Published:Updated:

முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

ஆரணி மருத்துவமனை ஆர்ப்பாட்டம்

முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

ஆரணி மருத்துவமனை ஆர்ப்பாட்டம்

Published:Updated:
##~##
முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

'ஆரணி அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதைத் தடுக்கிறார் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன். இதனை எதிர்த்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம், பேரணி நடத்துகிறோம்’ என்று ஆரணியில் இருந்து ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-66808002) அலறியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைத்து கட்சியினரும் இணைந்து நடத்தும் போராட் டத்தில் ஆஜரானோம். அதில் கலந்துகொண்ட செல்வரசு, ''திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைய இருக்கிறது. இதனால் மாவட் டத்தில் உள்ள வேறு அரசு மருத்துவமனையை, தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். அதற்கான தகுதிகள் அனைத்தும் ஆரணி மருத்துவமனைக்கு இருக்கிறது என்று கடந்த ஆட்சி காலத்திலேயே போராடினோம். அதன் விளைவாக விசாரணைகள் முடிவடைந்து, தரம் உயர்த்துவதற் கான ஆணை பிறப்பிக்க இருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கிடப்புக்குப் போனது.

முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

தற்போது அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், அவரது தொகுதியில் இருக்கும் செய்யாறு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார். அதனால்தான் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கம், கார்-வேன் ஓட்டுநர் சங்கம், சமூக நல அமைப்புகள் மற்றும் பொது மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் இங்கு வந்து வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டால், அவர்களுக்கு இன்னும் பல வசதி களுடன் சிகிச்சை கிடைக்கும். செய் யாறு மருத்துவமனையைத் தரம் உயர்த் தினால் இந்த நோயாளிகள் அங்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். மேலும் செய்யாறு மருத்துவமனை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால் எல்லோரும் அங்கு சென்று சிகிச்சை பெற சிரமப்படு வார்கள். செய்யாறு மருத்துவமனையை ஒப்பிடும்போது ஆரணி மருத்துவ மனை அமைதியான இயற்கைச் சூழலுடன் நோயாளிகளுக்கு ஏற்ற விதத்தில் அமைந் திருக்கிறது. அதனால் எங்கள் ஊர் மருத்துவ மனையைத்தான் தரம் உயர்த்த வேண்டும்'' என்றார் காட்டமாக.

முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது

முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

பெரிய நகராட்சியாகவும் வருவாய் ஈட்டுவதில் முதலிடத்திலும் ஆரணி நகராட்சி இருக்கிறது. அதேபோல் அதிக மக்கள் தொகை கொண்டதாகவும் அதிக கிராமங்கள் நிறைந்த தொகுதியாகவும் ஆரணி உள்ளது. இங்கு சுமார் 300 அரிசி ஆலைகளும், 400 பட்டுச் சேலை உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. ஆரணி நாடாளுமன்றத் தொகுதியாகவும் சட்ட மன்றத் தொகுதியாகவும் இருக்கிறது. இப்படி எல்லா தகுதிகளும் இருக்கும்போது ஏன் எங்கள் மருத்துவமனையைத் தரம் உயர்த்தக் கூடாது? இதனால் நிறைய ஏழை மக்கள் இன்னும் வசதியான சிகிச்சையைப் பெற முடியும் என்பதால்தான் போராடி வருகிறோம். மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் ஆரணி இருப்பதாலும் போக்குவரத்து வசதிகள் அதிகம் இருப்பதாலும் அனைத்து நோயாளிகளும் குறித்த நேரத்தில் வந்து

முட்டுக்கட்டை போடுகிறாரா அமைச்சர்?

சிகிச்சை பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். செய்யாறில் சரியான போக்குவரத்து வசதி இல்லை, குறிப்பாக இரவு நேரத்தில் மிகவும் மோசம். மேலும் போளூர், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறவும் ஆரணிதான் வசதியாக இருக்கும். இதை வலியுறுத்தி கடந்த மாதம், முதல்வர் தனிப் பிரிவுக்குக் கோரிக்கை மனு அனுப்பினோம். இந்த மாதம் 3-ம் தேதி ஆரணி மணிக்கூண்டு அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். 9-ம் தேதி அனைவரும் சேர்ந்து மாபெரும் மக்கள் பேரணி நடத்தி இருக்கிறோம். ஆனாலும் இதுவரை அரசு எந்த உறுதியும் கொடுக்கவில்லை. எப்படி என்றாலும் செய்யாறு மருத்துவமனையைத் தரம் உயர்த்த முயற்சி செய்யும் அமைச்சரின் திட்டத்தை முறியடிப்போம்...'' ஆவேசமாக.

மாவட்ட அமைச்சரான முக்கூர் சுப்பிரமணியனிடம் இந்தப் போராட்டம் குறித்துப் பேசினோம். ''நான், என் தொகுதி மருத்துவமனையை தரம் உயர்த்த முயற்சி செய்வதாக சொல்வது தவறு. அதுபோல் யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள். நான் சங்கரன்கோவிலில் தேர்தல் பணியில் இருக்கிறேன்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டதற்கு, ''இப்போதைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கான பணிகள்தான் நடந்து வருகின்றன. தரம் உயர்த்துவது பற்றி அரசுதான் முடிவு செய்யும். நான் ஒன்றும் சொல்ல முடியாது. கண்டிப்பாக மக்களின் நலன் கருதி சரியான முடிவைத்தான் அரசு எடுக்கும். எந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டாலும், அது அதிக நோயாளிகள் பயன் பெறும் வகையில் அமையும்'' என்றார் பட்டுக்கொள்ளாமல்.

என்ன செய்யப்போகிறது அரசு?

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism