Published:Updated:

அ.தி.மு.க. கோட்டை ஆகிறதா நீலகிரி?

விறுவிறு மாற்றங்கள்

அ.தி.மு.க. கோட்டை ஆகிறதா நீலகிரி?

விறுவிறு மாற்றங்கள்

Published:Updated:
##~##
அ.தி.மு.க. கோட்டை ஆகிறதா நீலகிரி?

ஜெயலலிதா அவ்வப்போது வந்து புத்துணர்ச்சி பெற்றுச் செல்லும் இடம்தான், கொடநாடு எஸ்டேட். ஆனால் இந்தப் பகுதியில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் செல்வாக்கு அதலபாதாளத்தில் கிடந்தது ஜெயலலிதாவுக்கு வருத்தமாகவே இருந்தது. இங்கு கட்சியை வளர்ப்பதற்காக ஜெயலலிதா எடுத்த பல முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், சமீபத்தில் உளவுத் துறை அனுப்பிய தகவல் ஜெயலலிதாவை உச்சி குளிர வைத்திருக்கிறதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீலகிரியில் என்னதான் நடக்கிறது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம். ''இந்த மாவட்டத்தில் எங்க கட்சி வளராமல் போனதுக்கு முக்கியக் காரணமே சரியான தலைமை இல்லாததுதான். சமீபத்தில் இறந்து போன செல்வராஜ் பதவியில் இருந்தபோது உயிரைக்கொடுத்து உழைத்தார். கட்சியையும் கட்டுக் கோப்பாக வைத்திருந்தார். ஆனால் அவரை ராவணனுக்குப் பிடிக்காமல் போனதால், அந்தப் பொறுப்பில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அந்த இடத்துக்கு வந்த புத்திசந்திரன் கட்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெடவில்லை.  சசிகலா கும்பல் களையெடுப்புக்குப் பிறகு, இப்போது மாவட்டச் செயலாளராகி இருக்கிறார் அர்ஜுனன். இவர் கட்சியை வளர்ப்பதற்காக ரொம்பவே பாடுபடுகிறார்.

அ.தி.மு.க. கோட்டை ஆகிறதா நீலகிரி?

பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் அ.தி.மு.க. ஊழியர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம்.  வாங்கி வெச்ச டீயைக் குடிக்கவும் ஆள் இருக்காது. ஆனால் இந்த முறை, இடம் கொள்ளாத அளவுக்கு ஆயிரக்கணக்கான ஆட்கள் வந்து குவிஞ் சுட்டாங்க.

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு தங்கத் தேர் இழுக்கிறேன், காவடி தூக்குறேன்னு பலரும் ஃபிலிம் காட்டினார்கள். ஆனால், நீலகிரி மாவட்ட அம்மா பேரவையினர் உருப்படியான காரியத்தைச் செய்தனர். திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு நிதிஉதவி, வறுமையில் வாடும் கழகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு நிதிஉதவி, புற்று நோயால் அவதிப்படும் அ.தி.மு.க-வின் தலைமைக் கழக பேச்சாளர் ஃபெலிக்ஸ் என்பவரின் சிகிச்சைக்கு நிதி உதவி கொடுத்திருக்காங்க. இது எல்லாமே உளவுத் துறை அனுப்பிய ரிப்போர்ட்டில் இடம் பெற்று இருப்பதால், அம்மா சந்தோஷமா இருக்காங்க'' என்றார்கள்.

கட்சியின் வளர்ச்சி குறித்து மாவட்டச் செயலாளர் அர்ஜுனனிடம் பேசினோம். ''நான் மாவட்டச் செயலாளர் என்பது கட்சிக்குத்தான். அம்மா முன்னிலையில நான் சாதாரண தொண்டன். இத்தனை நாளா நீலகிரி மாவட்டம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இனி இதை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக் காட்டுவதுதான் என்னுடைய வேலை. இதனை நாடாளுமன்ற தேர்தல் முடிவில் இருந்து அறிந்துகொள்ளலாம்'' என்று சொல்கிறார்.

அ.தி.மு.க-வின் அதிரடிக்கு, தி.மு.க. என்ன பதிலடி தரப்போகிறது?  

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism