Published:Updated:

மிஸ்டு கால் திருடன்...

தொடரும் வேலூர் கொள்ளை

மிஸ்டு கால் திருடன்...

தொடரும் வேலூர் கொள்ளை

Published:Updated:
##~##
மிஸ்டு கால் திருடன்...

செல்போன் மற்றும் நகை அடகுக் கடைகளில் கொள்ளை. வாணியம் பாடியில் ஒரு நகைக் கடையில் கொள்ளை. வேலூர் லாங்பஜார் மார்க்கெட் நகைக்கடையில் கொள்ளை. ஓய்வு பெற்ற போலீஸ்  வீட்டில் கொள்ளை. இதை எல்லாம் போலீஸ் கண்டுகொள்ளாமல் போகவே, இப்போது  எம்.எல்.ஏ. வீட்டிலேயே கொள்ளையர், கைவரிசையைக் காட்டி விட்டார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 12-ம் தேதி, தனது வீட்டில் நடந்ததை விவரிக்கிறார் குடியாத்தம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ-வான லிங்கமுத்து. ''பொதுக்கூட்டம் முடிஞ்சு ராத்திரி வீட்டுக்கு வந்தப்போ ஒரு மணி. காலையில இருந்து ஓய்வில்லாம சுத்திக்கிட்டே இருந்ததால, உடம்பு ரொம்பவும் அசதியா இருந்துச்சு. படு த்ததுதான் தெரியும். நல்லாத் தூங்கிட்டேன். என் னோட பொண்ணு பக்கத்து ரூம்ல தூங்கிட்டு இருந்தா. வெயில் காலமா இருக்கிறதால வீட்டுக் கதவை பெரும்பாலும் மூட மாட்டோம். இந்த விஷயம் திருடனுங்களுக்கு எப்படித் தெரிஞ்சதோ...

மிஸ்டு கால் திருடன்...

சத்தமில்லாம உள்ளே வந்திருக்கானுங்க.

பீரோவைப் பூட்டுற பழக்கமும் கிடையாது. அதுல ஏதாவது இருந்தாத்தானே பூட்டி வைக் கிறதுக்கு. அதைக் குடைஞ்சி பார்த்துட்டு ஒண்ணும் இல்லைன்னதும், என் பெண்ணோட ரூமுக்குப் போயிருக்காங்க. ரூம்ல இருந்த அவளோட சூட் கேஸைத் திறந்து பார்த்திருக்காங்க. சத்தம் கேட்டு முழிச்ச என்பொண்ணு, 'யாரு... யாரு...’ன்னு கத்தி இருக்கா. உடனே, 'சத்தம் போடாதே... நான் திருடன்’ன்னு மிரட்டி இருக்கான். பயத்துல என் பொண்ணு கத்தவும், நானும் முழுச்சிக்கிட்டேன். என்னன்ணு புரியாம எழுந்துபோய் என் ரூம் கதவைத் திறந்தா, அது வெளியில பூட்டி இருக்கு. 'திருடன் வந்திருக்கான்.. திருடன்’ன்னு நானும் கத்தினேன். அக்கம் பக்கத்து வீட்டுல இருந்தவங்க எல்லாரும் ஓடிவந்தாங்க. ஆனா அதுக்குள்ள திருட வந்தவங்க பக்கத்துல இருந்த கரும்புத் தோட்டத்துக்குள்ள

மிஸ்டு கால் திருடன்...

புகுந்து தப்பிச்சிட்டாங்க. வீட்டுல எந்தப் பொருளும் திருட்டு போகலைன்னு நிம்மதிப் பெருமூச்சு விட்டுட்டு, போலீஸுக்குத் தகவல் சொல்றதுக்கு என் செல்போனைத் தேடினேன். அதை மட்டும் காணோம்.

திருட வந்தவனுக்கு கண்டிப்பா எங்க குடும்பத்தைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கணும். ராத்திரியில நாங்க வீட்டை பூட்டிப் படுக்க மாட்டோம்னு தெரிஞ்சி வச்சிருக்கான். எங்க வீட்டுல பெருசா எதுவும் இருக்காது. ஆனா போன வாரம் என் சொந்தக்காரர் ஒருத்தர் கவர்மென்ட் வேலையில் இருந்து ரிட்டையர்ட் ஆனார். அப்போ அவருக்கு வந்த பணத்தை என்கிட்ட கொடுத்து வச்சிருப்பாருன்னு நினைச்சி த்தான் திருட வந்திருக்கணும். ஆனா, அவர் அந்தப் பணத்தை என்கிட்ட கொடுக்கலைங்க.

திருடிட்டுப் போனவன் என் செல்போனை எடுத்து அழுத்தி இருக்கான். அது எங்க கட்சித் தோழர்

மிஸ்டு கால் திருடன்...

ஒருத்தருக்குப் போயிடுச்சி. உடனே கட் பண்ணிட்டான். 'எதுக்கு எம்.எல்.ஏ. இந்த நேரத்துல மிஸ்டு கால் கொடுக்குறாருன்னு அவரும் உடனே திருப்பிக் கூப்பிட்டு இருக்கார். போனை எடுத்த திருடன், 'கொஞ்சம் வேலையா இருக்கேன். அப்புறம் பேசுங்க’ன்னு சொல்லி போனைக் கட் செஞ்சி, ஆஃப் பண்ணிட்டான். குழம்பிப் போன எங்கக் கட்சி தோழர் திரும்பவும் போன் பண்ணிப் பார்த்திருக்கார். போன் ஆஃப் ஆனதால் சந்தேகம் வந்திருக்கு. உடனே நான் ஏதோ பிரச்னையில் மாட்டிக்கிட்டேன்னு நினைச்சி, இங்கே ஊருல இருக்கும் எங்க கட்சிக்காரங்களுக்குத் தகவல் சொல்லிட்டார். விடியக்காலையி லேயே பலர் பதறி அடிச் சிட்டு என் வீட்டுக்கு ஓடி வந்

த £ங்க. விஷயத்தைச் சொல்லவும், கரும்புத் தோட்டம் முழுக்கவும் தேடிப் பார்த்தாங்க. ஆள் கிடைக்கல. எவ்வளவு புழுக்கமா இருந்தாலும் இனி கதவைத் தாழ்ப் பாள் போட்டுத்தான் தூங்கணும்னு முடிவு பண் ணிட்டேன். அநியாயமா என்னோட செல்போனைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. எல்லா போன் நம்பரையும் அதுலதான் பதிவு செய்து வச்சிருந்தேன்'' என்று வருத்தப் பட்டார்.

எம்.எல்.ஏ. வீட்டுக்கு வந்து ஆய்வு செய்த குடியாத்தம் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். வழக்கை விசா ரிக்கும் டி.எஸ்.பி. சுந்தரத்திடம் பேசினோம். ''திருட வந்தவனோட கைரேகைகள் சிக்கி இருக்கு. அதை வச்சுக் குற்றவாளியைத் தேடிட்டு இருக்கோம். செல்போனை மட்டும் திருடி இருக்கான்னா... அதுல வேற ஏதாவது மோட்டிவ் இருக்கான்னும் விசாரிச்சிட்டு இருக்கோம்...'' என்று சொன்னார்.

விசாரிச்சது போதும், புடிங்க ஸாரே!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism