Published:Updated:

வேதனையில் விவசாயிகள்... குஷியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள்!

இழுபறியில் ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விவகாரம்

வேதனையில் விவசாயிகள்... குஷியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள்!

இழுபறியில் ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விவகாரம்

Published:Updated:
##~##
வேதனையில் விவசாயிகள்... குஷியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள்!

'ஸ்ரீபெரும்புதூர் புறவழிச் சாலையில் இருக் கும் கிராம மக்கள் எல்லோருமே கடந்த ஐந்து வருடங்களாக நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) ஒரு புகார். புதிதாக அமைய இருக்கும் விமான நிலையத்துக்காக தங்கள் நிலங்கள் பறிபோய் விடுமோ என்ற பயம்தான் அவர்களுக்கு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் விசாரித்தோம். அனைவரும் சொல்லி வைத்த மாதிரி, ''ஸ்ரீபெரும்புதூர் ஏர்போர்ட் பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை..!'' என்றார்கள்

நில எடுப்புப் பிரச்னை எப்படி தலை தூக்கியது?

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிய இருக்கிறது. அடுத்தகட்டமாக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையப் பணிகள் ஆரம்பமாகிவிடும் என்று எப்படியோ வதந்தி கிளம்பி இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அவர்களின் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட விளம் பரங்களில், 'ஸ்ரீபெரும்புதூர் உத்தேச விமான நிலையம் அருகில்’ அல்லது  'ஸ்ரீபெரும்புதூர் க்ரீன் ஃபீல்ட் ஏர்போர்ட் அருகில்’ என்று சொல்லி விற்பனை செய்வதுதான், மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

வேதனையில் விவசாயிகள்... குஷியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள்!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தீபம் ரியல் எஸ்டேட்டைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, ''விமான நிலையம் வருவதால் எங்களுக்கு சந்தோஷம்தான். எங்கள் ஊர் வேகமாக வளர்ந்துவிடும். ஆனால், நில எடுப்பு விஷயத்தை தி.மு.க. அரசும்... இன்றைய அ.தி.மு.க. அரசும் இழு இழு என்று இழுக்கிறது. அதனால்,

வேதனையில் விவசாயிகள்... குஷியில் ரியல் எஸ்டேட் அதிபர்கள்!

இந்தப் பகுதிகளில் மனை வாங்கிப் போட்டவர்கள் தவியாக தவிக்கிறார்கள். வட்டிக்கு பணம் வாங்கி லே-அவுட் போட்ட புரமோட்டர்கள் பாடு படுகஷ்டம். அரசு நல்ல விலை கொடுக்கும் என்று நம்பி பலர் காத்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 13 கிராமங்களை புதிய விமான நிலையத்துக்கு எடுக்க இருப்பதாக முன்பு கணக்கு எடுத்தார்கள். வடமங்கலம், வயலூர், திருமணிகுப்பம், கிலாய், பாடிச்சேரி, ராமாபுரம், சூர்காபுரம், உளுந்தை,  வாசுனாமேடு உள்ளிட்ட கிராமங்களில் எவ்வளவு நிலம் இருக்கிறது, யார் பெயரில் இருக்கிறது என்ற விவரங்களை விமான நிலைய அதிகாரிகள் திரட்டிவிட்டார்கள். இந்தப் பகுதி முழுவதும் நில எடுப்புப் பிரச்னை இருப்பதால், இங்கே ரியல் எஸ்டேட் வியாபாரம் சுத்தமாக இல்லை. பத்திரப் பதிவு அலுவலகம் காத்தாடுகிறது. ஆனாலும் நல்ல லாபம் கிடைக்கும் என்று பலரும் காத்துக்கிடக்கிறார்கள்'' என்றார்.

தாம்பரம் செல்லும் சாலையில் பட்நூல் சத்திரத் தில் மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில எடுப்புக்காக அமைக் கப்பட்ட அலுவலகத்தில்  இந்த விவகாரம் குறித்து விசாரித்தோம்.

''மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிக் கான நிலம் எடுப்புப் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி  ஸ்ரீபெரும்புதூர் ஏர்போர்ட் எங்கே அமைகிறதுன்னு கேட்டு கலெக்டர் ஆபீஸில் மனு கொடுத்திருக்கார். அதையும் எங்களுக்கு அனுப்பி பதில் கேட்டதுதான் கொடுமையிலும் கொடுமை...'' என்று சொல்லும் அதிகாரி தன் பெயர், பதவியைச் சொல்ல விரும்பவில்லை. விரைவில் ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையம் வரப்போகிறது என்பதை உறுதிபடுத்தியவர் மேலும் சில தகவல்களைச் சொன்னார்.  

''ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்களில் அமைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்காகத்தான் இந்தப் புதிய விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது. புதிய விமான நிலையத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் 5,500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த விமான நிலையம் அமைய இருக்கிறது'' என்றார்.

விமான நிலையம் வரப்போவதாகச் சொல் லப்படும் கிராமங்களில் ஒன்றான வடமங்கலம் சென்றோம். விவசாயியான மணவாளன், ''விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கணும்னா எடுத்துட்டுப் போகட்டும். ஆனா, ஐந்து வருஷமா இழுத்தடிச்சி... எங்களை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் தவிக்கவிடுறாங்க. இதுக்கு முன்னால கணக்கு எடுக்க வந்தப்ப உங்களுக்கு மாற்று இடம் தருவோம்னு சொன்னாங்க. ஆனா எந்த அளவுக்கு இடம் தருவாங்கன்னு தெரியலை. புது எடத்துல விவசாயம் செய்யவும் ஆடு மாடை மேய்க்க முடியுமான்னு தெரியலை. பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க நிலத்தைத்தான் விற்க வேண்டி இருக்கு.. விமான நிலையத்துக்கு இடம் எடுக்கப் போறாங்க என்பதால யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க... இதனால பிள்ளைகள் எல்லாம் முதிர் கன்னிகளாக மாறிக்கிட்டு இருக்காங்க...'' என்றார் கண்ணீர் விடாத குறையாக..!

இவர்களின் வேதனைக் குரல் மத்திய, மாநில அரசுகளின் காதுகளுக்கு எட்டுமா?

- சி.சரவணன்

படங்கள்: வீ.நாகமணி 

'தவறான குற்றச்சாட்டு!’

சென்னை மாநகராட்சி 118-வது கவுன்சிலர் டி.சிவராஜ் நமக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'கடந்த 11.3.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில், கதீட்ரல் சாலைப் பகுதியில் முக்கிய நிறுவனங்களை மறைக்கும் விதமாக பேனர்களை வைத்து, கடைக்காரர்களிடம் நான் பணம் வசூலிப்பதாக வெளிவந்த செய்தியால் மனவேதனை அடைந்தேன். என் மீதான குற்றச்சாட்டு தவறானது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism