Published:Updated:

குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

கொந்தளிக்கும் அம்பத்தூர் விளையாட்டுத் திடல் விவகாரம்

குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

கொந்தளிக்கும் அம்பத்தூர் விளையாட்டுத் திடல் விவகாரம்

Published:Updated:
##~##
குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

'அம்பத்தூர் ஏரி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடுவே இருக்கிறது, அம்பத்தூர் விளையாட்டுத் திடல். இந்த விளையாட்டுத் திடலை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்பத்தூர் பகுதி மக்களை சந்தித்தோம்.  ''இங்கே இருக்கும் டி.ஐ. சைக்கிள் நிறுவனத்துக்கு 1949-ம் ஆண்டு 30 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு அரசால் கொடுக்கப்பட்டது. இது தொழி லாளர்களின் விளையாட்டுப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட இடம். ஆனால், இந்த இடத்தை சைக்கிள் நிறுவனம் உபயோகம் செய்யாததால், பொதுமக்களின் விளையாட்டுத் திடலாக இருந்து வந்தது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கே வந்து விளையாடி, உடற்பயிற்சியும் செய் கிறார்கள். இந்த நிலையில், அம்பத்தூர் வட்டாட் சியர் அலுவலகம் கட்டுவதற்காக, அந்த இடத்தை அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து அந்தப் பகுதியின் வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார்.

குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

'விளையாட்டுத் திடலாகத்தான் அது பயன்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் மக்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்தி வந்தார்கள். இப்போது, சைக்கிள் நிறுவனத்திடம் இருந்து ரயில்வே நலச்சங்கம் விளையாட்டுத் திடலை விலைக்கு வாங்கியிருப்பதாகச் சொல் கிறார்கள்.

இந்த விளையாட்டுத் திடலில் 154 குடியிருப்புகள் கட்டுவதற்காக சி.எம்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கி இருக் கிறார்கள். 'இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது’ என்று ரயில்வே அமைச்சகம் பெயரில் அறிவிப்புப் பலகையும் வைத்திருக்கிறார்கள். மக்கள் பயன்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடலைத் தங்கள் சொத்தாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முயன்று வருகிறது.

இந்த முறை கேட்டுக்குச் சென்னை மாநகராட்சி யும் அங்கீகாரம் அளித்துள்ளது. அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகமும் இந்த விதிமீறலுக்குத் துணை போயி ருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, அதைக் கொடுக்க மறுக்கிறார்கள்.

ஏரிக்கரையில் குடியிருப்புகள் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ. எப்படி அனுமதி அளித்தது என்று புரியவில்லை. இந்திய ரயில்வே நலச் சங்கம் ஆக்கிரமித்து இருக்கும் இடத்தின் முன்பகுதியிலும் விளையாட்டுத்

குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

திடல்தான் உள்ளது. இந்த முன் பகுதியைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஆனால், சி.எம்.டி.ஏ.விடம் அனு மதி வாங்கிய போது, விளையாட்டுத் திடலின் பகுதியைத்தான் வழியாக காட்டியிருக்கிறார்கள். அதாவது வழியே இல்லாத இடத்தில் எப்படி குடி யிருப்புகள் கட்ட சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத் தது?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அம்பத்தூர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் மேலை நாசரிடம் பேசினோம். ''60 ஆண்டுகளுக்கு மேல் சோலைவனமாகக் காட்சி அளித்த விளையாட்டுத் திடல், இப்போது மொட்டையாகக் கிடக்கிறது. இங்கே இருந்த மரங்கள் எல்லாம் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன. இந்த விளையாட்டுத் திடலில் கேலரி ஒன்றும் இருந்தது. முன்னாள் சட்ட அமைச்சர் மாதவனால் திறந்து வைக்கப்பட்ட இந்த அரங்கத்தைத்தான், விளையாட்டு வீரர்கள் ஓய்வு எடுக்கவும் உடைகளை மாற்றவும் பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டுவிட்டது. இதை எதி ர்த்து இரண்டு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். குடியிருப்புகள் கட்டப்பட்டால் அம்பத்தூர் ஏரி மாசுபடும் ஆபத்தும் இருக்கிறது. இந்த விளையாட்டுத் திடல் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1949-ம் ஆண்டில் இருந்து நடந்த ஒப்பந்த விவ காரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்தப் பிரச்னை தொடர்பாக டெல்லி சென்று ரயில்வே அமைச்சகத்திடமும் முறையிட முடிவு செய்து இருக்கிறோம்'' என்றார்  

குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா?

இதுதொடர்பாக, டி.ஐ. நிறுவனத்தின் தரப்பில் பலரையும் தொடர்பு கொண்டோம். யாரும் நம்மிடம் தகவல் தெரிவிக்கவும் உரிய பதில் சொல்ல வும் தயாராக இல்லை.

இதுகுறித்து, அம்பத்தூர் தாசில்தார் ராஜூவிடம் பேசினோம். ''காலியாக இருந்த இடத்தைத்தான் விளையாட்டுத் திடலாக மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். அந்த நிலம் டி.ஐ. நிறுவனத்தின் பட்டா நிலம்தான். அது தொடர்பான ஆவணங்களை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து ரயில்வே நலச்சங்கத்துக்கு நிலம் விற்கப்பட்டுள்ளது. ஆனால், போராட்டம் நடத்திய பொதுமக்கள் டி.ஐ. நிறுவனத்துக்கு விளையாட்டுத் திடல் குத்தகைக்கு விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதுதொடர்பான ஆவணங்களைத் தரும்படி கேட்டிருக்கிறோம். அதைப் பார்த்தபிறகு முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

விளையாட்டுத் திடலில் இப்படி ஒரு விளை யாட்டா?

- எம். பரக்கத் அலி

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism