Published:Updated:

கேம்ப் நடத்தும் மருத்துவமனைகள்.. ஆள் பிடிக்கும் செவிலியர்கள்!

அரசு காப்பீட்டுத் திட்ட அதிரடி

கேம்ப் நடத்தும் மருத்துவமனைகள்.. ஆள் பிடிக்கும் செவிலியர்கள்!

அரசு காப்பீட்டுத் திட்ட அதிரடி

Published:Updated:
##~##
கேம்ப் நடத்தும் மருத்துவமனைகள்.. ஆள் பிடிக்கும் செவிலியர்கள்!

லைஞர் காப்பீட்டுத் திட்டத்தை குறை சொல்லித்தான், 'தமிழக அரசின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. மூன்று மாதங்கள் முடிவ தற்குள், இதிலும் அதிகப்படியான குளறுபடிகள் நடப்பதாக மனிதநேயம் கொண்ட மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க தகுதி பெற்ற மருத்துவமனைகளின் மருத்துவர்கள் சிலர், ''கடந்த ஆட்சியில், கட்சிக்காரர்கள் சிபாரிசு செய்த மருத்துவமனைகளைத்தான் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தார்கள். ஆனால் இந்தமுறை, வடநாட்டு மருத்துவர்கள் குழு மருத்துவ மனைகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்து, தேவையான வசதிகள் இருந்தால் மட்டுமே பட்டியலில் சேர்த்தது. கடந்த ஆட்சியில் குறுக்கு வழிகளில் பணம் பண்ணிய மதுரையை மையமாகக் கொண்ட ஒரு சில மருத்துவ

கேம்ப் நடத்தும் மருத்துவமனைகள்.. ஆள் பிடிக்கும் செவிலியர்கள்!

மனைகளும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. தென்பகுதியில் பல முறைகேடுகளில் சிக்கிய மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் பெரும்பாலான மருத்துவ​மனைகள், பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்துதான் அதிக அளவில் பணம் சம்பாதித்தன. மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஒரே வருடத்தில் 500 பேருக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து, அத்தனை பேருக்கும் கேன்சர் இருந்ததாக பயாப்சி ரிப்போர்ட்டும் வாங்கி​னார்கள். அத்தனை பேருக்கும் எப்படி புற்றுநோயாக இருக்க முடியும் என்று சென்னை அதிகாரிகள் சந்தேகப்பட்டு விசாரித்தபோதுதான், இந்த மோசடி அம்பலமானது. ஆனாலும், மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்முறையும் அந்த மருத்துவமனையை திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

அன்று கர்ப்பப்பையை அறுத்து காசு பார்த்தவர்கள், இப்போது ஆண்களின் சிறுநீர்ப் பையில் கத்தி வைக்கிறார்கள். ஆண்களின் சிறுநீர்ப் பைக்குக் கீழே இருக்கும் ப்ராஸ்டேட் சுரப்பி 50 வயதைக் கடந்தவர்களுக்கு கட்டி மாதிரி வீங்கிவிட வாய்ப்பு உண்டு. சிறுநீர் போவதில் சிக்கல் வரும். ஆரம்ப நிலையில் மருந்து மூலமாகவே குணப்படுத்தலாம். முற்றிய நிலையில் இருந்தால் சர்ஜரி மட்டுமே தீர்வு.

கேம்ப் நடத்தும் மருத்துவமனைகள்.. ஆள் பிடிக்கும் செவிலியர்கள்!

இந்த அறுவை சிகிச்சைக்கு செகண்ட் கிரேடு மருத்துவமனைகளுக்கு 17,500 ரூபாய் கொடுக்கிறது இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த சர்ஜரிதான் இப்போது பல பேருக்கு பணம் காய்ச்சி மரம். மருந்து மூலம் குணப்படுத்தக் கூடிய ஸ்டேஜில் இருந்தாலும், ஸ்கேன் ரிப்போர்ட்டில் பெரிய அளவில் வீக்கம் இருப்பதுபோல் காட்டி, லேப்ராஸ்கோபி கருவி மூலம், வீங்கிய பகுதியில் சிறிய அளவை வெட்டி எடுத்து சர்ஜரி கணக்கு எழுதுகிறார்கள். இவர்கள் செய்யும் அறுவை சிகிச்சைக்கு 7,000-க்கு மேல் செலவாகாது. கடந்த இரண்டு மாதங்களில் காப்பீடுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளிடம் லிஸ்ட் வாங்கிப் பார்த்தாலே, இத்தகைய ஆபரேஷன்தான் அதிகம் செய்யப்பட்டிருப்பது தெரியும்.

விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் 1,016 நோய்களுக்குச் சிகிச்சை எடுக்கலாம்னு சொல்றாங்க.

கேம்ப் நடத்தும் மருத்துவமனைகள்.. ஆள் பிடிக்கும் செவிலியர்கள்!

இந்தத் திட்டத்தின் மூலம் 1.34 கோடி பேருக்கு சிகிச்​சைத் தரப்போவதாக தம்பட்டம் அடிக்கிறார்கள். அதற்காகவே ஊர் ஊருக்குப் போய் கேம்ப் போட்டு அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடிங்கன்னு சொல்றாங்க. இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தினமும் இரண்டு சர்ஜரிகளைச் செய்ய வேண்டும். மாதம் மூன்று மெடிக்கல் கேம்ப் நடத்த வேண்டும் என்று டார்கெட் வைக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் டாக்டர் வேலையை எப்படிப் பார்ப்பது?

ஆனால், பணம் ஒன்றே குறியாய் நிற்கும் சில மருத்துவமனைகள், கேம்ப் நடத்தி ஆள் பிடிப்பதில் போட்டி போடுகின்றன. 10 பேரைக் கூட்டிவரும் கிராம செவிலியர்களுக்கு 1,000 ரூபாய் பரிசு கொடுக்கிறார்கள். பணம் கொடுத்து ஆள்பிடிக்கும் கொடுமை நடக்கத் தொடங்கிவிட்டதால், இனி ஏராளமான தவறுகள் நடக்கும்'' என்று ஆத்திரப்பட்டார்கள்.

இந்தத் தகவல்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான டாக்டர் விஜய் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ''கடந்த ஆட்சியில், நீங்கள் சொன்ன மாதிரியான பல தவறுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை உள்ளிட்ட 56 வகையான நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.  அவசியம் இல்லாமல் எல்லாம் சர்ஜரி பண்ண முடியாது. இந்தத் திட்டம் மக்களுக்குப் பயனுள்ளதாக  இருக்க வேண்டும் என்பதற்காகக்  குறைந்தது மாதம் ஒரு முகாமாவது நடத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரிகளுக்குச் சொல்லி இருக்கிறோம்.  கிராம செவிலியர்களுக்குப் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டிவரச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? தமிழக மக்களுக்குத் தேவையான தரமான மருத்துவ சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் மூலமாகவே கொடுக்க வேண்டும் என்பதுதான்  அம்மாவின் திட்டம். கூடிய சீக்கிரம் அந்த நிலையை எட்டுவோம்'' என்றார்.  விஜய் சொல்கிறார். செய்கிறாரா என்று பார்ப்போம்!                                                        

- குள.சண்முகசுந்தரம்,

படம்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism