##~## |

'வாயைத் திறந்தால் பணியிடை நீக்கம்?’ என்ற தலைப்பில் கடந்த 14.3.12 ஜூ.வி. இதழில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள் மட்டுமல்லாது, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தன. பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளே போராட்டத் துக்குக் காரணம் என்று அந்த அமைப்புகள் விவரித்து இருந்தன. அதுகுறித்து துணை வேந்தர் மீனாவிடம் விளக்கம் வேண்டும் என்று பல்கலைக்கழக தரப்பை அணுகியபோது, கேள்வி களை எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் வரையில், நமக்குப் பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கட்டுரை தாங்கிய இதழ், கடைகளுக்கு வந்தபிறகு பல்கலைக்கழகத் தரப்பில் இருந்து துணை வேந்தர் மீனா சார்பாக பல்கலைக் கழக பதிவாளர் பேராசிரியர் த.ராமசாமி நமக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், 'பல்கலைக்கழக கொள்முதல் தொடர் பான விதிமுறைகளின்படி அச்சுப்பணி, அச்சிடப் படும் நிறுவனம் போன்றவற்றைத் தீர்மானித்து அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் வேண்டுகோளின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டச் சான்றிதழின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய வடிவில் சான்றிதழ் அச்சிடக் கொள்முதல் தொடர்பான குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் அடிப்படையில் பட்டச்சான்றிதழ் அச்சி டப்பட்டது. அதில் இருந்த சில சிறிய குறைபாடுகள் பல் கலைக்கழக தேர்வு நெறியாளரால் கண்டறியப்பட்டு, உடனடியாக தொடர்புடைய அச்சு நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அச்சு நிறுவனமே தனது தவறை ஏற்றுக்கொண்டு, குறைபாடுடைய பட்டச் சான்றி
தழ்களுக்குப் பதிலாக, புதிய பட்டச் சான்றிதழ்களை அச் சிட்டு வழங்கியது. இதன் மொத்த மதிப்பு 18 லட்சம் ரூபாய் மட்டுமே. எனவே, பல்கலைக்கழகத்துக்கு பண விரயம் எதுவும் ஏற்படவில்லை.
வெங்கடேஸ்வரா என்ற அச்சு நிறுவனம், சில நிர்வாகக் காரணத்துக்காக ஒரு வருடத்துக்கு மட்டும் பல்கலைக்கழகப் பணிகள் எதுவும் வழங்கக்கூடாது என தடை செய்யப்பட்டு இருந்தது. ஒரு வருட காலம் முடிந்தவுடன் கொள்முதல் குழுவின் பரிந்துரையின்படி மற்ற அரசு நிறுவனங் களோடு போட்டியில் கலந்து கொள்கிறது. மற்ற அச்சு நிறுவனங்களை விட வெங்கடேஸ்வரா நிறுவனம் மிகக் குறைவாக விலைப்புள்ளிகள் குறிக்கப்பட்டிருப்பின், கொள்முதல் குழுவின் பரிந்துரையின்பேரில் பல்கலைக் கழகப் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல்கலைக் கழகத்துக்காக அச்சிடப்படும் கவர், கொள்முதல் குழுவின் பரிந்துரை மற்றும் விலைப்புள்ளியின் அடிப்படையில் அச்சிடப்படுகின்றது. எனவே, அதிக ரூபாய்க்கு அச்சிடப்படுகிறது என்பது தவறான தகவல்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழுத் தீர்மானத்தின்படி முன்னாள் துணைவேந்தர் முனைவர். எம்.பொன்னவைக்கோ அவர்களின் காலகட்டத்தில் துணைவேந்தர் உபயோகத்துக்காக டொயோட்டா கொரல்லா என்ற புதிய வாகனம் வாங்கப்பட்டது. அதே வாகனம்தான் இப்போது துணைவேந்தரின் பயணத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதைய துணைவேந்தர் முனைவர். கோ.மீனா அவர்களுக்கு எவ்வித சொகுசு மற்றும் புதிய வாகனம் இந்தப் பல்கலைக்கழகத்தால் வாங்கப்படவில்லை.
பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலக அறை மற்றும் இல்லம் ஆகியவற்றில் வவ்வால் மற்றும் எலி ஆகியவற்றின் ஆக்கிரமிப்பால் துர்நாற்றம் வீசியது. மின்கம்பிகளும் துண்டிக்கப்பட்டு இருந்தன. துணைவேந்தரின் அலுவலக அறை 1986-ம் ஆண்டு முதல் பராமரிப்பு செய்யப்படாமல் இருந் தது. எனவே, இந்தப் பல்கலைக்கழக சட்டம், பணி விதி மற்றும் ஆட்சிக்குழுத் தீர்மானத்தின்படி பல்கலைக்கழக வளாக பராமரிப்புத் துறை அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3,12,768 மட்டுமே. இந்தப் பணிக்காக 30 லட்சம் செலவிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுவது தவறு.
பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி களுக்கு எவ்வித பாரபட்சமின்றி அனைத்து அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இணைவு கோரும் கல்லூரிகளிடம் இருந்து, பல்கலைக்கழக விதிகளின்படி அதற்குரிய கட்டணம் பெறாமல் இணைவு வழங்கப்படுவதில்லை. மேலும் தனிப்பட்ட எந்த கல்லூரிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை.
பல்கலைக்கழக பணிவிதிகளின் அடிப்படையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஓட்டுநர் பதவிக்கான வல்லுநரை நியமிக்கிறார்கள். அதையும் வட்டாரப் போக்குவரத்து துறையில் நியமிக்கப்பட்ட மோட் டார் வாகன ஆய்வாளரின் பரிந்துரையின் பேரி லேயே நியமிக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் உள்ள வாகனங்களின் அடிப்படையில், போதுமான ஓட்டுநர் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்கள் துறைகளின் தேவையின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. பல்கலைக்கழக பணிவிதிகள் மற்றும் ஆட்சிக்குழுத் தீர்மானங்களின் அடிப்படையில், உரிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் பேரில் ஆசிரியர் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பு இல்லை.
இந்தப் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் மற்றும் இயக்குநர் முனைவர் ந.மணிமேகலையின் தற்காலிகப் பணிநீக்கம் மற்றும் துறைமாற்றம் ஆகிய செயல்பாடுகள், ஆளுநரின் அறிவுரையின்படி மேற் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் பல்கலைக்கழக அலுவலக நடைமுறைகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நாளிதழ்களில் செய்திகள் வந்ததை அறிந்து, பல்கலைக்கழக ஆட்சிக்குழுத் தீர்மானத்தின் அறிவுரையின்படியே நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல் களை வெளியே பகிர்ந்துகொள்ளக் கூடாது சுற்றறிக்கை வழங்கப்பட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
• மனதில் பட்டதை பேசினார்!
கும்பகோணம் திரு இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி பாதிரியார் குறித்து கடந்த 4.3.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'பலூன் விளையாட்டு, பாவ மன்னிப்பு’ என்ற செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரை குறித்து நமக்குக் கடிதம் எழுதி இருக்கும் பாதிரியார் அ.பிரான்சிஸ், 'பிப்ரவரி 20-ம் தேதி அன்று மாணவிகள் சாலை மறியல் செய்தனர். சிலருடைய தூண்டுதலினால், கல்லூரியின் இயக்குநர் மீது அபாண்டமான, எவ்வித அடிப்படையும் இல்லாத சில குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறிஉள்ளனர். அப்போதைய பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு மரிய பிரான்சிஸை பணியிடை நீக்கம் செய்து, மறைமாவட்ட நிர்வாகம் உத்தரவு இட்டது. பிறகு, மறைமாவட்ட ஆயர் மேற்கொண்ட விசாரணைக் குழு பரிந்துரைப்படி, பிப்ரவரி 25-ம் தேதி விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. குற்றம் சாட்டப் பட்டு உள்ள மரிய பிரான்சிஸ், இறைபக்தி மிகுந்த வர். ஜெப வாழ்வு வாழ்ந்து வருபவர். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பட்டென்று பேசு வார். இவரைப் பற்றிக் கூறி இருப்பவை எல்லாம், பிறரின் தூண்டுதலால்தான் நடந்து இருக்கிறது.
எங்களது வழிபாடு தொடங்கும் பொழுது ஆரம்பத் திலேயே இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற சடங்கு உள்ளது. இதன் அடிப்படையில்தான் பரமதந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிவருகிறோம்’ என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.