##~## |

சும்மா கிடந்த புதுக்கோட்டை தி.மு.க. உட்கட்சி விவகா ரத்தை, ஊதிப் பெரிதாக்கி வெடிக்க வைத்திருக்கிறது, பேரா சிரியர் அன்பழகனின் விசிட்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்துப் பேசும் புதுக்கோட்டை உடன் பிறப்புகள் சிலர், ''மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, ரகுபதி இருவருமே எதிரெதிர் துருவம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருவருமே புதுக்கோட்டையில் போட்டியிட விருப்பம் தெரிவித் திருந்தனர். ஆனாலும், பெரியண் ணன் அரசுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ரகுபதிக்கு விராலிமலை தொகுதி ஒதுக்கப்பட்டது. தேர்தலில் இருவருமே தோல்வியைத் தழுவினர்.ஆனால், தங்களது தோல்விக்கு, எதிர்தரப்பினர் செய்த குழிபறிக்கும் வேலைதான் காரணம் என்று இரண்டு தரப்பினரும் குற்றம் சாட்டினார்கள்.
கடந்த 4-ம் தேதி, கறம்பக்குடியில் ஒரு திருமணத் துக்கு வருவதற்காக, பேராசிரியர் அன்பழகனிடம் தேதி வாங்கினார் கவிதைப்பித்தன். இவர் ரகுபதியின் ஆதரவாளர். திருமணம் முடிந்த தும், திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த இருந்தார் ரகுபதி. ஆனால், இந்தத் தகவல் மாவட்டச் செயலாளரான பெரியண்ணன் அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம்.

அதனால், கோபத்தில் இருந்த அரசு, ரயிலில் வந்த பேராசிரியரை வரவேற்ற கையோடு, சென்னைக்குக் கிளம்பி விட்டார். அன்று இரவு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு பேராசிரியர் சென்றபோது பிரச்னை வெடித்து விட்டது.

விழாவில் வழங்குவதற்காக தனது சொந்த செலவில் ரேடியோ, பால் குக்கர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார் ரகுபதி. அந்தப் பொருட்களை பெற்றுக்கொள்ள ஆட்களையும் ரகுபதியே ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அந்த நேரம் பெரியண்ணன் அரசுவின் ஆதரவாளர்கள் மோதலைத் தொடங்க... ரகுபதியின் ஆதரவாளரான பாண்டியனுக்குப் பலத்த அடி. போலீஸார் தலையிட்டு இருதரப்பு ஆட்களையும் சமாதானப்படுத்துவதற்குள் பெரும்பாடாகி விட்டது. இதைப்பார்த்து, பேராசிரியர் நொந்து போய்தான் கிளம்பினார்'' என்று சொன்னார்கள்.
ரகுபதியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''அன்று இரவு பிரச்னை நடந்தது இதுவரை எனக்குத் தெரியாது. அவர்களாகவே சமாதானம் ஆகிவிட்ட தால், என்னிடம் சொல்லாமல் விட்டிருக்கலாம். பேராசிரியரை வரவேற்ற மாவட்டச் செயலாளர் எங்களோடு கல்லூரிக்கும் வந்து விட்டுத்தான் போனார். அந்தக் கூட்டம் பற்றி ஏற்கெனவே மாவட்டச் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை'' என்று வழக்கமான பல்லவியைப் பாடினார்.
மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, ''அன்றைக்கு அவசியம் சென்னை செல்லவேண்டி இருந்ததால், பேராசிரியரின் அனுமதியோடுதான் சென்னை சென்றேன். நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது சிறு சலசலப்பு ஏற்பட்டதாகக் கூறினார்கள். நான் சென்னையில் இருப்பதால், ஊருக்கு வந்து விசாரித்தால்தான் விவரங்கள் தெரியும்'' என்றார்.
நல்லா பேசுறாங்கப்பா!
- வீ.மாணிக்கவாசகம்