Published:Updated:

அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

ஈரோட்டில் வெடித்த இளங்கோவன்

அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

ஈரோட்டில் வெடித்த இளங்கோவன்

Published:Updated:
##~##
அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

'அமெரிக்காவிடம் ஆதாயம் பெற்றுக் கொண்டுதான் ஜெயலலிதா கூடங்குளம் அணு மின் திட்டத்தைத் தடுக்கிறார்’ என்று பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கடந்த 6-ம் தேதி ஈரோட்டில் மின்வெட்டைக் கண்டித்தும் கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில்தான் இப்படி ஓர் அணுகுண்டைத் தூக்கிப்போட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் பேசிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விடியல் சேகர், ''மிகவும் குறைந்தபட்ச செலவில் தயாரிக்க முடிவது அணு மின்சாரம் மட்டும்தான். தமிழகத்துக்கு தற்போது 2,500 மெகாவாட் மின்சாரப் பற்றாக்குறை இருக்கிறது. கூடங்குளத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். மின் பற்றாக்குறையால் ஈரோடு, திருப்பூர், கோவையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. தமிழக அரசு அமைத்த இனியன் குழு அறிக்கை கொடுத்துவிட்டது. ஆனாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் சங்கரன்கோவில் இடைத் தேர்தல்தான். தேர்தலுக்கு அடுத்த நாளாவது கூடங்குளத்தை அரசு திறக்க வேண்டும். அப்போதுதான் அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் நீங்கும்'' என்றார் வேகமாக.

அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

அடுத்துப் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, ''இரண்டு மணி நேரம் மின்வெட்டுக்காக தி.மு.க-வுக்கு மக்கள் தோல்வி தந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக 10 மணி நேரம் மின்வெட்டு. முதல்வர் தன் தேர்தல் அறிக்கையில் மூன்று மாதங்களில் மின்வெட்டை சரி செய்வேன் என்றார். ஆனால் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன் தமிழக டி.ஜி.பி-யை சந்தித்து உதய குமாரனைக் கைது செய்யச் சொல்லி வலியுறுத்தியுள்ளோம். இரண்டு வழக்குகள் இருந்தாலே கடுமையாக நடவடிக்கை எடுக்கும் காவல் துறை, 152 வழக்குகள் இருந்தும் உதயகுமார் விஷயத்தில் மௌனம் சாதிக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் பிரச்னையைப் பற்றி முதல்வரிடம் எடுத்துக்கூற அமைச்சர்களுக்குத் தெரிவதில்லை'' என்றார் காட்டமாக.

அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

அடுத்துப் பேசிய இளங்கோவன் பேச்சில் சென்சார் செய்யும் அளவுக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்.

அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

''கட்சி எதுவும் செய்யவில்லை என்றாலும் காங்கிரஸ்காரர்கள் உறுதியாக இருக் கிறார்கள். சில கட்சிகளில் சேர்ந்தால் தலைவரிடம் அடிவாங்கினாலும் சம்பாதிக்கலாம். நம்மைப் போல் எந்தக் கட்சியும் கிடையாது. குடும்பஸ்தர் ஆட்சியில்தான் மின்வெட்டு என்று, குடும்பம் இல்லாதவர் என்பதால் அம்மையாரை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். இவர் மின்வெட்டை எட்டு மணி நேரமாக உயர்த்திவிட்டார். ஆனால் போயஸ் கார்டனில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதால் அவருக்கு மக்களின் அவலங்கள் புரியவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வியால் நான்கு மாத காலம் மாணவர்களின் படிப்பு வீணாகியது. தற்போது படிக்க மின்சாரம் இல்லை. படிக்க மின்சாரம் தராத அரசு, தேர்வு எழுதுவதற்கு ஜெனரேட்டர்களைத் தருகிறது. இந்த முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 20 சதவிகித மதிப்பெண்கள் அதிகமாகத் தரவேண்டும். இல்லை என்றால் மாணவர்களைத் திரட்டி, போயஸ் கார்டனுக்கு வந்து முற்றுகையிடுவோம்.

அரசாங்கம் மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவச பொருட்களைத் தராமல் ஒவ்வொரு வீட்டுக்கும் 10 லிட்டர் டீசலும் ஜெனரேட் டரும் தந்தால் பாராட்டலாம். முதல்வர் பதவியேற்றதும் பிரதமரைச்

அமெரிக்காவின் கைக்கூலி ஜெயலலிதா...

சந்தித்து கொடுத்த இரண்டாவது கோரிக்கை, கூடங்குளத்தைச் செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இப்போது எப்படி மாறினீர்கள்? உதயகுமாரனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி உங்களைச் சந்தித்தார். அவர் ஒரு மாநில முதல்வரை சந்திக்கும் நடைமுறை கிடையாது. ஆனால் சந்திப்பு நடந்தது. ஹிலாரி வந்து சந்தித்த பின்புதான் முதல்வர் உதயகுமாரனை ஆதரிக்கிறார். அப்படியென் றால் உங்கள் இருவருக்கும் நடந்த ரகசிய ஒப்பந்தம் என்ன? உதயகுமாரன் தேசத் துரோகி என்றால் முதல்வரும் தேசத் துரோகிதான். அமெரிக்காவின் கைக் கூலியாக முதல்வர் இருக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

ரஷ்யாக்காரனுக்கு அறிவு இல்லை... 10 சதவிகித கமிஷனை முதல்வரிடம் கொடுத்து இருந்தால் இந்நேரம் கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்திருக்கும். முதல்வருக்கே மந்திரிகளை அடையாளம் தெரியாது. அமைச்சர்களிடம் மன்னர்,  'மாதம் மும்மாரி மழை பொழிந்ததா?’ என்று கேட்பதுபோல்தான் இன்றைய ஆட்சி நடக்கிறது. 152 வழக்கு உள்ள உதயகுமாரனைக் கைது செய்யவில்லை. ஆனால், போராட்டம் நடத்திய யுவராஜாவைக் கைது செய்தீர்கள். உங்கள் வாழ்க்கை லஞ்ச லாவண்யத்தில்தான் ஓடுகிறது'' என்று ஒரு பிடி பிடித்துவிட்டு அமர்ந்தார்.

                   - ம.சபரி

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism