Published:Updated:

ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்!

அதிரவைத்த வேலூர் காதல்

ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்!

அதிரவைத்த வேலூர் காதல்

Published:Updated:
##~##
ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள தம்பிக்கொள்ளை கிராமத் தில் வசித்தவர்கள் விக்னேஷ் மற்றும் ஏஞ்சல். விக்னேஷ§க்கு 18 வயது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏஞ்சலுக்கு வயது 17. இரண்டும்கெட்டான் வயதில் எல்லோருக்கும் வரும் காதல் இவர்களுக்கும் வர, பெற்றோர் கண்டித்தனர். 'வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வது; இல்லை எனில் ஒன்றாகச் சாவது’ என்று இருவரும் சேர் ந்து முடிவு எடுத்த பிறகு நடந்ததுதான் நெஞ்சை உலுக்கும் சோகம்!  

தம்பிக்கொள்ளை கிராமத்துக்குச் சென்றோம். ஏஞ்சல் வீட்டில் எதுவும் பேச மறுத்து விட்டனர். மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் அழுது கொண்டே இருந்த விக்னேஷின் அம்மாவான கோவிந்தம்மாள், ''நாங்க கூலித்தொழிலாளிங்க. எங்களுக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. பொண்ணுதான் பெரியவ. லெதர் ஃபேக்டரியில வேலை பார்க்கிறா. கடைசிப் பையன் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ரெண்டாவதாப் பொறந்தவன்தான் விக்னேஷ். மூணு வருஷமா ஒழுங்காத்தான் வேலைக்குப் போய்கிட்டு இருந்தான்.

ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்!

அரசல் புரசலா என் பையன் அந்தப் பொண்ணை விரும்புறான்னு தெரிய வந்துச்சு. 'இந்த வயசுல இதெல்லாம் தேவையா?’னு நானும் அவன்கிட்ட கேட்டேன். இதுநாள் வரைக்கும் அந்தப் பொண்ணை

ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்!

நானும், என் வீட்டுக் காரரும் பார்த்ததுகூட இல்லைங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அந்தப் பொண்ணு வீட்டுல இருந்து சில பேர் வந்தாங்க. 'உன் பையனை அடக்கி வை. இல்லைன்னா நல்லா இருக்காது’ன்னு சத்தம் போட்டாங்க.

அதனால என் பையன்கிட்ட, 'தம்பி, இது கல்யாணம் பண்ணிக்கிற வயசு இல்லை. ஒழுங்கா வேலைக்குப் போயி ட்டு வா. கொஞ்ச காலம் போகட்டும். அடுத்தவாரம் மாப்பிள்ளை வீட்டுக்கா ரங்க உங்க அக்காவைப் பொண்ணுப் பார்க்க வர்றாங்க. இந்த சமயத்துல நீ ஒரு பொண்ணை திடீர்ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டா, அப்புறம் உங்க அக்கா வாழ்க்கையே கெட்டுப் போயிடும்’னு அவனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். 'எனக்கு

ஏஞ்சல்தான் முக்கியம். என்னைப் பத்தி யாரும் கவலைப்ப டாதீங்க’ன்னு சொல்லி ட்டான். எனக்கு என்ன பண்றதுன்னே புரி யலை.

இதுக்கு நடுவுல அந்தப் பொண்ணு வீட்டுலயும் அவளைக் கண்டிச்சு அடிச்சிருக்காங்க. அதனால ரெண்டு பேரும் ஏதோ முடிவு பண்ணி போன 4-ம் தேதி வீட்டை விட்டு ஓடிப் போயிட்டாங்க. அடுத்த நாள் காலையில் சில பசங்க வந்து, 'அம்மா, நம்ம பக்கத்து கரட்டுல விக்னேஷ§ம் ஏஞ்சலும் விஷம் குடிச்சுட்டு விழுந்து இருந்தாங்களாம். அங்க இருந்து தூக்கிட்டு வர்றாங்க’ன்னு சொன்னாங்க. எனக்குத் தலையில் இடி விழுந்தது மாதிரி இருந்துச்சு. அரை மயக்கத்துல என் பையனைக் கொண்டு வந் தாங்க.

ஏஞ்சலுக்கு அரளி... விக்னேஷுக்குத் தண்டவாளம்!

பின்னாடியே உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பொண்ணையும் தூக்கிட்டு வந்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து அரளி விதையை அரைச்சுக் குடிச்சு இருக்காங்க. அப்பத்தான் அந்தப் பொண்ணை முதல் முறையா பார்த்தேன். என் கண்ணு முன்னாடியே அந்தப் பொண்ணு செத்துப் போச்சுங்க.

விக்னேஷை ஆம்பூர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அந்த நிலையிலேயும் அந்தப் பொண்ணு பேரையே சொல்லிக்கிட்டு இருந்தான். நாங்க அந்தப் பொண்ணு இறந்த விஷயத்தை அவன்கிட்டச் சொல்லலை. அன்னிக்கு நைட்டு 8 மணி இருக்கும். ஏதாவது அவனுக்குச் சாப்பிட வாங்கி வரலாம்னு நானும் என் வீட்டுக்காரரும் வெளியே போயிட்டோம். அப்ப மயக்கம் தெளிஞ்சு எழுந்த அவன், பக்கத்துல இருக்கிற நர்ஸ்கிட்ட விசாரிச்சு இருக்கான். அவங்க பொண்ணு அப்பவே இறந்து போச்சுன்னு சொல்லி இருக்காங்க. அந்த நேரம் பார்த்து கரன்ட் போயிடுச்சு. நாங்க வந்து பார்க்கும்போது அவனைக் காணலை. அப்புறமா ஆஸ்பத்திரிக்குப் பின்னாடி இருக்குற ரயில் தண்டவாளத்துல பொணமாத்தான் அவனைக் கண்டு பிடிச்சாங்க. காதலிச்ச பொண்ணு செத்துப் போச்சுன்னு தெரிஞ்ச உடனே, தண்டவாளத்துல தலைவெச்சுப் படுத்து உசுரை விட்டுட்டான்.

கொஞ்ச நாள் பொறுத்திருந்தா என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டு, ஏஞ்சல் வீட்டுல போய் பேசி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே... இப்படி ரெண்டு பேரும் விவரம் புரியாம தங்களோட வாழ்க்கையை அழிச்சுக் கிட்டாங்களே. இனிமே நான் என்ன பண்ணுவேன் சாமி!'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

விக்னேஷின் நண்பர்களிடம் விசாரித்தோம். ''அவனுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஒழுங்கா வேலைக்குப் போவான். அந்தப் பொண்ணை அதிகமா விரும்பினான். காதல்ன்னா பெத்தவங்க எதிர்க்கத்தான் செய்வாங்க. எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா... இப்படி ஒரு முடிவு எடுக்க விட்டிருக்க மாட்டோம். அவசரமாக் காதலிச்சாங்க. அவசரமா முடிவைத் தேடிக்கிட்டாங்க...'' என்று வருத்தப்பட்டார்கள்.

'காதல் என்பது நம்பிக்கையை விதைக்கவேண்டும், அவநம்பிக்கையை அல்ல...’ என்பதை இதுபோன்ற இளசுகளுக்கு எடுத்துச் சொல்வது யார்?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism