Published:Updated:

கூடலூரில் நாணய மழை!

வித்தியாச விபத்து

கூடலூரில் நாணய மழை!

வித்தியாச விபத்து

Published:Updated:
##~##
கூடலூரில் நாணய மழை!

ற்றை நாணயம் கீழே கிடந்தாலே உடனே லபக்கிக் கொள்ளும் மனிதர்களைத்தான் கேள்விப் பட்டிருப்போம். லட்சக்கணக்கில் நாணயங்கள் இறைந்து கிடந்தாலும்... மக்கள், நிலை தடுமாறாத அதிசயம் கூடலூரில் நடந்திருக்கிறது.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிசர்வ் வங்கியில் தயாரிக்கப்படும் நாணயங்களை, தங்களது தேவைக்கு ஏற்ப வாங்கி உபயோகித்துக் கொள்வது வங்கிகளின் வழக்கம். இப்படித்தான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு வழங்குவதற்காக

கூடலூரில் நாணய மழை!

50 லட்சம் மதிப்பிலான நாணயங்கள் ஒரு தனியார் நிறுவன வேன் மூலமாக சென்னையில் இருந்து அனுப்பப்பட்டன. கடந்த 8-ம் தேதியன்று குன்னூர், கோத்தகிரி, ஊட்டி கிளைகளுக்குப் பட்டுவாடா செய்தது போக, மீதியிருந்த

கூடலூரில் நாணய மழை!

10 லட்சம் மதிப்பிலான நாணயங்களுடன் கூடலூர் கிளைக்குக் கிளம்பியது அந்த வேன்.

கூடலூரில் நாணய மழை!

கல்லட்டி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்த போது வேனின் பிரேக் திடீரென பழுதாகிவிட்டது. இடது புறம் பாதாளச் சரிவு என்பதால், வலதுபுற மலைச் சுவரில் தேய்த்து உரசி வண்டியை ஒருவழியாகக் கஷ்டப்பட்டு நிறுத்திவிட்டார் டிரைவர் ராமமூர்த்தி. கீழே இறங்கி பிரேக்கை சரி செய்து கொண்டிருந்த நேரத்தில், சரிவான சாலையில் தானாகவே விறுவிறுவென நகர்ந்திருக்கிறது வேன். பாய்ந்து சென்று அதை நிறுத்த ராமமூர்த்தி முயற்சி செய்தும் பலன் இல்லை. ஒரு மரத்தில் மோதி வேன் கவிழ்ந்த வேகத்தில், அதன் கதவுகள் திறந்துகொள்ள... சாக்கு மூட்டைகளில் இருந்த நாணயங்கள்

கூடலூரில் நாணய மழை!

மளமளவென கொட்டிவிட்டன. நாணய மழை பொழிந்தது போல் எங்கெங்கும் ஐந்து ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள். தகவல் அறிந்து மக்கள் ஓடிவந்தனர். இறைந்து கிடந்த நாணயங்களைப் பார்த்து முதலில் பிரமித்தவர்கள்... காயத்துடன் இருந்த டிரைவர் ராமமூர்த்தியைக் கண்டதும் மனம் மாறி, உதவத் தொடங்கிவிட்டார்கள்.  

சம்பவ இடத்தில் இருந்த சதீஸ், ''சிதறிக்கிடந்த நாணயங்களைப் பார்த் ததும் அசந்து போயிட்டோம். ஆனா டிரைவரும் அவர்கூட இருந்தவங்களும் அடிபட்டுப் புலம்புனதைப் பார்த்து, நாங்க மளமளன்னு நாணயங்களை எல்லாம் கலெக்ட் பண்ணி மூட்டையில் கட்ட ஆரம்பிச்சோம். விபத்து நடந்த கல்லட்டிப் பாதை, ரொம்பவே அபாயகரமான செங்குத் தான சாலை. பைக், கார்கள் மாதிரி யான வாகனங்களுக்குத்தான் அனுமதி. அதுவும் கொண்டை ஊசி வளைவுகள்ல செகண்ட் கியர்ல மட்டும்தான் போகணும்னு திருப்பத்துக்குத் திருப்பம் எச்சரிக்கை போர்டு இருக்குது. ஆனாலும் இந்தப் பாதையில் கனரக வாகனங்கள் கன்னாபின்னான்னு போயிட்டு வந்துட்டுத்தான் இருக்கு. அதனால் நாங்க இங்கே நிறைய விபத்துகளைப் பார்த்திருக்கோம். ஆனா இது ரொம்ப வித்தியாசமான அனுபவம். நாணயங்களை நாங்க அள்ளிக்கிட்டு இருந்தப்ப, அந்தப் பக்கமா வந்த சில குரங்குகளும் எடுத்துட்டு ஓடினதுதான் வேடிக்கை. பிறகு அதைத் துரத்தி, மிரட்டி, கெஞ்சி காசைப் போட வெச்சோம்'' என்று பரவசமாக விவரிக்கிறார்.

விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத ராமமூர்த்தி, மக்களின் உதவியைச் சொல்லி நெகிழ்ந்து போகிறார்.

நாணய விஷயத்தில் நாணயமாக நடந்து கொண்ட மக்களைப் பாராட்டுவோம்!

- எஸ்.ஷக்தி

படம்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism