Published:Updated:

முருகன்கள்... முருகேசன்கள்!

பா.ம.க-வின் புதிய வியூகம்

முருகன்கள்... முருகேசன்கள்!

பா.ம.க-வின் புதிய வியூகம்

Published:Updated:
##~##
முருகன்கள்... முருகேசன்கள்!

வ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கட்சிகளை நம்பித்தான் பா.ம.க. இருக் கும். இப்போது 'திராவிடக்’ கட்சிகளை கை கழுவிய நிலையிலும்(?) இரண்டு பேர் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இருக்கிறது. அவர்கள்தான் முருகன் மற்றும் முருகேசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ம.க-வின் பெரும் நம்பிக்கைக்குரிய மனிதர் களான அவர்கள் இருவரும் இப்போது பேனர்களில் பளபளக்கிறார்கள். 'முருகன், முருகேசன் கூட்டத்துக்கு வருகை தரும் டாக்டர் ஐயா’ என்று வித்தியாசமான பேனர்கள் பா.ம.க. தொண்டர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் ஆச்சர்யப்படுத்துகிறது. யார் அந்த முருகன், முருகேசன்? பா.ம.க-வின் எதிர்காலத்தைச் சொல்லும் இந்த இருவர் குறித்தும் பேசுகிறார் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள். ''திராவிடக் கட்சிகளால் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது இந்த

முருகன்கள்... முருகேசன்கள்!

இரண்டு பேரின் பணிகள்தான் எங்கள் கட்சியின் எதிர்காலம். 80-களில் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று உருவான பா.ம.க., துவக்கத்தில் திராவிடக் கட்சிகளின் துணை இல்லாமல் அரசியல் செய்தது. பின் அதிகார பலத்தோடு சமூகத் தொண்டு புரிவதே கொள்கைகளை நிறைவேற்ற சிறந்த வழி என்று அந்தந்தச் சூழலுக்குத் தக்கபடி, எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட திராவிடக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் களம் கண்டோம். பின்னர், உடன் இருந்தே கருவறுக்கும் திராவிடக் கட்சிகளின் செயல்களைப் புரிந்துகொண்ட டாக்டர், அவற்றை முற்றிலுமாகப் புறந்தள்ளி இனி திராவிடக் கட்சிகளுடன் ஒட்டும் இல்லை... உறவுமில்லை என அறிவித்து கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டார். அதன் ஒரு செயல்திட்டம்தான் இந்த முருகன், முருகேசன் என்ற கற்பனை கதாபாத்திரங்கள். டாக்டரும் அவர் களின் துணைவியாரும் சேர்ந்து தீட்டிய திட்டம் இது.

முருகன்கள்... முருகேசன்கள்!

அதாவது ஒவ்வொரு ஒன்றிய நகரப் பொறுப்பில் இருப்பவர்களில் இருந்து, முருகேசன், முருகன் என்ற பதவிகளுக்கு நபர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஒரு முருகேசனின் கீழ் 10 முருகன்கள் இருப்பார்கள். இந்தப் 10 முருகன்களும் தங்கள் பகுதியில் உள்ள, தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களை அடையாளம் கண்டு தெரிந்தவர்கள் மூலமோ அல்லது நேரடியாகவோ ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவேண்டும். பா.ம.க-வின் வரலாறு அதன்

முருகன்கள்... முருகேசன்கள்!

கொள்கைகள் திராவிடக் கட்சிகளின் கடந்தகால துரோகங்கள், பா.ம.க. ஆட்சி அமைத்தால் மக்களுக்கு என்னன்ன நன்மைகள் கிடைக்கும் என்று விரிவாக எடுத்துச் சொல்வார்கள் முருகன்கள். கூடவே கட்சியின் அறிக்கைகள் வரலாறு அடங்கிய தகவல் சீட்டுகளும் தரப்படும். இந்தச் சந்திப்புகளில் அவர்களின் மனம் மாறியபின், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் குறைந்தது நான்கு பேர் வீதம் 200 பேரையாவது கட்சியில் உறுப்பினர் ஆக்க வேண்டும். முருகன்களின் இந்தப் பணியைக் கண்காணிப்பது தான் முருகேசன்களின் பணி. அவ்வப்போது முருகன்களுக்கு ஆலோசனை வழங்குவது விண்ணப்பங்களைத் தருவது என்று அவரின் பணி இருக்கும்.

கடந்த 2010- ல் நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் இது வாய்மொழியாக சோதனை செய்யப்பட்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு பா.ம.க. வர உதவியது இந்தத் திட்டம்தான். அந்த வெற்றிதான் இப்போது ஒரு செயல்திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களின் விவரங்கள் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்குக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இப்போதே காஞ்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க விறுவிறுப்பு காட்ட ஆரம்பித்துவிட்டனர் முருகன்கள்.

ஐயாவுக்கு தமிழ் மீது அத்தனை ஆர்வம். கட்சியை மீட்கப் போகும் இவர்கள் கடவுளுக்குச் சமம் என்று நினைத்துத்தான், தமிழ்க் கடவுள் பெயர்களை வைத்திருக்கிறார் என்று நினைக் கிறேன்.

கட்சியின் முக்கிய விஷயங்களை எப்போதும் காஞ்சியில் துவங்க ஆர்வம் காட்டுவார் ஐயா. அப்படியே இந்தத் திட்டமும் இங்கு துவங்கப்பட்டுள்ளது. பரவலாக இது வெற்றிகரமாக நடப்ப தாகத் தகவல் வருவதால் பா.ம.க. பெல்ட் என்று சொல்லப்படும்  மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டியில் அடுத்தடுத்து இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. தொண்டர்களைக் கவர இந்த யுக்தி என்றால், பொது மக்களிடையே இழந்த மதிப்பை மீட்க புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்று வரிந்துகட்டிக் கொண்டு தமிழகத்தை வலம் வருகிறார் டாக்டர். பொறுத்திருந்து பாருங்கள் இனி பா.ம.க-வின் வேகத்தை'' என்று மளமளவெனச் சொல்லி முடித்தார்.

வாங்கப்பா... வாங்க!

- கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism