Published:Updated:

மண்ணின் மைந்தன் யாருங்க?

வேலூர் வில்லங்கம்

மண்ணின் மைந்தன் யாருங்க?

வேலூர் வில்லங்கம்

Published:Updated:
##~##
மண்ணின் மைந்தன் யாருங்க?

'மண்ணின் மைந்தன் தி.மு.க-வைச் சேர்ந்த துரைமுருகனா அல்லது ஆளும் கட்சி அமைச்சர் வி.எஸ்.விஜய்யா?’ என்பது தான் இப்போது வேலூர் நகரைக் கலக்கும் விறுவிறு பட்டிமன்றம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவின் பிறந்த நாளை வேலூரில் விதவிதமாகக் கொண் டாடினார்கள். அப்போது ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்.

''யார் யாரோ தங்களை மண்ணின் மைந்தன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நான்தான் மண்ணின் மைந்தன்'' என்று பூடகமாக துரைமுருகனைக் கிண்டிவிட்டு,

மண்ணின் மைந்தன் யாருங்க?

சங்கரன்கோவில் தேர்தல் பணிக்குப் போய் விட்டார். தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு இது போதாதா... ரவுசு கிளப்புகிறார்கள். அமைச்சரை எதிர்த்து ஆங்காங்கே போஸ்டர் போர் நடக்கிறது.

இது குறித்துப் பேசும் காட்பாடி யூனியன் சேர்மன் பிரமிளா தயாநிதி, ''ரெண்டு நாளைக்கு முன்னால் கட்சியில் சேர்ந்து, அடுத்த நாள் எம்.எல்.ஏ. ஆகி, அடுத்த ஒரு மணி நேரத்தில் அமைச்சர் ஆனவர் இல்லை எங்க அண்ணன் துரைமுருகன். கடந்த 30 வருஷங்களா கட்சியில் உழைச்சு, இன்னைக்கு வரைக்கும் எம்.எல்.ஏ-வா இருக்கார். வேலூர் மாவட்டம் மட்டும் இல்லாம தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களிடையே பழகி, அவர்களின் குறைகளைக் கேட்டு, தலைவர் கலைஞருக்குத் தெரியப்படுத்தி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்.

காட்பாடி தொகுதி தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் ஓர்

மண்ணின் மைந்தன் யாருங்க?

எடுத்துக்காட்டாக இருப்பதை இன்றுவரை யாராலும் மறுக்க முடியாது. வேலூர் மாவட்டத்தில் முன்பு இருந்த குடிநீர்ப் பஞ்சத்தைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். அத்தனை மோசமாக இருக்கும். ஆனால் கடந்த 30 வருடங்களாக காட்பாடி தொகுதி மக்கள், குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு எங்க அண்ணன் துரைமுருகனிடம் போய் நின்றதே இல்லை. கடந்த ஆட்சியில் தளபதி ஸ்டாலின் முன்னிலையில் மேட்டூர் குடிநீர்த் திட்டத்தை தொடங்கினோம். அதுதான் வேலூர் மாவட்டத்துக்கே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ளது. அதைத்தான் இப்போது உள்ள ஆட்சியாளர்கள், தாங்கள் கொண்டுவந்த திட்டம் என்று பெருமை அடித்துக் கொள்கின்றனர்.

அமைச்சராக எங்கள் அண்ணன் இருந்த காலகட்டத்திலும்... இல்லாத காலத்திலும் எங்கள் பகுதியில் உள்ள ஏதாவது ஓர் ஏழைத் தொண்டன் தனது வீட்டுத் திருமணத்துக்கோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளுக்கோ அழைத்தால், உடனே அவனது வீடு சென்று வாழ்த்தி வருவார். அவர் கொண்டுவந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் இப்போது விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்கள் கவலை இல்லாமல் படிக்க முடிகிறது.

மண்ணின் மைந்தன் யாருங்க?

வேலூர் கோட்டையில் பழைய கட்டடத்தில் இயங்கிக்கொண்டு இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை காட்பாடி, சேர்க்காடு பகுதிக்குப் புதிய பொலிவுடன் கொண்டு சேர்த்த பெருமையும் துரைமுருகனுக்குத்தான் உண்டு. வேலூர் நகரப் பகுதியில் உள்ள சாலை வசதிகளும், காட்பாடியில் உள்ள சாலை வசதிகளையும் ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். துரைமுருகன் மதிப்பு தெரியும்.

இப்போது அமைச்சராக இருக்கும் வி.எஸ்.விஜய்க்கு, வேலூர் தொகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த மருத்துவ மனையைப் புதுப்பிக்கிறேன் என்று ஏதேதோ செய்து பார்த்தார். ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை இன்னமும் இருக்கிறது. அடுக்கம்பாறை அரசு

மண்ணின் மைந்தன் யாருங்க?

மருத்துவமனையிலும் டாக்டர்கள் கிடையாது. இது போதாது என்று துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. பிறகு எப்படிங்க மக்களுக்குச் சுகாதாரம் கிடைக்கும்?  

  மேடையில ஏறி, நான் மண்ணின் மைந்தன் என்று சொன்னால் மட்டும் போதாது... அதைச் செயலிலும் காண்பிக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் மண்ணின் மைந்தன் என்ற பெயருக்கு 200% சதவிகிதம் பொருத்த மானவர் எங்களது அண்ணன் துரைமுருகன் மட்டும்தான். அவங்க அமைச்சரை ஒருமுறை எங்க காட்பாடி தொகுதியை வந்து பார்க்கச் சொல்லுங்க, அப்பத்தான் தொகுதியை எப்படி நல்லா வைச்சுக்கணும் என்பது அமைச்சருக்குத் தெரியும்'' என்று உணர்ச்சி வசப்பட்டார்.

ரத்தத்தின் ரத்தங்கள் சும்மா இருப்பார்களா? வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் உஷாநந்தினி, ''இந்த மண்ணில் பிறந்தால் மட்டும் மண்ணின் மைந்தன் ஆகிவிட முடியுமா? நாங்க ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகுது. அதை விட அமைச்சர்ன்னா ஒரு தொகுதியை மட்டுமா பார்க்க முடியும். தமிழ்நாடு முழுதும் போகணுமே. அதனால சனிக்கிழமைன்னா வேலூர் வந்து மக்களிடம் அனுசரணையாப் பேசி, குறைகளைக் கேட்கிறார். உடனடியா குறைகளைத் தீர்க்கவும் செய்கிறார். அதனால அமைச்சர்தான் உண்மையான மண்ணின் மைந்தன்'' என்கிறார்.

'யார் வேண்டுமானாலும் மண்ணின் மைந்தரா இருந்துட்டுப் போகட்டும்... முதல்ல மின்சாரம் கொடுங்கப்பா...’ என்று எகிறுகிறார்கள் மக்கள்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism