Published:Updated:

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

Published:Updated:
##~##
திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

மிழ்நாடு முழுவதும் கொள்ளையும் வழிப்பறியும் அதிகரித்துவரும் நிலையில், அந்த அவப்பெயரை நீக்குவதற்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கி யுள்ளது காவல்துறை. இதில் ஒரு கட்டமாக ஈரோ ட்டைச் சேர்ந்த ரவுடி 'ஸ்டீல்’ ரவியும் அவருடைய கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டு உள் ளனர். யார் இந்த 'ஸ்டீல்’ ரவி? எதற்காக இப்போது கைது செய்யப்பட்டார்? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ''90-களில் ஈரோட்டில் சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவி, தன் தந்தை நடத்தி வந்த இரும்புக் கடையைக் கவனித்து வந்ததால், 'ஸ்டீல்’ ரவி என்று அழைக்கப்பட்டான். ஈரோட்டைச் சேர்ந்த பிரபலதாதா தம்பா, (இயக்குநர் ஷங்கர் இவருக்குத்தான் தன் முதல் படத்தை இயக்குவதாக இருந்தது) 91-ம் ஆண்டு சினிமா எடுக்கச் சென்னை வந்தபோது, தொழில் போட்டியின் காரணமாக அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் ரவி. அப்போது, ரவிக்கு ஆதரவாக இருந்தவர், அ.தி.மு.க-வின் மாஜி ஒருவர். அந்தக் கொலை வழக்கில் இருந்து விடுதலை ஆனதும், தம்பாவின் முக்கியக் கூட்டாளியான பூபதியையும்

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

ஒழித்துக் கட்டினார். அதன்பிறகு, ஈரோட்டில் யாரும் ரவிக்குப் போட்டியாக வரவில்லை. அதனால் குளிர் விட்டுப்போன ரவியும் அவருடைய நண்பர் ஜங்ஷன் கார்த்தியும் சேர்ந்து சூரம்பட்டியில் 94-ம் ஆண்டு இரண்டு பேரைக்  கொலை செய்தனர். இவர்கள் இருவரது பெயரும் ரமேஷ். இதில் ரவிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.  குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார்.

ஜாமீனில் வந்த ரவியுடன், ரோஜா வெங்கடேஷ், ரோஜா சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து கொண் டனர். இவர்கள் டைகர் ராஜா என்ற ரவுடியைக் குறிவைத்தனர். ராஜா கிடைக்காததால் அவ ருடைய அப்பாவைக் கொன்றதோடு அவரின் நண்பரான டைலர் பார்த்திபனைக் கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றனர். அதில், அதிர்ஷ்டவசமாக பார்த்திபன் தப்பினார். இதன்பிறகு, பள்ளிப்பாளையத்தில் ராஜவேல் என்ற தி.மு.க. பிரமுகரைத் துண்டுத் துண்டாக வெட்டி எறிந்தனர்.

அதனால், தேடப்படும் குற்றவாளியாக அறி விக்கப்பட்ட

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

ரவியை, கடந்த 2000-ம் ஆண்டு சித்தோடு அருகே பதுங்கி இருந்த நேரத்தில் இன்ஸ் பெக்டர்கள் ராஜா (இப்போது இவர் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறார்), ஜெயச்சந்திரன், பேச்சிமுத்துப் பாண்டியன் (இருவரும் டி.எஸ்.பி-யாக உள்ளனர்) ஆகியோர் பிடிக்கச் சென்றனர். ஆனால், மூவரையும் அரிவாளால் வெட்டித் தப்பிக்க முயன்ற போது, போலீஸாரால் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார் ரவி.

பார்த்திபன் கொலைமுயற்சி வழக்கு, ஒரு வழிப்பறி வழக்கு, ராஜவேலைக் கொன்ற வழக்கு, போலீஸாரை வெட்டிய வழக்கு போன்றவற்றில் ரவிக்கு 37 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. சிறையில் இருந்த போது ரவிக்கு, தமிழ்நாடு முழுக்க உள்ள தாதாக்களுடன் தொடர்பு ஏற்படவே, தனது சாம்ராஜ்யத்தை விரித்தார். சிறையில் இருந்தபடியே ஈரோட்டைச் சேர்ந்த கேபிள் சங்கர்,  திருச்சியைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோரை அடியாட்கள் மூலம் கொலை செய்தார். இதேநேரம் உயர் நீதி மன்றத்தில் தன்னுடைய தண்டனையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில், 11 ஆண்டுகளாகத் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்தபோதே தனக்கு அரசியல் பாதுகாப்புத் தேவை என்று நினைத்த ரவி, வன்னியர்

திகில் கொலைகள்... சிக்கிய 'ஸ்டீல்' ரவி

சங்கத்தில் சேர்ந்து காடுவெட்டி குரு தலைமையில் பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். விடுதலைக்குப் பிறகு, வக்கீல் ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஈரோட்டில் உள்ள ஹோட்டலை அடித்து நொறுக்கினார். அந்த ஹோட்டலின் முதலாளியான ரமேஷைக் கொல்ல முயற்சிக்க, அவர் எப்படியோ தப்பிவிட்டார். இதுஎல்லாமே ஹோட்டலில் இருந்த கேமராவில் பதிவானதால், தலைமறைவானார் ரவி. உயிர் தப்பிய ரமேஷ§டன் சமாதானமாகப் போய்விட்டால் கேஸில் இருந்து வெளியே வந்து விடலாம் என்ற நம்பிக் கையில், தன் நண்பர் ஜங்ஷன் கார்த்தியிடம் தூது போகு மாறு கேட்டுள்ளார். அதற்கு சம்மதிக்கவில்லை என்றதும், கடந்த ஜனவரி 2-ம் தேதி கார்த்தியையும் கொலை செய்தார். கடந்த மாதம், தேனியில் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் ரவிக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. திருந்தி வாழ்கிறேன் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் ரவி அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதால் இப்போது கைது செய்துள்ளோம்'' என்று சொல்லி கிறுகிறுக்க வைத்தனர் போலீஸார்.

ஆனால், 'ஸ்டீல்’ ரவியின் நட்பு வட்டாரமோ, ''இவை எல்லாமே போலீஸின் பொய் வழக்குகள். திருந்தி வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்'' என்கிறது.

இதுகுறித்து, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், ''இப்போது, ரவி மீது இருக்கும் இரண்டு வழக்குகளும் மிகவும் வலிமையானவை. ஹோட்டல் வழக்கில் அவர் செய்தது அனைத்தும் கேமராவில் பதிவு ஆகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், ஜங்ஷன் கார்த்தி கொலை வழக்கில் கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சியாக, அவரின் மனைவி இருக்கிறார். அதனால், இரண்டு வழக்கிலும் கடுமையான தண்டனை கிடைக்கும்'' என்றார்.

அப்படின்னா மீண்டும் தடுப்புச் குண்டர் சட்டமா?

- தமிழ்வேந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism