால், துணைவேந்தர் மீனாவை பதவிநீக்கம் செய்து, பல்கலைக்கழகத்தின் மாட்சிமையைக் காப்பாற்ற வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளரான தமிழாதன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளரான இந்திரஜித், ''பல்கலைக்கழக அலுவ லர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவல்களையும் வெளியே தெரிவிக்கக்கூடாது என்று சுற்றறிக்கை மூலம் வாய்ப்பூட்டு போட்டுள்ளார் துணைவேந்தர். வாயைத் திறந்தால் பணியிடைநீக்கம் என்று மிரட்டி வைத்திருக்கிறார். அதனால், பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றி தைரியமாகப் பேசத் தயங்குகிறார்கள்.

மகளிரியல் துறைத் தலைவியாக சிறப்பாக செயல்பட்டு வந்த மணிமேகலை என்பவர் மீது, பொய்யாக குற்றம்சாட்டி பணியிடைநீக்கம் செய்து பழி வாங்கினார். இந்த விவகாரத்தில்

வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?

பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் தலையிட்டு, மணிமேகலையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆனாலும், மணிமேகலையை மகளிரியல் துறையில் பணி அமர்த்தாமல், பொருளியல் துறையில் பணி வழங்கி, அவரை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருக்கிறார். மகளிரியல் துறை மூலம் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று வந்த ஏழைப் பெண்கள் பலர், இப்போது அந்தத்துறை முடங்கிக் கிடப்பதால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவர்களே இல்லாத துறைகளுக்கு எல்லாம், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு 40 பேராசிரியர்களை கூடுதலாக நியமனம் செய்தி ருக்கிறார்கள். பெரியார் உயர்ஆய்வு மையம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு, தொலைதூரக் கல்வி மையம் போன்ற ஒரு சில துறைகளில் தேவைக்கு அதிகமான பணியாளர்களை நியமித்து, அரசுக்குத் தேவையற்ற நிதிச்சுமை ஏற்படுத்தியுள்ளார். பல்கலைக் கழகத்தில் உள்ள 17 வாகனங்களுக்கு மட்டும் 29 டிரைவர்கள் உள்ளனர். நேர்முகத் தேர்வில் புறக்கணிக்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற மூன்று பேருக்கு விதிமுறைகளுக்கு மாறாக பணிநியமனம் வழங்கப்பட்டு உள்ளது. நியமன விவகாரத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு பட்டியலில் இருந்து நபர்களைத் தேர்வு செய்யவில்லை. அரசு அறிவித்துள்ள இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. பி.எட். சேர்க்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை விலைபேசி ஏராளமான ஸீட்களை விற்று ள்ளனர். மொத்தத்தில் அரசு நிறுவனமான இந்தப் பல்கலைக்கழகத்தை அரசின் சட்டதிட்டம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தனக்கு சொந்தமான தனியார் நிறுவனம் போல் நடத்துகிறார் மீனா'' என்று புகார் பட்டியல் வாசித்தார்.

துணைவேந்தரை சந்தித்து குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெறவேண்டும் என்று பல்கலைக் கழக பி.ஆர்.ஓ. சிவப்பிரகாசத்திடம் தகவல் சொன் னோம். துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பற்குணன் என்பவரிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு பணித்தார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் 20 கேள்விகளாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தோம். ஒரு

வாரம் ஆனபிறகும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. துணைவேந்தர் எப்போது விளக்கம் கொடுத்தாலும் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.

துணைவேந்தரே தடுமாறும் அளவுக்குக்

கடினமான கேள்விகளோ?

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism