Published:Updated:

சாதிப் பூசலில் சிக்கிய மூதாட்டியின் உடல்!

திருப்பூர் அக்கப்போர்!

சாதிப் பூசலில் சிக்கிய மூதாட்டியின் உடல்!

திருப்பூர் அக்கப்போர்!

Published:Updated:
##~##
சாதிப் பூசலில் சிக்கிய மூதாட்டியின் உடல்!

ரு மூதாட்டியின் உடலைப் புதைப்பதற்கு ஏற்பட்ட பிரச்னையில், சாதிப் பூசல் இன்னமும் எந்த அளவுக்கு ஊறிப்போய் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்தில் உள்ள அம்மாபாளையத்தின் அருந்ததியர் மக்களிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இருக்கிறோம். ஆனால் மூன்று தலைமுறையாக எங்களுக்கு என்று தனி சுடுகாடு இல்லை. இதுவரை ஆதியூர் - குன்னத்தூர் சாலை ஓரத்தில்தான் புதைத்து வந்தோம். ஒரு முறை பிணத்தை வைத்திருந்தபோது, சாலையில் வந்த பேருந்து, பிணத்தின் மீது ஏறிவிட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கின் காரணமாக, எங்கள் ஊரில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தப்பனை என்ற இடத்தை, அதிகாரிகள் தேர்வு செய்து கொடுத்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அது சரிப்பட்டு வரவில்லை. அதனால், அடுத்து எங்கள் ஊரின் அருகில் ஓடை அருகே

சாதிப் பூசலில் சிக்கிய மூதாட்டியின் உடல்!

30 சென்ட் நிலத்தை ஒதுக்கித் தந்தனர். இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மாராள் என்ற 70 வயது மூதாட்டி இறந்துவிட்டார். அவரை புதைக்கச் சென்றபோது, மேல் சாதிக்காரர்கள் கடுமையாக எதிர்த்தனர். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், போலீஸாரே முன்வந்து உடலை எடுத்துச் சென்று எரித்துவிட்டனர்'' என்று வேதனையுடன் சொன்னார்கள்.

இறந்த மாராளின் மகன் சாமியப்பன், ''நீர்நிலை அருகே யாரையும் புதைக்கக்கூடாது என்று மேல்சாதியினர் பிரச்னை செய்தார்கள். ஆனால், சென்ற வாரத்தில் மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் இறந்தபோது, எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அதே இடத்தில்தான் புதைத்தார்கள். அதனால் என்னுடைய அம்மாவையும் அங்கேதான் புதைப்போம் என்று கூறினோம். பிறகு பிரச்னை வலுத்தது. ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். எங்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் நள்ளிரவு 2 மணிக்கு என் அம்மாவின் உடலை மின்மயானத்துக்கு எடுத்துச்சென்று, காலை 7 மணிக்கு எரித்து விட்டார்கள். என்னை மிரட்டி ஒரு பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்கள்'' என்றார் துக்கத்துடன்.

சாதிப் பூசலில் சிக்கிய மூதாட்டியின் உடல்!

ஆதி தமிழர் இளைஞர் பேரவை மாநில செயலாளர் ஆனந்தன், ''உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசரகதியில் அம்மாபாளைத்தில் உள்ள ஓடை அருகே 30 சென்ட் இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தனர். ஆனால், மேல் சாதியில் ஒருவர் இறந்ததும் அந்த இடத்தில் புதைத்தார்கள். அதனால், எங்களுக்கு நியாயம் கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அதன் மீது எந்த

சாதிப் பூசலில் சிக்கிய மூதாட்டியின் உடல்!

நடவடிக்கையும் இல்லை. இதைக் கண்டித்து எங்கள் அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை, போலீஸார் கிழித்து எறித்தனர். போஸ்டரில் இருந்த பேரவையின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டுகிறார்கள். அதனால் அவர்கள் இப்போது தலைமறைவாக உள்ளனர். திருப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சாதி வெறி பிடித்தவர். சென்ற மாதம் நடந்த புத்தகத் திருவிழாவில், 'படிக்காத விளிம்பு நிலை மக்கள்தான் திருப்பூரில் குற்றங்களைச் செய்கின்றனர். எனவே போலீஸ் பாய்ஸ் கிளப் அனைத்து சேரிகளிலும் தொடங்கப்படும்’ என்று பேசினார். படித்தவர்கள் யாரும் தவறு செய்வதில்லையா? உயிரோடு இருக்கும் போதுதான் நிம்மதி இல்லை.. இறந்த பின்பும் நிம்மதி இல்லையே'' என்றார் ஆவேசத்துடன்.

இது குறித்துப் பேசிய எஸ்.பி. பாலகிருஷ்ணன், ''சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆர்.டி.ஓ. கொடுத்த தகவல் அடிப்படையில்தான் பாதுகாப்புக்குச் சென்றோம். பிணத்தை வலுகட்டாயமாக எடுத்துச் சென்றதாகச் சொல்வது பொய்.  சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால், போலீஸாரே பிணத்தை யார் அனுமதியும் இல்லாமல் கொண்டுசெல்ல முடியும். ஆனாலும் அவர்கள் உறவினர்கள் சம்மதத்துடன்தான் கொண்டு சென்றோம். யாரையும் மிரட்டிக் கையெழுத்து வாங்கவில்லை. யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் என் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். 'அறியாமை காரணமாகத்தான் குற்றங்கள் ஏற்படுகின்றன. கல்வி அறிவு அவசியம்’ என்றுதான் பேசினேன். அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டரில் அச்சகத்தின் பெயரோ, போன் நம்பரோ இல்லை. அதனால்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மாவட்ட ஆட்சியர் மதிவாணன், ''நான் ஆய்வு செய்து பார்த்ததில் அருந்ததியர் மக்களுக்கான சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து குடிசை போட்டு உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த இடம் மீட்டுத் தரப்படும். அங்கு குடிஇருக்கும் மக்களுக்கு வேறு இடம் ஒதுக்கித் தரப்படும்.  இது உணர்வுபூர்வமான பிரச்னை என்பதால் அதிரடியாக எந்த முடிவும் எடுக்கமுடியாது. கூடிய விரைவில் இந்தப் பிரச்னையைத் சுமுகமாகத் தீர்க்க வழி செய்வேன்'' என்றார் நம்பிக்கையுடன்.

- ம.சபரி

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism